பள்ளி விடுமுறைக்காலத்தில் குடும்பத்துடன் ஈடுபடக்கூடிய சில நடவடிக்கைகள்

இந்த வாரம் பள்ளி விடு­மு­றைக்­கா­லம் என்­ப­தால் சிங்­கப்­பூ­ரில் அண்­மை­யில் திறக்கப்­பட்ட, சிறாரை ஈர்க்­கும் சில இடங்­களில் குறைந்த செல­வில் குடும்­பத்­து­டன் நட­வடிக்­கை­களில் ஈடு­ப­டு­வது குறித்­துப் பெற்­றோர் திட்­ட­மி­ட­லாம்.

பாசிர் ரிஸ் ரோட்­டில் உள்ள 'ஹெரி­டேஜ் ஷேலே'யில் அமைக்­கப்­பட்­டுள்­ளது 'ஸ்கிம் ஏலி'. காலை 10 மணி முதல் இரவு 10 மணி­வரை 'ஸ்கிம் போர்­டிங்' எனப்­படும் அலை­யா­டல், உரு­ளைச் சறுக்கு, பனிச் சறுக்கு ஆகி­ய­வற்­றின் கல­வை­யான புது­வகை விளை­யாட்­டில் ஈடு­ப­ட­லாம்.

பயிற்­று­விப்­பா­ள­ரி­டம் கற்­றுக்­கொள்ள ஒரு மணி நேரத்­திற்கு $40 கட்­ட­ணம்; தனி­யா­கப் பயிற்சி செய்­யக் கட்­ட­ணம் $28.

குட்­மன் கலை நிலை­யத்­தில் 'மசாக் மசாக்' எனும் நிகழ்ச்சி புதன் முதல் ஞாயிறு வரை நடை­பெ­றும். சிறு­வர்­கள் 75 நிமிடங்­களுக்கு உண­வுக்­கடை உரி­மை­யா­ளர்­க­ளாக பாவனை செய்­ய­லாம். அனு­மதி இல­வ­சம். வைப்­புத்­தொகை­யா­கச் செலுத்­தப்­படும் $15 பின்­னர் திருப்­பித் தரப்­படும்.

சிங்­கப்­பூ­ரில் பிறந்த 'லெலெ' ராட்­சத பாண்­டாக் குட்­டி­யின் முதல் பிறந்­த­நா­ளுக்­கான கொண்­டாட்ட நிகழ்ச்­சி­க­ளின் ஓர் அங்­க­மான 'பாண்டா-ஸ்டிக் பார்ட்டி' எனும் நிகழ்ச்­சி­யில் பெரி­ய­வர்­கள் 20 வெள்­ளி­யும் சிறார் 14 வெள்­ளி­யும் செலுத்­திக் கலந்­து­கொள்­ளலாம். சுவா சூ காங் அவென்யூ 4ல் உள்ள 'அரினா @ கியட் ஹாங்' விளை­யாட்­டுத் திட­லில் 24 மணி நேர­மும் விளை­யா­டக் கட்­ட­ணம் ஏது­மில்லை.

வர­லாற்­றுச் சிறப்பு மிக்க புக்­கிட் தீமா ரயில் நிலை­யம் எந்­நே­ர­மும் திறந்­தி­ருக்­கும். இங்கு இருக்­கும் மர­பு­டை­மைக் காட்­சிக்­கூ­டத்தை இல­வ­ச­மா­கப் பிள்­ளை­க­ளுக்­குக் காட்­ட­லாம். இங்­குள்ள உண­வ­கம் காலை 9 மணி­யில் இருந்து இரவு 9 மணி வரை இயங்­கும்.

தோ பாயோ லோரோங் 2ல் அமைந்­தி­ருக்­கும் 'பிளே @ ஹைட்ஸ் பார்க்' விளை­யாட்­டுத் திடல் எப்­போ­தும் திறந்­தி­ருக்­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!