தொடரும் ஹாலண்டின் கோல் வேட்டை

செவில் (ஸ்பெ­யின்): தற்­போ­தைய ஐரோப்­பிய காற்­பந்­துப் பரு­வம் கால் கட்­டத்­தைக்­கூட எட்டாத நிலை­யில் 12 கோல்­க­ளைக் குவித்­துள்­ளார் இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் குழு­வான மான்­செஸ்­டர் சிட்டி வீரர் எர்­லிங் ஹாலண்ட்.

சிங்­கப்­பூர் நேரப்­படி நேற்று முன்­தி­ன பின்­னி­ரவு ஐரோப்­பிய சாம்­பி­யன்ஸ் லீக் போட்­டி­யின் 'ஜி' பிரிவு ஆட்­டத்­தில் ஸ்பெ­யி­னின் செவி­யாவை 4-0 எனும் கோல் கணக்­கில் வீழ்த்­தி­யது சிட்டி. இந்த ஆட்­டத்­தில் இரண்டு கோல்­க­ளைப் போட்­டார் ஹாலண்ட்.

சிட்­டி­யின் இதர இரண்டு கோல்­க­ளைப் போட்­ட­வர்­கள் ஃபில் ஃபோடன், ரூபன் டியாஸ்.

கடந்த சில ஆண்­டு­க­ளாக சிறப்­பாக விளை­யா­டி­வந்த செவியா இந்­தப் பரு­வத்­தில் சிர­மப்­பட்டு வந்­துள்­ளது. பிரி­மி­யர் லீக்­கில் சிறப்­பாக ஆடி­வந்­தா­லும் சிட்டி இது­வரை சாம்­பி­யன்ஸ் லீக்கை வெல்­ல­வில்லை.

இந்­தப் பரு­வத்­தில் அந்­தக் குறை­யைத் தீர்த்து வைப்­பது சிட்டி­யின் இலக்கு.

'ஹெச்' பிரி­வில் இத்­தா­லி­யின் யுவென்­டஸ் குழுவை 2-1 எனும் கோல் கணக்­கில் வென்­றது பிரான்­சின் பாரிஸ் செயின்ட் ஜெர்­மைன். பிஎஸ்­ஜி­யின் இரண்டு கோல்­க­ளை­யும் போட்­ட­வர் நட்­சத்­தி­ரம் கிலி­யோன் இம்­பாப்பே.

'எஃப்' பிரி­வில் சாம்­பி­யன்ஸ் லீக் நடப்பு வெற்­றி­யா­ளர் குழு­வான ஸ்பெ­யி­னின் ரியால் மட்­ரிட், ஸ்காட்­லாந்­தின் செல்­டிக்கை 3-0 எனும் கோல் கணக்­கில் வென்றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!