இந்தியாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இலங்கை

துபாய்: ஆசிய கிண்ண கிரிக்­கெட் போட்­டி­யில் எட்டு ஆண்­டு­களில் முதன்­மு­றை­யாக அடுத்­த­டுத்த இரு ஆட்­டங்­களில் தோல்­வி­ய­டைந்­துள்­ளது இந்­தியா. இவ்­வாண்­டுப் போட்­டி­யின் 'சூப்­பர் 4' ஆட்­டத்­தில் ஆறு விக்­கெட் வித்­தி­யா­சத்­தில் இந்­தி­யாவை வென்­றுள்­ளது இலங்கை.

இதற்கு முந்­தைய ஆட்­டத்­தில் பாகிஸ்­தா­னி­ட­மும் தோல்­வி­ய­டைந்­தது இந்­தியா.

இந்த 20 ஓவர்­போட்­டி­யின் ஆட்­டத்­தில் முத­லில் பந்­த­டித்த இந்­தியா எட்டு விக்­கெட் இழப்­பிற்கு 173 ஓட்­டங்­களை எடுத்­தது. 19.5 ஓவர்­களில் நான்கு விக்­கெட் இழப்­பிற்கு 174 ஓட்­டங்­களை எடுத்து ஆட்­டத்தை வெல்­வ­தற்­கான இலக்கை அடைந்­தது இலங்கை.

ஆட்­டத்­தில் இலங்­கைக்கு ஆக அதிக ஓட்­டங்­களை எடுத்­தார் குசால் மெண்­டிஸ். அவர் 57 ஓட்­டங்­களை எடுத்­தார்.

முன்­ன­தாக 41 பந்­து­களில் 72 ஓட்­டங்­க­ளைக் குவித்­தார் இந்­திய அணித் தலை­வர் ரோகித் சர்மா. எனி­னும், அவர் வெளி­யான பிறகு இலங்­கை­யால் இந்­திய அணியை நன்கு கையாள முடிந்­தது.

இலங்­கை­யின் டில்­ஷன் மது­ஷங்கா மூன்று விக்­கெட்­டு­களை வீழ்த்­தி­னார்.

சமிக்கா கரு­ண­ரத்னா, டசூன் ஷனக்கா ஆகி­யோர் ஆளுக்கு இரண்டு விக்­கெட்­டு­களை வீழ்த்­தி­னர்.

இதற்­கி­டையே, பெரும் கண்­ட­னத்­திற்கு ஆளான இந்­திய விளை­யாட்­டா­ளர் அர்ஷ்­தீப் சிங்­கிற்கு முன்­னாள் இந்­திய நட்­சத்­தி­ரம் சச்­சின் டெண்­டுல்­கர் தமது ஆத­ர­வைத் தெரி­வித்­துள்­ளார்.

பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான ஆட்­டத்­தில் பந்தை எளி­தில் பிடித்­தி­ருக்­கக்­கூ­டிய சூழ­லில் அர்ஷ்­தீப் சிங் வாய்ப்­பைத் தவ­ற­விட்­டார். அவர் இந்­தி­யா­வின் சிறு­பான்மை சீக்­கிய இனத்­த­வர் என்­பதை சுட்­டிக்­காட்டி பலர் அவரை மிக­வும் கடு­மை­யாக விமர்­சித்­த­னர்.

எனி­னும், அவ­ருக்கு ஆத­ர­வா­க­வும் டுவிட்­ட­ரில் பல பதி­வு­கள் இடம்­பெற்­றன.

இந்­தி­யா­வின் பெரும்­பான்மை இந்து சம­யத்­தைச் சேர்ந்த 49 வயது டெண்­டுல்­க­ரும் அத­ரவு தெரி­வித்­த­வர்­களில் ஒரு­வர்.

"நாட்­டைப் பிர­தி­நி­திக்­கும் விளை­யாட்­டா­ளர்­கள் அனை­வ­ரும் என்­றுமே தங்­க­ளால் முடிந்­த­வரை தேசத்­திற்கு சிறப்­பாக ஆடு­வர்," என்று டுவிட்­ட­ரில் குறிப்­பிட்ட டெண்­டுல்­கர், "அவர்­க­ளுக்கு நமது தொடர் ஆத­ரவு தேவை. மேலும், விளை­யாட்­டில் சில ஆட்­டங்­களில் வெல்­வ­தும் சில­வற்­றில் தோல்­வி­ய­டை­வ­தும் சாதா­ர­ணம். கிரிக்­கெட் மட்­டு­மன்றி எல்லா விளை­யாட்­டு­க­ளி­லும் தனிப்­பட்ட கண்­ட­னங்­கள் இடம்­பெ­றா­மல் பார்த்­துக்­கொள்­வோம்," என்­றும் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!