மலேசிய வேலை நிலவரத்தில் முன்னேற்றம்

கோலாலம்பூர்: மலே­சிய ஊழி­யர் சந்தை தொடர்ந்து வலு­வ­டைந்து வரு­வ­தா­க­வும் ஜூலை மாதம் 3.7 விழுக்­காடு வளர்ந்­த­தா­க­வும் தொழி­லா­ளர் துறை புள்­ளி­வி­வ­ரங்­கள் தெரி­வித்­தன.

வேலை நில­வ­ரம் கொவிட்-19 கொள்­ளை­நோ­ய்க்கு முந்­திய நிலையை நெருங்கி வரு­வ­தாக பிர­த­மர் துறை (பொரு­ளி­யல்) அமைச்­சர் முஸ்­தபா முக­மது கூறி­னார்.

கடந்த ஆண்டு முழு­மைக்­கும் ஊழி­யர் சந்தை 4.5 விழுக்­கா­டும் இவ்­வாண்டு ஜன­வ­ரி­யில் 4.2 விழுக்­கா­டும் வளர்ச்சி அடைந்த பின்­னர் ஜூலை­யில் அதற்கு அடுத்த வளர்ச்சி ஏற்­பட்­ட­தாக அவர் தெரி­வித்­தார்.

வேலை­யில்­லா­த­வர்­க­ளின் எண்­ணிக்கை படிப்­ப­டி­யா­கக் குறைந்­து­ வ­ரு­வ­தா­கக் கூறிய அமைச்­சர், ஜூன் மாதம் 630,600 ஆக இருந்த அந்த எண்­ணிக்கை ஜூலை­யில் 620,700 ஆகக் குறைந்­தது என்­றார்.

அதே­நே­ரம் வேலை­யில் சேரு­வோ­ரின் எண்­ணிக்கை ஜூலை மாதம் 0.3 விழுக்­காடு அதி­க­ரித்து 15.98 மில்­லி­ய­னுக்­குச் சென்­ற­தாக அவர் கூறி­னார்.

சேவைத் துறை­யில், குறிப்­பாக உணவு, பான சேவை நட­வ­டிக்­கை­கள், மொத்த விற்­பனை மற்­றும் சில்­லறை வர்த்­த­கம், நிர்­வாக நட­வ­டிக்­கை­கள், அதன் ஆத­ர­வுச் சேவை­கள் போன்­ற­வற்­றில் வேலை­யில் சேரு­வோ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரித்­த­தாக திரு முஸ்­தபா தெரி­வித்­தார்.

"உற்­பத்தி மற்­றும் கட்­டு­மா­னத் துறை­க­ளின் வேலை­வாய்ப்­பும் அதி­க­ரித்து உள்­ளது. அதே­நே­ரம் வேளாண்மை, சுரங்­கத் தொழில் போன்ற துறை­களில் வேலை­வாய்ப்பு குறைந்­தது," என்று அவர் நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் குறிப்­பிட்டுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!