வடமேற்கு குடியிருப்பாளர்களை ஒருங்கிணைக்கும் டான்ஸ் ஃபிட் கிளப்

காயத்­திரி காந்தி

வடமேற்கு டான்ஸ் ஃபிட் கிளப் (டிஎ­ஃப்சி) தனது 15வது ஆண்டு நிறை­வைக் கொண்­டா­டும் வகை­யில், வட­மேற்கு சமூக மேம்­பாட்டு மன்­றத்­தில் ஒரு நடன மாரத்­தானை நடத்­தி­யது. அந்த இரண்­டரை மணி நேர நிகழ்ச்சியில் நட­ன­மாட 1,000 டிஎ­ஃப்சி உறுப்­பி­னர்­கள் கூடி­யி­ருந்­த­னர்.

மூன்று ஆண்­டு­க­ளுக்­குப் பின் நடத்­தப்­படும் இந்த நிகழ்வு, இம்மாதம் 4 ஆம் தேதி அன்று ரிபப்­ளிக் பல­து­றைத் தொழிற்கல்­லூ­ரி­யில் நடந்­தே­றி­யது.

2007ல் தொடங்­கப்­பட்ட வடமேற்கு டான்ஸ்-ஃபிட் கிளப், வடமேற்கு குடி­யி­ருப்­பா­ளர்­கள் இடையே நட்பை உரு­வாக்­க­வும் வெவ்வேறு பின்­ன­ணி­க­ளிலி­ருந்து வரு­பவர்­களை ஒருங்­கி­ணைக்­கும் தள­மா­க­வும் அமைந்­தி­ருக்­கிறது.

"எனது நெருங்­கிய நண்­பர் என்னை இந்த நட­வ­டிக்­கைக்கு அறி­மு­கப்­ப­டுத்­தி­னார். இந்த டான்ஸ்-ஃபிட் கிளப் இந்­திய சமூகத்­திற்கு வெளியே புதிய நண்­பர்­களைச் சந்­திக்­கும் வாய்ப்பை எனக்கு அளித்­துள்­ளது," என்று கூறி­னார் டான்ஸ்-ஃபிட்டின் புதிய உறுப்­பி­ன­ரான 45 வயது மேனகா நாச்­சி­யப்­பன்.

நிகழ்ச்­சியில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்ட வட­மேற்கு சமூக மேம்­பாட்டு மன்­றத்­தின் மேயர் அலெக்ஸ் யாம், "வட­மேற்கு டான்ஸ்-ஃபிட் கிளப் பல்­வேறு பின்­ன­ணி­யில் வசிப்­ப­வர்­களை ஒன்­றி­ணைந்து, நீடித்த பிணைப்­பு­களை உரு­வாக்­கு­வ­தற்­கான சிறந்த தள­மா­கத் திகழ்­கிறது.

"டான்ஸ்-ஃபிட் கிளப்பின் மாஸ்­டர்­கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்­றும் உறுப்­பி­னர்­க­ளின் ஆத­ர­விற்கு எனது நன்­றியைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.

"15 ஆண்­டு­களில் நாம் இந்த அள­விற்கு வளர்ச்சி கண்­ட­தற்கு இவர்­களின் பங்கு அளப்பரியது," என்று கூறி­னார்.

'ஹெல்தி லிவிங் அட் நார்த் வெஸ்ட்' என்ற முயற்­சி­யின் ஒரு பகு­தி­யாக, வடமேற்கு டான்ஸ்­ஃபிட் கிளப், 4 கிளப்பு­கள் மற்­றும் 200 உறுப்­பி­னர்­க­ளு­டன் தொடங்­கி­யது.

இது தற்போது­வரை,

63 வட­மேற்கு டான்ஸ்-ஃபிட் கிளப்பு­கள் மற்­றும் 3,761 உறுப்­பி­னர்­கள் கொண்ட ஓர் அமைப்பாக வளர்ந்துள்­ளது.

40 வய­தி­லி­ருந்து 60 வயது வரையுள்ளவர்களைக் கொண்ட இந்த டான்ஸ்­ஃபிட் கிளப், வாரந்­தோ­றும் வடமேற்கு வட்­டா­ரத்­தில் உள்ள பல்­நோக்கு அரங்­கு­கள் மற்­றும் குடியிருப்புக் கடைத்தொகு­தி­களில் நடத்­தப்­ப­டு­கின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!