சிட்டியின் சீற்றத்தைத் தடுக்க திணறல்

தொடர்ந்து ஆற்­றலை வெளிப்­ப­டுத்­தித் தனது ஆதிக்­கத்­தைச் செலுத்தி வரு­கிறது இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் நடப்பு வெற்­றி­யா­ளர் குழு­வான மான்­செஸ்­டர் சிட்டி. சிர­மமே இல்­லா­மல் சிட்டி கோல்

களைக் குவிப்­பது, அதன் நட்­சத்­திர ஆட்­டக்­கா­ரர் எர்­லிங் ஹாலண்­டின் அபார விளை­யாட்டு உள்­ளிட்­ட­வற்­றைக் கேட்­டாலே குலை­

ந­டுங்குகிறது இத­ரக் குழுக்­

க­ளுக்கு.

லிவர்­பூல், லீக் பட்­டி­ய­லில் முத­லி­டத்தை வகிக்­கும் ஆர்­ச­னல் ஆகி­ய­வற்­றையே வென்ற மான்­செஸ்­டர் யுனை­டெட்டை 6-3 எனும் கோல் கணக்­கில் வென்­றது இதற்­குச் சான்று. பல குழுக்­கள் தற்­போது சிட்­டி­யைத் தடுப்­ப­தற்­கான வழி தெரி­யா­மல் திண­று­கின்­றன.

முற்­பா­தி­யில் நான்கு கோல்­களைத் தவறவிட்ட பிற­கு­தான் யுனை­டெட் விளை­யா­டவே ஆரம்­பித்­தது. அது­வரை குழு­வில் ஒரு வகை அச்­சம் தென்­பட்­டது.

ஆறு கோல்­களை தவறவிட்ட பிற­கும் யுனை­டெட் விட்­டுக்­கொ­டுக்­கா­மல் ஆடி­யது என்ற ஒரு கருத்து உள்­ளது. அதற்­காக 6-3 எனும் கோல் கணக்­கில் தோல்­வி­ய­டைந்­ததை நியா­யப்­ப­டுத்த முடி­யாது.

மீண்­டும் பெரிய குழு­வாக உரு­வெ­டுக்க சிட்டி போன்ற குழுக்­

க­ளைப் பார்த்து அஞ்­சு­வதை யுனை­டெட் நிறுத்­த­வேண்­டும்.

யுனை­டெட்­டி­டம் இல்­லாத தன்­னம்­பிக்கை, சில தரப்­பி­ன­ரின் எதிர்­பார்ப்­புக்கு மாறாக டோட்­டன்­ஹம் ஹாட்ஸ்­பரை வென்ற ஆர்­ச­ன­லி­டம் உள்­ளது.

சில வாரங்­க­ளுக்கு முன்பு யுனைடெட்­டி­டம் தோல்­வி­ய­டைந்த பிறகு ஆர்­ச­னல் தாக்­குப்­பி­டிக்­குமா என்ற சந்­தே­கம் எழுந்­தது. அதற்கு, பரு­வத்­தின் இறு­தி­யில்­தான் பதில் தெரி­யும் என்­றா­லும் அக்­குழு ஸ்பர்சை வென்­றதை சாதா­ர­ண­மாக நினைக்க முடி­யாது.

குழு உணர்வு, தன்­னம்­பிக்கை ஆகி­ய­வையே, பல குழுக்­கள் வெல்ல சிர­மப்­பட்ட ஸ்பர்சை ஆர்­ச­னல் வென்­ற­தற்­கான கார­ணங்­கள். பிறர் தனது ஆற்­றல்­மீது சந்­தே­கம் கொண்­டா­லும் அது தற்­போ­தைக்கு தனது குழுவை நெருங்­க­வி­டா­மல் பார்த்­துக்­கொள்­கி­றார் ஆர்­ச­னல் நிர்­வாகி மிக்­கெல் அர்­டெட்டா.

இது­வரை சிறப்­பாக விளை­யாடி­ வந்த ஸ்பர்­சி­டம் கடந்த வாரம் உத்­வே­கத்­தைக் காண­வில்லை. இது அடிக்­கடி நிகழ்ந்­தால் நிர்­வாகி என்­டோ­னியோ கொண்­டேக்குப் பிரச்­சி­னை­தான்.

சென்ற பருவ லீக் கிண்­ணத்தை வெல்­லும் விளிம்பு வரை வந்த லிவர்­பூ­லின் பிரச்­சி­னை­கள் தொடர்­கின்­றன. தாக்­கு­தல் ஆட்­டத்­தில் சாடியோ மானே இல்­லாத குறை தெரி­கிறது; தற்­காப்பு ஆட்­டத்­தி­லும் சோபிக்­கத் தவிக்­கிறது லிவர்­பூல். ஏதோ ஒரு வகை புத்­து­யிர் தேவைப்­படும் உணர்­வைத் தரு­கிறது லிவர்­பூ­லின் விளை­யாட்டு. குழுவை எழச்­செய்­யும் ஒரு வீரர் தேவைப்­ப­ட­லாம்.

லிவர்­பூ­லு­டன் 3-3 எனும் கோல் கணக்­கில் சம­நிலை கண்ட பிரைட்­டன் தொடர்ந்து பலரை ஆச்­ச­ரி­யப்

படுத்­தும் வண்­ணம் ஆடி வரு­கிறது. இது­வரை பெரிய குழுக்­க­ளுக்கு சவால் விடுத்­துள்­ளது பிரைட்­டன்.

முதன்­மு­றை­யாக பிரைட்­ட­னின் முன்­னாள் நிர்­வாகி கிரா­ஹம் போட்­ட­ரின் தலை­மை­யில் லீக்­கில் கள­மி­றங்­கிய செல்சி மிக­வும் சிர­மப்­பட்டு ஒரு­வ­ழி­யாக கிரிஸ்­டல் பேலசை வென்­றது. மீண்­டு­வ­ரும் அறி­கு­றி­க­ளைக் காட்­டு­கிறது செல்சி.

நட்­சத்­திர நிர்­வா­கி­களை நிய­மித்து சிறு பின்­ன­டை­வு­கள் ஏற்­பட்­டா­லும் அவர்­க­ளைப் பணி­நீக்­கம் செய்­யும் பழக்­கம் செல்­சிக்கு இருந்து வந்­துள்­ளது. அப்­படி இருக்­கை­யில் வளர்ந்­து­வ­ரும் நிர்­வா­கி­யான போட்­டர் சிறப்­பா­கச் செயல் பட அவ­ருக்­குப் போது­மான கால அவ­கா­சம் வழங்­கப்­ப­ட­வேண்­டும்.

பல நிர்­வா­கி­க­ளால் செய்ய முடி­யா­ததை போட்­டர் சாதித்­து­விட்­டால் அது கடந்த சில ஆண்­டு­

க­ளாக இருந்­து­வ­ரும் காற்­பந்­தின் போக்கை மாற்­றக்­கூ­டும்.

லீக் பட்­டி­ய­லில் முத­லி­டத்­தில் ஆர்­ச­ன­லும் இரண்­டா­வது இடத்­தில் சிட்­டி­யும் உள்­ளன. இவ்­விரு அணி­க­ளும்­தான் இது­வரை தொடர்ந்து சிறப்­பாக ஆடி வந்­துள்­ளன. மூன்­றாம் இடத்தை வகிக்­கும் ஸ்பர்ஸ், கடந்த வாரம் நிகழ்ந்த பின்­ன­டை­வி­லி­ருந்து மீண்டு வந்து மேலும் சிறப்­பாக ஆடு­வது அவ­சி­யம்.

நான்­காம் இடத்­தில் பிரைட்­டன், ஐந்­தாம் இடத்­தில் செல்சி, ஆறாம் இடத்­தில் யுனை­டெட். லிவர்­பூல் ஒன்­ப­தா­வது இடத்­தில்­தான் இருக்­கிறது. கடந்த வார ஆட்­டங்­களை மட்­டும் கருத்­தில்­கொண்­டால் ஆர்

சனல், சிட்டி ஆகிய இரண்­டும்­தான் லீக் கிண்­ணத்­திற்­குப் போட்டி தரும் என்று சொல்­ல­லாம். எனி­னும், குழு நிர்­வா­கி­க­ளின் அணுகு­ மு­றை­யைக் கருத்­தில்­கொள்­ளும்­போது ஸ்பர்­சைக் குறைத்து மதிப்­பி­ட­மு­டி­யாது.

லீக் பரு­வம் இன்­ன­மும் கால் கட்­டத்­தைக்­கூட தொட­வில்லை.

தற்­போ­தைக்கு சிட்டி மேம்­பட்­டுக்­கொண்டே இருக்­கிறது. மற்றக் குழுக்­களும் அபா­ர­மாக ஆட­வேண்­டும் என்ற நடு­நிலை ரசி­கர்­க­ளின் ஏக்­கம் தீர நாளா­க­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!