தடுமாறும் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர்; பிரச்சினையில் பார்சிலோனா

ஃபிராங்க்­ஃபர்ட்: சிறப்­பாக விளை­யா­டி­வந்த இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் குழு­வான டோட்­டன்­ஹம் ஹாட்ஸ்­பர் இப்­போது தடு­மாறி வரு­கிறது.

சனிக்­கி­ழ­மை­யன்று பிரி­மி­யர் லீக்­கில் ஆர்­ச­ன­லி­டம் தோல்­வி­ய­டைந்த ஸ்பர்ஸ், சாம்­பியன்ஸ் லீக்­கின் 'டி' பிரிவு ஆட்­டத்­தில் ஜெர்­ம­னி­யின் ஐன்ட்­ராக்ட் ஃபிராங்க்­ஃபர்ட்­டுன் கோலின்றி சம­நிலை கண்­டது. இப்­பி­ரி­வில் ஸ்பர்ஸ் இது­வரை மூன்று ஆட்­டங்­களில் ஆடி­யுள்­ளது. இந்த ஆட்­டத்­தைத் தவிர இதர இரு ஆட்­டங்­களில் ஒன்­றில் வென்று மற்­றொன்­றில் தோல்­வி­யடைந்­தது.

எனி­னும், நெருக்­க­டி­யி­லி­ருந்து மீண்­டு­வ­ரும் ஆற்­றல் கொண்­ட­வர் ஸ்பர்ஸ் நிர்­வாகி கொன்டே.

தடு­மாறி வந்த இத்­தா­லி­யின் இன்­டர் மிலான், 'சி' பிரி­வில் ஸ்பெ­யி­னின் பார்­சி­லோ­னாவை 1-0 எனும் கோல் கணக்­கில் வென்­றது. கோலைப் போட்­ட­வர் துருக்­கிய வீரர் ஹக்­கான் கல்­ஹ­னொக்லு (படம்). மூன்று ஆட்­டங்­களில் இரண்­டில் தோல்­வி­ய­டைந்­துள்ள பார்­சி­லோனா நெருக்­க­டி­யைச் சந்­திக்­கிறது. இப்­பி­ரி­வின் மற்­றோர் ஆட்­டத்­தில் செக் குடி­ய­ர­சின் விக்­டோ­ரியா பிள­செனை 5-0 எனும் கோல் கணக்­கில் வென்று கடந்த 31 பிரி­வுச் சுற்று ஆட்­டங்­களில் தோல்­வி­ய­டை­யாமல் ஒரு புதிய சாதனை படைத்தது ஜெர்­ம­னி­யின் பயர்ன் மியூ­னிக்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!