சிட்டியின் கோல் பசிக்கு இரையாகிய கோபன்ஹேகன்

மான்­செஸ்­டர்: சாம்­பி­யன்ஸ் லீக் காற்­பந்­துப் போட்­டி­யில் டென்­மார்க்­கின் எஃப்சி கோபன்­ஹே­கன் குழுவை 5-0 எனும் கோல் கணக்­கில் மான்­செஸ்­டர் சிட்டி நேற்று முன்­தி­னம் பந்­தா­டி­யது.

இந்த ஆட்­டத்­தி­லும் சிட்­டி­யின் நட்­சத்­திர வீரர் எர்­லிங் ஹாலண்ட் தமது அபா­ரத் திற­னைத் தொடர்ந்து வெளிப்­ப­டுத்­தி­னார்.

கோபன்­ஹே­க­னுக்கு எதி­ரான ஆட்­டத்­தில் அவர் இரண்டு கோல்­

க­ளைப் போட்­டார்.

இதன்­மூ­லம் இப்­ப­ரு­வத்­தில் களமிறங்கிய அனைத்­துப் போட்­டி­ க­ளிலும் இது­வரை அவர் மொத்­தம் 19 கோல்­கள் போட்­டுள்­ளார்.

ஆட்­டத்­தின் 7வது நிமி­டத்­தி­லும் 32வது நிமி­டத்­தி­லும் ஹாலண்ட் கோல் போட்டு கோபன்­ஹே­

க­னைத் திக்­கு­முக்­காட வைத்­தார்.

இது போதா­தென்று ஆட்­டத்­தின் 39வது நிமி­டத்­தில் கோபன்­ஹே­கன் சொந்த கோல் போட்டு தனது நிலையை மேலும் மோச­மாக்­கிக்­கொண்­டது.

இடை­வே­ளை­யின்­போது 3-0 எனும் கோல் கணக்­கில் சிட்டி முன்­னிலை வகித்­தது.

பிற்­பாதி ஆட்­டத்­தி­லும் சிட்­டி­யின் கோல் பசி அடங்­கி­ய­தா­கத் தெரி­ய­வில்லை. தொடர்ந்து ஆதிக்­கம் செலுத்தி தாக்­கு­த­லில் தீவி­ரம் காட்­டிய சிட்டி, மேலும் இரண்டு கோல்­க­ளைப் போட்­டது. ஆட்­டத்­தின் 55வது நிமி­டத்­தில் சிட்­டிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்­தது. கிடைத்த வாய்ப்பை மாரெஸ் நழு­வ­வி­ட­வில்லை.

ஆட்­டத்­தின் 76வது நிமி­டத்­தில் ஆல்­வா­ரேஸ் சிட்­டி­யின் ஐந்­தா­வது கோலைப் போட்­டார்.

கோபன்­ஹே­க­னின் கோல் காப்­பா­ளர் மட்­டும் விழிப்­பு­டன் இருந்­தி­ருக்­கா­வி­டில் சிட்­டிக்­காக ஹாலண்ட் மேலும் பல கோல்­

க­ளைப் போட்­டி­ருப்­பார்.

கடந்த ஐந்து ஆட்­டங்­களில் சிட்டி 20 கோல்­க­ளைப் போட்­டுள்­ளது. இனி பெப் கார்­டி­யோ­லா­வின் படையை எதிர்­கொள்­ளும்­போது வலி­மை­மிக்க குழு­வின் ஆட்­டக்­கா­ரர்­க­ளின் மன­தி­லும் அச்­சம் எட்டிப்­பார்க்­கும் என்­ப­தில் சந்­தே­கம் இல்லை என்று பர­வ­லா­கப் பேசப்­

ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!