வெற்றியைப் பதிவு செய்த ரியால் மட்ரிட், யுவென்டஸ்

மட்­ரிட்: சாம்­பியன்ஸ் லீக் காற்­

பந்­துப் போட்டியின் 'எஃப்' பிரி­வில் ரியால் மட்­ரிட் முன்­னிலை வகிக்­கிறது. உக்­ரே­னின் ஷக்­தார் டொனெட்ஸ் குழுவை அது 2-1 எனும் கோல் கணக்­கில் நேற்று வீழ்த்­தி­யது.

இது­வரை இப்­ப­ரு­வத்­துக்­கான சாம்­பி­யன்ஸ் லீக் போட்­டி­யில் கள­மி­றங்­கிய எல்லா ஆட்­டங்­க­ளி­லும் ரியால் வாகை சூடி­யுள்­ளது.

சொந்த நாட்­டில் போர் வெடித்­தி­ருப்­ப­தால் மட்­ரிட்­டைச் சென்­ற­டைய ஷக்­தார் ஆட்­டக்­கா­ரர்­கள் பத்து மணி நேரம் பய­ணம் மேற்­கொண்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. ஆட்­டத்­தில் ஆதிக்­கம் செலுத்­தி­ய­போ­தி­லும் கோல் போட கிடைத்த பல பொன்­னான வாய்ப்­பு­களை ரியால் வீணாக்­கி­யது. இந்த வெற்­றி­யின் மூலம் இரண்­டா­வது நிலை­யில் உள்ள ஷக்­டா­ரை­விட ரியால் ஐந்து புள்ளி­ கள் அதி­கம் பெற்­றுள்­ளது.

மற்­றோர் ஆட்­டத்­தில் இஸ்­‌ரே­லின் மக்­காபி ஹைஃபாவை இத்­தா­லி­யின் யுவென்­டஸ் 3-1 எனும் கோல் கணக்­கில் தோற்­க­டித்­தது.

யுவென்­ட­சின் வெற்­றிக்கு அதன் நட்­சத்­திர ஆட்­டக்­கா­ரர் டி மரியா வித்­திட்­டார்.

இதற்­கி­டையே, பிரான்­சின் பாரிஸ் செயிண்ட் ஜெர்­மே­னும் போர்ச்­சு­க­லின் பென்­ஃபி­கா­வும் தரப்­புக்கு ஒரு கோல் போட்டு சம­நிலை கண்­டன.

பாரிஸ் செயிண்ட் ஜெர்­மே­னுக்­காக லய­னல் மெஸ்ஸி அபா­ர­மான முறை­யில் கோல் போட்­டும் பய­னில்­லா­மல் போனது.

டெனிலோ பெரேரா போட்ட சொந்த கோல் பென்ஃபிகாவுக்கு ஒரு புள்ளியைப் பெற்றுத் தந்தது.

"பென்ஃபிகாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிப்பது எளிதான காரியம் அல்ல என்பது எங்களுக்குத் தெரியும். மேலும் அக்குழு சிறப்பாக விளையாடியது," என்றார் பிஎஸ்ஜி அணித் தலைவர் மார்குவினோஸ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!