வண்ணத் தமிழ் வளர்த்த இளையர் விழா

மோன­லிசா பொன்­மணி உத­ய­கு­மார்

தமிழ் இளை­யர் விழாவை முன்­னிட்டு பல­த­ரப்­பட்ட நிகழ்ச்­சி­கள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டன. அவற்­றின்­வழி மாண­வர்­கள் தங்­க­ளின் திற­மையை வளர்த்­துக்­கொண்­ட­து­டன் தமிழ்­மொழி மீதுள்ள தங்­க­ளின் பற்­றை­யும் உறு­திப்­ப­டுத்­தி­னர்.

வானொலி நாட­கம்

இளை­யர்­க­ளி­டையே தமிழ் மொழிப் பயன்­பாட்டை அதி­க­ரிக்­கும் நோக்­கில் 'வானொலி நாட­கம்' பயி­ல­ரங்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டது. இப்­ப­யி­ல­ரங்­கில் வானொலி நாட­கத்­திற்­காக கதை எழு­து­வது, படைப்­பைப் பதிவு செய்­வது போன்ற பல்­வேறு நுணுக்­கங்­கள் கற்­றுக்­கொ­டுக்­கப்­பட்­டன. தமிழ் உச்­ச­ரிப்பு, கதைச் சூழல் மற்­றும் வச­னத்­திற்­கேற்­பக் குரலை மாற்­றிப் பேசும் பயிற்சி, குர­லின் மூலம் உணர்­வு­களை வெளிப்­ப­டுத்­தும் முறை எனப் பல்­வேறு பயிற்­சி­கள் வழங்­கப்­பட்­டன. மேலும் மென்­பொ­ருள் செய­லி­க­ளைப் பயன்­ப­டுத்தி நாட­கங்­க­ளைப் பதி­வு­செய்வது எப்­படி என்­றும் காட்­டப்­பட்­டது.

ஏகேடி கிரி­யே­ஷன்ஸ் நிறு­வனத்­தால் ஏற்­பாடு செய்­யப்­பட்ட இப்­பயி­ல­ரங்கு கடந்த மாதம் 10, 11 தேதி­களில் நடை­பெற்­றது. பயி­ல­ரங்­கில் 10 முதல் 15 வய­திற்­குட்­பட்ட 22 மாண­வர்­கள் பங்­கேற்­ற­னர். சிறப்பு விருந்­தி­ன­ராக இந்­திய மர­பு­டைமை நிலை­யத்­தின் பொது மேலா­ளர் மரியா பவானி தாஸ் கலந்­து­கொண்­டார்.

இப்­ப­யி­ல­ரங்­கில் பயிற்­சிக்­காக கொடுக்­கப்­பட்ட கதை­களை, எழுத்­தா­ளர்­கள் நந்­தினி ஸ்ரீ, கல்­யாணி ரவி, ஷர்­மிலி செல்­வ­ராஜி ஆகி­யோர் எழு­தி­யி­ருந்­த­னர். கதை­யின் முடி­வு­களை மாண­வர்­களே குழு­வா­கத் தீர்­மா­னிக்­கும் பயிற்­சி­யும் வழங்­கப்­பட்­டது.

இயற்­றப்­படும் கதை­யின் கதா­பாத்­தி­ரங்­க­ளுக்­குக் குரல் மூல­மா­க­வும் உடல் அசைவு மூல­மா­க­வும் உயிர்­கொ­டுக்க மாண­வர்­க­ளுக்கு பயிற்­று­விக்­கப்­பட்­டது என்று கூறி­னார் பயி­ல­ரங்­கின் ஏற்­பாட்­டா­ள­ரும் ஏகேடி கிரி­யே­ஷன்ஸ் நிறு­வ­ன­ரு­மான ராணி கண்ணா.

கதா­பாத்­தி­ரமாக மாறி, ஏற்ற இறக்­கத்­து­டன் பேசக் கற்­றுக்­கொண்­ட­தாகக் கூறி­னார் 14 வய­தான ரூஹிலா பர்­வீன்.

இரட்டையர்கள் ஹர்­ஷினி ஸ்ரீராம், சஹானா ஸ்ரீராம் கூறு­கை­யில், "புதிய தமிழ் சொற்­கள் பல­வற்­றைக் கற்­றுக்­கொண்­டோம். குழு­வாக நாட­கத்தை நடித்து குரல் பயிற்­சி­ பெற்றோம்," என்­ற­னர்.

இளம் செய்­தி­யா­ளர் போட்டி

தமிழ்­மொழி வளர்ச்­சி­யில் புத்­தாக்க முறை­யில் இளை­யர்­கள் பங்­க­ளிப்­ப­தற்­கும் தமிழ் மீதுள்ள தங்­கள் பற்றை வளர்த்­துக்­கொள்­ள­வும் சிந்­த­னைத் திறன், பேச்­சுத் திறன், தமிழ்­மொ­ழி­யின் அடிப்­ப­டை­க­ளைப் புரிந்­து­கொள்­வது போன்ற ஆற்­றல்­களை வளர்க்­க­வும் இளம் செய்­தி­யா­ளர் போட்டி நடத்­தப்­பட்­டது.

ஏறக்­கு­றைய 32 இளை­யர்­கள் கலந்­து­கொண்டு பல­ன­டைந்­த­னர். இளை­யர்­களுக்கான இந்த போட்­டி­யில் பெரும்­பா­லும் பள்ளி மாண­வர்­கள் கலந்­து­கொண்­ட­தாக தமிழர் தக­வல் தொழில்­நுட்ப சமுதாயத் தலை­வர் திரு மா கோவிந்­த­ராஜா (மாகோ) கூறி­னார்.

செயல்­தி­றன் நிலை, குழுப்­பணி, தெளிவு, பேச்­சுத்­த­மிழ், மொழித் திறன் பயன்­பாடு மற்­றும் கேள்­வி­களை, பதில்­களை வழங்­கு­தல் ஆகி­ய­வற்­றின் அடிப்­ப­டை­யில் தேர்ந்­தெ­டுத்­த­னர். 'சிஎன்ஏ' செய்­தி­யா­ளர் இலக்­கியா செல்­வ­ராஜி போட்­டி­யில் சிறப்பு விருந்­தி­ன­ராகக் கலந்து கொண்­டார். உச்­ச­ரிப்பு, எளி­மை­யான சொல்­நடை, கேள்வி கேட்­ப­தன் நுணுக்­கங்­கள், பதி­ல­ளிப்­ப­தன் நுணுக்­கங்­கள் போன்­ற­வற்­றை­யும் நடு­வர்­கள் கவ­னத்­தில் கொண்­டுள்­ள­னர்.

போட்­டி­யில் அதி­கப் பரி­சு­களை ரிவர்­சைட் உயர்­நி­லைப் பள்ளி வென்­றது. அப்­பள்­ளி­யைச் சேர்ந்த அவி­னாஷ் கணே­சன், போட்­டி­யில் ஏறக்­கு­றைய 27 நேர்­கா­ணல்­களை மேற்­கொண்டு சிறப்­புப் பரி­சை­யும் வென்­றுள்­ளார். போட்டி வெற்­றி­க­ர­மாக நடந்­தே­றி­யது என்­றும் தொடர்ந்து தமிழ்­மொ­ழியை இளை­யர்­க­ளி­டையே வளர்க்க இம்­மா­தி­ரி­யான முயற்­சி­களில் தமிழ் தக­வல் தொழில்­நுட்ப சங்­கம் ஈடு­படும் என்­றும் திரு மாகோ கூறி­னார்.

இப்­போட்­டி­யில் கலந்­து­கொண்­டது நல்­ல­தோர் அனு­ப­வ­மாக அமைந்­தது என்று கூறிய ரிவர்­சைட் உயர்­நி­லைப் பள்ளி மாணவி ஷ்ரேஸ்தி ராதா­கி­ருஷ்­ணன் போட்­டி­யின் குழுப் பிரி­வில் முதல் பரிசு வென்­றார். தனது தமிழ்­மொ­ழிப் பற்றை வலு­வாக்க இந்­தப் போட்டி உத­வி­ய­தோடு மொழி அறி­வை­யும் விரி­வு­ப­டுத்­தி­ய­தாக கூறி­னார்.

"ஒரு தலைப்பை ஒட்டி மற்­ற­வர்­கள் கூறி­யதை அறிந்­த­தன்­வழி எனக்கு வெவ்­வேறு கண்­ணோட்­டங்­கள் கிடைத்­தன. மற்ற பள்­ளி­களைச் சேர்ந்த மாண­வர்­க­ளின் பேச்­சுத் திறன்­களும் எனக்கு உற்­சா­கத்தை அளித்­தது," என்­றார்.

ரிவர்­சைட் உயர்­நி­லைப் பள்ளியைச் சேர்ந்த மற்­றொரு வெற்­றி­யா­ளர் சர­வ­ணன் ஸ்ரீஹ­ரீஷ், "என்­னு­டைய தமிழ்­மொழி வளத்தை பெருக்­க­வும் தமி­ழில் பேசும் ஆற்­றலை வளர்க்­க­வும் இப்­போட்­டி­யில் நான் கலந்­து­கொண்­டேன். மேடை­யில் அனை­வர் முன்­னி­லை­யில் தமி­ழில் தைரி­ய­மா­கப் பேசக் கற்­றுக் கொண்­டேன்," என்­றார்.

தமி­ழோடு உற­வாடு

தமிழ்­மொழி மாதத்­திற்­காக சிங்­கப்­பூர் வாழ்க்­கைச் சூழ­லுக்­கேற்ப தமிழ்­மொ­ழியை எவ்­வாறு பயன்­படுத்­து­கி­றோம் என்ற தலைப்­பில் சிற்­பி­கள் மன்­றம் தயா­ரித்த 12 வலை­யொ­லி­க­ளைக் கேட்டு அவற்­றின் அடிப்­ப­டை­யில் கேட்­கப்­படும் கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளிப்­ப­து­தான் 'தமி­ழோடு உற­வாடு' நிகழ்ச்­சி­யில் இடம்­பெற்ற போட்­டி­யா­கும்.

உரை­யா­டல் முறை­யில் பதி­விடப்­பட்ட வலை­யொ­லி­கள், மாண­வர்­களை­யும் இளை­ய­ரை­யும் சென்­ற­டை­வ­தற்­காக நகைச்­சு­வை கலந்­த­வாறு தயா­ரிக்­கப்­பட்­டி­ருந்­த­தாக சிற்­பி­கள் மன்றத் தலைவி திரு­மதி திருச்­செல்வி குறிப்­பிட்­டார்.

போட்­டி­யில் அதி­க­மா­கத் தொடக்­க­நிலை ஐந்து முதல் உயர்­நிலை இரண்டு வரை­யி­லான மாண­வர்­கள் கலந்­து­கொண்­ட­னர். தமிழ் இலக்­கி­யம், தமிழ் பாடல் வரி­கள், புற­நா­னூறு, எண்­கள், பழ­மொ­ழி­கள் ஆகி­ய­வற்­றைப் பற்­றி­ய­ வலை­யொலி­கள் தயா­ரிக்­கப்­பட்­டி­ருந்­தன.

"மாண­வர்­கள் தமிழ்­மொ­ழியை வாழ்­வு­மொ­ழி­யா­கப் பயன்­ப­டுத்த வேண்­டும். அன்­றா­டம் பயன்­ப­டுத்­தும் அள­விற்கு எளி­மை­யான, அழ­கான மொழி அது என்­ப­தை­யும் மாண­வர்­கள் புரிந்­து­கொள்ள வேண்­டும். இதற்கு நாம் அவர்­க­ளைச் சரி­யான பாதை­யில் வழி­ந­டத்­திச்­செல்ல வேண்­டும். இது­தான் எங்­களது முதன்­மை­யான நோக்­கம், இதை நாங்­கள் அனைத்து நிகழ்ச்­சி­க­ளி­லும் வலி­யு­றுத்துகிறோம்," என்­றார் திரு­மதி திருச்­செல்வி.

போட்­டி­யின் ஒரு பிரி­வில் முதல் பரிசு வென்ற 12 வயது நிவோ­சன் சுரேஷ், "போட்டி மிகக் கடு­மை­யாக இருந்­தது. போட்­டி­யில் கலந்­து­கொண்­ட­தன் மூலம் நிறை­யப் பழ­மொ­ழி­க­ளைக் கற்­றுக்­கொண்­டேன். இது­போன்ற போட்­டி­களில் கலந்­து­கொண்டு என் தமிழ் சொல்­லாக்க ஆற்­ற­லை­யும் உச்­ச­ரிப்­பை­யும் மேம்­ப­டுத்­திக்­கொள்­வேன்," என்­றார்.

monolisa@sph.com.sg

uponmani@sph.com.sg

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!