வெளிநாட்டு ஊழியர்களுக்கு கொண்டாட்ட உணர்வூட்டிய தொண்டூழியர்கள்

நாட்டு நிர்­மா­ணத்­திற்கு முக்­கிய பங்­க­ளிக்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­கள், பொது விடு­முறை நாள்­க­ளின்­போ­தும் வேலை செய்­வ­துண்டு. அவ்­வ­கை­யில், இங்­குள்ள கோழிப் பண்ணை ஒன்­றில் வேலை செய்­யும் 50 ஊழி­யர்­கள், தீபா­வ­ளிக் குதூ­க­லத்­தில் ஈடு­பட முடி­யா­மல் பண்­டிகை நாளன்­றும் வேலை செய்த இவர்­க­ளுக்கு அம்­ரி­தேஸ்­வரி சங்கத்­தைச் சேர்ந்த தொண்­டூ­ழி­யர்­கள் பிரி­யாணி பொட்­ட­லங்­க­ளை­யும் இனிப்­புப் பல­கா­ரங்­க­ளை­யும் வழங்­கி­னர்.

சொந்த ஊரில் தங்­கள் குடும்­பத்­தா­ரு­டன் சேர்ந்து பண்­டி­கை­யைக் கொண்­டாட முடி­யாத ஊழி­யர்­க­ளின் வாழ்­வில் ஒளி­யேற்­றி­­னர் தொண்­டூ­ழி­யர்­கள்.

உதவி தேவைப்­ப­டு­வோ­ருக்கு உத­விக்­க­ரம் நீட்­டு­வதை வழக்­க­மாகக் கொண்­டுள்ள இச்­சங்­கம், தீபா­வளி அன்று ஊழி­யர்­க­ளுக்கு உண­வ­ளித்து அவர்­களை அர­வ­ணைத்­தது.

நாம் எங்­கி­ருந்து வந்­த­வ­ராக இருந்­தா­லும் அல்­லது எங்கு இருந்­தா­லும் நம்­மால் முடிந்­த­வரை, தேவைப்­ப­டு­வோ­ருக்கு உத­வு­வது எங்­க­ளுக்கு திருப்தி அளிக்­கிறது என்­கி­றார்­கள் சங்­கத்­தின் தொண்டூழி­யர்­கள்.

தீபா­வ­ளி­யின்­போது ஊழி­யர்­களின் தனிமை உணர்­வை­யும் கவ­லை­யை­யும் போக்கி, அவர்­களுக்கு இரக்­கம் காட்ட தாங்­கள் கட­மைப்­பட்­டுள்­ள­தா­க­வும் தொண்டூ­ழி­யர்­கள் கூறி­னர்.

“நான் சிறு­வ­ய­தில் இருந்­த­போதே என்­னு­டைய பெற்­றோர் தொண்­டூ­ழி­யத்­தில் ஈடு­பட்­ட­போது என்னை அவர்­க­ளு­டன் அழைத்­துச் செல்­வார்­கள். அத­னா­லேயே தொண்­டூ­ழி­யம் புரி­வது என் வாழ்வின் ஓர் அங்­க­மா­கி­விட்­டது. தீபாவளிக்கு ஊழி­யர்­க­ளுக்கு உண­வு அளிப்­பது எனக்கு மகிச்சி அளிக்­கிறது,” என்­றார் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் பயி­லும் ஆதிரா, 17.

“வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு உண­வ­ளிப்­பது என் நீண்­ட­நாள் ஆசை. இவ்­வாண்டு அவர்­க­ளுக்குப் பிரி­யா­ணி­யை­யும் பல­கா­ரங்­களை­யும் வழங்க எனக்கு வாய்ப்பு கிடைத்­துள்­ளது,” என்­றார் திரு­வாட்டி லட்­சுமி, 60.

“தீபா­வ­ளிப் பண்­டி­கை­யின்­போது தொண்­டூ­ழி­யர்­கள் எங்­க­ளுக்கு உண­வ­ளித்து உப­ச­ரித்­தது எங்­க­ளுக்கு மிக­வும் மகிழ்ச்­சி­யாக உள்­ளது. எங்­கள் குடும்­பத்­தி­னர் எங்­களு­டன் இருப்­ப­து­போன்ற ஓர் உணர்வு கிடைக்­கிறது,” என்றார் ‘எக்­ரோ­மேக் என்­ஜி­னி­யர்ஸ்’ நிறு­வனத்­தில் பணி­பு­ரி­யும் பர­மேஸ்­வரன் மணி, 29.

sanush@sph.com.sg

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!