இலங்கையின் வளங்களை எடுத்துச்சொன்ன ஒன்றுகூடல்

மோன­லிசா

இலங்­கை­யின் பாரம்­ப­ரி­யத்­தை­யும் அதன் தனித்­து­வ­மான உற்­பத்­திப் பொருள்­க­ளை­யும் சிங்­கப்­பூ­ரர்­களுக்கு எடுத்­துச் சொல்­லும் வித­மாக அண்­மை­யில் ஒன்­று­கூ­டல் நிகழ்ச்சி ஒன்று நடை­பெற்­றது.

சிங்­கப்­பூ­ருக்­கான இலங்­கைத் தூதர் சஷி­கலா பிரே­ம­வர்­த­னே­யின் இல்­லத்­தில் இந்த ­நி­கழ்ச்சி இடம்­பெற்­றது.

இதில், சுற்­று­லாத்­த­ல­மான இலங்­கை­யின் வளங்­க­ளைப் பற்றி வந்­தி­ருந்­தோ­ருக்கு எடுத்­து­ரைக்­கப்­பட்­டது.

இந்­நி­கழ்ச்­சி­யின் முக்­கிய அங்­கங்­க­ளாக இலங்­கை­யில் தயா­ரா­கும் நவீன ஆடை­கள், தேயிலை, இல­வங்­கப்­பட்டை உள்­ளிட்ட உணவு­வ­கை­களும் இலங்­கை­யில் கிடைக்­கும் ஆப­ர­ணக் கற்­கள், அந்­நாட்­டில் உரு­வாக்­கப்­படும் அணி­க­லன்­கள் ஆகி­ய­வற்­றின் கண்­காட்சியும் இடம்­பெற்­றன. இந்­தப் பொருள்­களை விற்­ப­தற்­கான முகப்­பு­களும் அமைக்­கப்­பட்­டி­ருந்­தன.

இலங்கை ஆடை வடி­வ­மைப்­பா­ளர்­க­ளான திரு­வாட்டி சோனாலி தர்­ம­வர்­தனே, திரு­வாட்டி சரிதா ராஜேந்­தி­ரன் இரு­வ­ரின் ஆயத்த ஆடை­ய­கத்­தில் விற்­ப­னை­யா­கும் நவீன ஆடை­களை அணிந்து, இலங்­கைப் பெண்­கள் பவ­னி­வந்த ஆடை அலங்­கார அணி­வ­குப்பு அனை­வ­ரின் கவ­னத்தை ஈர்த்­தது.

இந்த நிகழ்­ச்சியில் சிங்­கப்­பூர் சீனப் பெண்­கள் சங்க உறுப்­பி­னர்­கள், அர­ச­தந்­தி­ரி­கள், சுற்­றுப்­பயண நிறு­வ­னங்­க­ளின் பிர­தி­நிதி­கள் ஆகி­யோ­ரு­டன் பொது­மக்­களும் கலந்­து­கொண்­ட­னர்.

ஒன்­று­கூ­ட­லில் பங்­கு­கொண்ட 80க்கு மேற்­பட்­டோ­ருக்­கும் சுவை­யான விருந்து அளிக்­கப்­பட்­டது.

குறிப்­பாக இலங்­கை­யின் புகழ்­பெற்ற உண­வு­வ­கை­யான ஆப்­பம் உடனுக்குடன் தயாரித்துத் தரப்பட்டது விருந்தினர்கள் பல­ருக்­கும் மகிழ்ச்சி அளித்­தது.

இலங்­கை­யின் வளங்­கள், அதன் உற்­பத்­திப் பொருள்­கள் ஆகி­யவை பற்­றிய தக­வல்­கள் பகி­ரப்­பட்ட இந்­நி­கழ்ச்சி, சென்ற மாதம் 29ஆம் தேதி பிற்­ப­கல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை நடை­பெற்­றது.

நி­கழ்ச்­சி­யில் உரை­யாற்­றிய சிங்­கப்­பூ­ருக்­கான இலங்­கைத் தூதர் திரு­வாட்டி சஷி­கலா பிரே­ம­வர்­தனே, இலங்­கை­யின் தனித்­து­வ­மான உற்­பத்­திப் பொருள்­களில் சிங்­கப்­பூ­ரர்­கள் முத­லீடு செய்­ய­வேண்­டும் என்று கேட்­டுக்­கொண்­டார்.

இவை தொடர்­பான வர்த்­த­கங்­களில் ஈடு­ப­ட­வும் ஊக்­கு­வித்­த­தோடு இலங்­கை­யில் உள்ள சுற்­று­லாத் தலங்­க­ளின் சிறப்பம்­சங்­க­ளை­யும் முன்­னி­லைப்­ப­டுத்­திப் பேசி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!