மழைக்குப்பின் மாற்றம்

முக்கிய ஆட்டத்தில் பங்ளாதேஷை வீழ்த்தியது இந்தியா; அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதி

அடி­லெய்ட்: இரு­பது ஓவர்­களில் 185 ஓட்­டங்­கள் என்­பது வெற்றி இலக்­காக இருக்க, ஏழு ஓவர் முடி­வில் விக்­கெட் இழப்­பின்றி 66 ஓட்­டங்­களை எடுத்­தி­ருந்­தது பங்­ளா­தேஷ் அணி.

இந்­நி­லை­யில், ஏற்­கெ­னவே முன்­னு­ரைத்­த­படி மழை குறுக்­கிட்­டது.

மழை தொடர்ந்து, ஆட்­டம் அத்­து­டன் முடி­விற்கு வந்­தி­ருந்­தால் ‘டக்­வொர்த் லூயிஸ்’ முறைப்­படி பங்ளா­தேஷ் அணி வெற்­றி­பெற்­ற­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கும். அந்த முறைப்­படி, விக்­கெட் எதை­யும் இழக்­கா­த­தால் ஏழு ஓவர்­களில் பங்­ளா­தேஷ் 49 ஓட்­டங்­களை எடுத்­தி­ருந்­தாலே போதும்.

ஆனால், மழை நின்­ற­தும் ஆட்­டத்­தின் போக்கு மாறி­யது.

மழை­யால் தடை­பட்­ட­தால் ஆட்­டம் 16 ஓவர்­க­ளா­கக் குறைக்­கப்­பட்டு, பங்­ளா­தேஷ் அணிக்கு 151 ஓட்­டங்­கள் இலக்­காக நிர்­ண­யிக்­கப்­பட்­டது.

மழைக்­குப்­பின் முதல் ஓவரை அஸ்­வின் வீசி­னார். அவ­ரது 2வது பந்­தில் பங்­ளா­தேஷ் தொடக்க வீரர் லிட்­டன் தாஸ் ‘ரன் அவுட்’ முறை­யில் வெளி­யேற, ஆட்­டம் இந்­தி­யா­வின் பக்­கம் திரும்­பி­யது.

லிட்­டன் தாஸ் அதி­ர­டி­யாக விளை­யாடி, 27 பந்­து­களில் 60 ஓட்­டங்­க­ளைக் குவித்­தார்.

அதன்­பி­றகு பங்­ளா­தேஷ் வரி­சை­யாக விக்­கெட்­டு­க­ளைப் பறி­கொ­டுத்­தது.

அர்ஷ்­தீப் சிங் வீசிய கடைசி ஓவ­ரில் 20 ஓட்­டங்­களை எடுத்­தால் வெற்றி என்ற நிலை­யில், அந்த அ­ணி­ 14 ஓட்­டங்­களை மட்­டுமே எடுத்தது.

இறுதியில், பங்ளாதேஷ் அணி 16 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 145 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனால், ஐந்து ஓட்­டங்­களில் இந்­தியா வெற்­றி­யைச் சுவைத்­தது.

முன்னதாக, பூவா தலையாவில் வென்ற பங்ளாதேஷ் அணித்தலைவர் ஷாகிப் அல் ஹசன், முதலில் இந்திய அணியைப் பந்தடிக்க அழைத்தார்.

அதனையடுத்து, இந்திய அணித் தலைவர் ரோகித் சர்மாவும் லோகேஷ் ராகுலும் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர்.

தஷ்­கின் அக­மது வீசிய 2வது ஓவ­ரில் ரோகித் சர்மா தூக்கி அடித்த பந்தை எளி­தா­கப் பிடித்­தி­ருக்க முடி­யும் என்­றா­லும் அதனை நழு­வ­விட்­டார் ஹசன் மஹ்­மூத். ஆனா­லும், அடுத்­த­தாக ஹசன் வீசிய ஓவ­ரி­லேயே பிடி­கொடுத்து வெளி­யேறி ஏமாற்­ற­ம் அளித்­தார் ரோகித்.

முதல் மூன்று போட்­டி­களில் சரி­யாக விளை­யா­டா­த­தால் கடும் விமர்­ச­னங்­களை எதிர்­கொண்ட ராகுல், இம்­முறை அரை­ச­தம் அடித்து தனக்­குத் தொடர்ந்து வாய்ப்பு அளிப்­பது சரி­தான் என்­பதை மெய்ப்­பித்­துக் காட்­டி­னார்.

மூன்­றா­வது வீர­ரா­கக் களம்­கண்ட விராத் கோஹ்லி, இந்த உல­கக் கிண்­ணத் தொட­ரில் மூன்­றா­வது முறை­யாக அரை­ச­தம் அடித்து, இறு­தி­வரை களத்­தில் நின்­றார். அவர் 44 பந்­து­களில் 64 ஓட்­டங்­க­ளைக் குவித்­தார். இப்­போ­தைக்கு 220 ஓட்­டங்­க­ளு­டன் அதிக ஓட்­ட­மெ­டுத்­தோர் பட்­டி­யலில் முதலில் இருப்­ப­தும் அவர்­தான்.

சூர்­ய­கு­மார் யாதவ் 16 பந்­து­களில் 30 ஓட்­டங்­களை விளாச, இந்­திய அணி 20 ஓவர்­கள் முடி­வில் ஆறு விக்­கெட் இழப்­பிற்கு 184 ஓட்­டங்­களை எடுத்­தது.

இந்த வெற்­றியை அடுத்து, ‘சூப்­பர் 12’ சுற்­றில் இரண்­டாம் பிரி­வில் ஆறு புள்­ளி­க­ளு­டன் இந்­திய அணி முத­லி­டத்­திற்கு முன்­னே­றி­யது.

போட்­டிக்கு முன்­பாக, “நாங்­கள் கிண்­ணத்தை வெல்­லும் நோக்­கு­டன் வர­வில்லை. இந்­திய அணிக்­குத்­தான் கிண்­ணம் இலக்கு. அத­னால் நாங்­கள் இந்­திய அணிக்­குக் கடும் நெருக்­கடி கொடுப்­போம்,” என்று கூறிய பங்­ளா­தேஷ் அணித்­தலை­வர் ஷாகிப் அல் ஹச­னைச் சமூக ஊட­கங்­களில் பல­ரும் வன்­மை­யா­கச் சாடி­யி­ருந்­த­னர்.

சொன்­ன­து­போ­லவே அவ­ரது அணி கடும் நெருக்­கடி அளித்­தது.

“இந்­தி­யா­விற்கு எதி­ராக ஆடும் போதெல்­லாம் இப்­ப­டித்­தான் நடக்­கிறது. கிட்­டத்­தட்ட நெருங்­கி­னா­லும் எங்­க­ளால் வெற்­றிக்­கோட்­டைத் தொட முடி­வ­தில்லை,” என்று சொல்லி வருத்­தப்­பட்­டார் ஷாகிப்.

2016 டி20 உல­கக் கிண்­ணப் போட்­டி­யில் பங்­ளா­தேஷ் ஓர் ஓட்­டத்­தில் இந்­தி­யா­வி­டம் தோற்­றது குறிப்­பி­டத்­தக்­கது.

அடுத்­த­தாக வரும் ஞாயி­றன்று ஸிம்­பாப்­வே­வு­டன் இந்­தியா மோத உள்­ளது. அந்த ஆட்­டம் சம­னில் முடிந்­தாலே இந்­தியா அரை­யி­று­திக்­குள் நுழைந்­து­வி­டும்.

டி20 துளிகள்

முடங்கிய ஸிம்பாப்வே

அடிலெய்ட்: பாகிஸ்தானை ஓர் ஓட்டத்தில் வீழ்த்தி வியப்பில் ஆழ்த்தி, பின்னர் பரபரப்பான ஆட்டத்தில் பங்ளாதேஷிடம் மூன்று ஓட்டங்களில் தோற்றுப்போன ஸிம்பாப்வே அணி, நேற்று நெதர்லாந்திடம் எளிதாக அடிபணிந்தது. ஸிம்பாப்வே 117 ஓட்டங்களை எடுக்க,

12 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் நெதர்லாந்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ‘சூப்பர் 12’ சுற்றில் அவ்வணிக்குக் கிடைத்த முதல் வெற்றி இதுதான்.

கோஹ்லி சாதனை

அடிலெய்ட்: டி20 உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிக ஓட்டம் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார் இந்தியாவின் விராத் கோஹ்லி. இதுவரை 25 போட்டிகளில் ஆடியுள்ள அவர், 13 அரைசதங்களுடன் 1,065 ஓட்டங்களை எடுத்து இருக்கிறார். இலங்கையின் மகேலா ஜெயவர்தனே (1,016) இரண்டாம் இடத்திலும் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் (965) மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

அரையிறுதிக்குக் கடும் போட்டி

சிட்னி: ‘சூப்பர் 12’ சுற்றின் முதல் பிரிவிலிருந்து அரை இறுதிக்கு முன்னேற தலா ஐந்து புள்ளிகளுடன் உள்ள நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் கடும் போட்டி போடுகின்றன. அடுத்ததாக நாளை நியூசிலாந்து, அயர் லாந்தையும் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தானையும் நாளை மறுநாள் இங்கிலாந்து, இலங்கையையும் எதிர்த்தாட இருக்கின்றன. தத்தம் ஆட்டங்களில் அம்மூன்று அணிகளும் வெற்றிபெற்று விட்டால், ஓட்ட விகிதத்தில் முன்னிலையில் இருக்கும் இரண்டு அணிகள் அரை இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!