நீடித்த நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் குறித்து சிங்கப்பூரர்கள் கருத்து

காயத்­திரி காந்தி

சுற்­றுச்­சூ­ழல் மற்­றும் நீடித்த நிலைத்­தன்மை தொடர்­பாக, சிங்­கப்­பூ­ரர்­களின் வாழ்க்­கைக்­கு மிக நெருக்­க­மான அம்­சங்­களை ஒட்டி நடத்­தப்­பட்ட 'வாய்­சஸ் ஆஃப் சிங்­கப்­பூர்' (Voices of Singapore) ஆய்­வின் முடி­வு­களை 'டபுள்­யூட­புள்­யூ­எஃப்-சிங்­கப்­பூர்' எனப்­படும் சிங்­கப்­பூர் இயற்­கைக்­கான உல­க­ளா­விய நிதி அமைப்பு வெளி­யிட்­டுள்­ளது.

அமைப்பு 600 சிங்­கப்­பூ­ரர்­க­ளி­ட­மி­ருந்து திரட்­டிய கருத்­து­க­ளின் அடிப்­ப­டை­யில் அதன் உத்­தி­பூர்வ கருப்­பொ­ருள்­க­ளை­யும் திட்­டங்­களை­யும் அறி­மு­க­மும் செய்­துள்­ளது. பரு­வ­நிலை, நீடித்த நிலைத்­தன்மை மற்­றும் கழி­வு­களை உற்­பத்­திக்­கான வளங்­க­ளாக மாற்­றும் சுழற்சி முறை­யி­லான பொரு­ளி­யல் அணு­கு­முறை, இயற்கை மற்­றும் பல்­லு­யி­ரி­யல், நாடு ஆகிய நான்கு கருப்­பொ­ருள்­க­ளின் கீழ் ஒன்­பது திட்­டங்­கள் நடை­மு­றைக்கு வரவுள்ளன.

சிங்­கப்­பூ­ரர்­க­ளின் அன்­றாட வாழ்க்­கை­யில் நீடித்த நிலைத்­தன்­மையை ஊக்­கு­வித்து பரு­வ­நிலை மீள்­தி­ற­னு­டைய ஓர் எதிர்­கா­லத்தை நோக்கி அவர்­கள் பய­ணிப்­பதே இந்த ஆய்­வின் நோக்­க­மா­கும்.

"பல­த­ரப்­பட்ட சுற்­றுச்­சூ­ழல் விவ­கா­ரங்­கள் தற்­போது முன்­னு­ரிமை பெறு­கின்­றன. இந்­நி­லை­யில் சிங்­கப்­பூ­ரர்­க­ளின் நம்­பிக்­கை­களை நாங்­கள் கருத்­தில் கொண்டு நம் பூமி­யின் எதிர்­கா­லத்­திற்­காக பல்­வேறு பங்­கு­தா­ரர்­கள் ஈடு­ப­டு­வ­தற்கு உத்­தி­பூர்வ அணு­கு­மு­றை­களை உரு­வாக்­கி­யுள்­ளோம்," என்­றார் 'டபுள்­யூட­புள்­யூ­எஃப்-சிங்­கப்­பூர்' அமைப்­பின் தலைமை நிர்­வாக அதி­காரி திரு ஆர். ரகு­நா­தன்.

ஆய்­வின்­படி அதிக வரு­மா­னம் ஈட்­டும் வீடு­களில் உள்­ளோ­ரும் 50 வய­துக்­கும் மேற்­பட்­ட­வர்­களும் தேவை இல்­லா­த­போது விளக்­கு­களை­யும் மின்­சா­ரச் சாத­னங்­க­ளை­யும் அணைத்­து­வி­டு­வ­தா­கக் கூறி இருந்­த­னர். இந்த விழிப்­பு­ணர்­வு­டன் குறைந்த வரு­மா­னக் குடும்­பங்­கள் செயல்­பட்­டால் தங்­க­ளின் மாதாந்­தி­ரப் பய­னீட்­டுக் கட்­ட­ணங்­களைக் குறைக்க முடி­யும்.

உண­வுக் கழி­வைக் குறைப்­பது, தண்­ணீர் விர­யத்­தைத் தவிர்ப்­பது போன்ற அம்­சங்­கள் தொடர்­பில் முதி­ய­வர்­கள் அதி­க­மா­னோர் முயற்சி எடுப்­பதை ஆய்வு கண்­ட­றிந்­துள்­ளது. வளங்­க­ளுக்­குத் தட்­டுப்­பாடு ஏற்­ப­டு­வ­தைப் பார்த்­த­தால் அல்­லது அனு­ப­வித்­த­தால் மூத்த தலை­மு­றை­யி­ன­ரி­டையே இப்­ப­ழக்­கம் ஏற்­பட்­டி­ருக்­க­லாம்.

இதற்­கி­டையே, அதிக வரு­மானம் ஈட்­டு­வோர் தங்­க­ளின் வீடு­களில் மறு­ப­ய­னீட்டு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­கின்­ற­னர் என்­றும் கண்­ட­றி­யப்­பட்­டது. நீடித்த நிலைத்­தன்மை குறித்து அவர்­க­ளி­டையே கூடு­தல் விழிப்­பு­ணர்வு இருப்­பது இதற்­குக் கார­ண­மாக இருக்­க­லாம்.

ஆண்­க­ளை­யும் பெண்­க­ளை­யும் ஒப்­பி­டு­கை­யில், பொதுப் போக்­கு­வரத்தை ஆண்­க­ளைக் காட்­டி­லும் பெண்­களே அதி­கம் பயன்­ப­டுத்­தி­னர் என்றும் ஆய்­வு கூறியது.

பூமி­யின் பாது­காப்­பு தொடர்பில் தனி­ந­பர் பொறுப்­பு­ணர்­வை­யும் கூட்­டுப் பொறுப்­பு­ணர்­வை­யும் வளர்ப்­ப­தற்­கான கூட்டு முயற்­சி­க­ளுக்கு இந்த ஆய்வு வழி­காட்­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

gayathri@sph.com.sg

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!