மீள்திறனை வெளிப்படுத்தும் ‘புரோஜெக்ட் லயன்ஹார்ட்’

மாதங்கி இளங்கோவன்

'வீ ஆர் மாஜுலா' என்­னும் சமூக இயக்­கம் 'பிரா­ஜெக்ட் லயன்­ஹார்ட்' என்ற முயற்­சி­யின்­வழி கிரு­மித் தொற்­றின்­போது மக்­கள் சந்­தித்த சவால்­க­ளை­யும் அவற்­றி­லி­ருந்து எவ்­வாறு மீண்டு வந்­தார்­கள் என்­ப­தை­யும் வெளிக்­கொ­ணர அக்­டோ­பர் 6ஆம் தேதி தொடங் கப்­பட்­டது.

இந்த முயற்சி, சிங்­கப்­பூ­ரர்­கள் கிரு­மிப் பர­வ­லின்­போது அனு பவித்த சூழ்­நிலை, உணர்­வு­களை சுவ­ரோ­வி­யங்­கள், கலை படைப் புகள், குறும்­ப­டங்­கள் போன்ற வற்­றின் மூலம் மக்­க­ளுக்கு பல உண்மை கதை­களை கொண்டு வந்து சேர்த்துள்ளது.

அடுத்த ஆண்டு ஜன­வரி மாதம் வரைக்­கும் சிங்­கப்­பூர் முழுக்­க­வும் வெவ்­வேறு குடி யிருப்­புப் பேட்­டை­கள், மருத்­துவ மனை­கள், சாங்கி விமான நிலை­யம் ஆகி­ய­வற்­றில் இடம்பெறும் கண்­காட்சி போன்ற இம்முயற்சி, 30 கலை­ஞர்­க­ளின் உத­வி­யோடு ஏற்­பாடு செய்­யப்பட்­டுள்­ளது.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பல்­வேறு சிங்­கப்­பூ­ரர்­க­ளின் தின­சரி வாழ்க்கை பாதிக்­கப்­பட்­ட­தோடு அவர்களு­டைய வாழ்க்­கைப் பாதை­யில் முக்­கிய நிகழ்வு க­ளுக்­கும் பல தடங்­கல்­கள் ஏற்­பட்­டன.

அவ்­வாறு, தங்­க­ளு­டைய திரு மணத்­திற்கு ஆவ­லு­டன் திட்­ட­மிட ஆரம்­பித்த சங்­கீ­தா­வும் நரே­ஷும் தங்­க­ளு­டைய திரு­ம­ணத்தை தள்­ளிப் போட வேண்டி­ய இக்கட்டுடன்­ பல சடங்­கு­க­ளை­யும் செய்ய முடி­யாத சூழலும் ஏற்­பட்­டது.

கிரு­மித்­தொற்றின் ஆரம்­பக் கட்­டத்­தில், சங்­கீதா தன்­னு­டைய வேலையை இழந்­த­தோடு கிருமித் ­தொற்­று பாது­காப்பு நடை­மு­றை­களை பின்­பற்­றி­ய­வாறு நிச்சய தார்த்தம், திரு­ம­ணம் ஆகி­ய வற்றை நடத்த வேண்­டிய கட்­டா­யம் ஏற்­பட்­டது.

திரு­ம­ணத்­திற்கு மொத்­தம் 100 பேரை மட்­டுமே அழைக்க முடிந்­ததை எண்ணி சங்­கீ­தா­வும் நரே­ஷும் கவ­லைப்­பட்டனர். ஆனால் அனைவரின் ஆத­ர­வோடு திருமணத்தை சிறிய, அழ­கிய விதத்­தில் நடத்­தி­னர்.

"எனது நெருங்­கிய உறவினர்­கள் சிலர் வெளி­யூ­ரில் இருந்­த ­தால் கொவிட் காலத்­தில் அவர்­ க­ளால் சிங்­கப்­பூ­ருக்கு வர முடி­யா­மல் போனது," என்­றார் சங்­கீதா, 29.

இச்­சூ­ழலை சமா­ளிக்க, தங்­கள் திரு­ம­ணத்தை மெய்­நி­கர் தளங்­கள்­வழி கொண்­டு­சேர்க்க முடிந்­தது,

இது, இத்­தம்­பதியின­ருக்கு புது­மை­யான அனு­பவமாக அமைந்­தது. இது­மட்­டு­மல்­லா­மல், திரு மணம் நடப்­ப­தற்கு ஒரு வாரத் திற்கு முன்பு சங்­கீ­தா­வின் பெற் றோரை கொவிட்-19 கிரு­மித் தொற்று தாக்­கி­யது. ஆனால், இந்தத் தடங்­க­லை­யும் அவர்­கள் தாண்டி வந்­த­னர்.

"நம்­பிக்­கை­யும் மீள்­தி­றனு மின்றி எங்­க­ளால் இத்திரு­ மணத்தை நடத்­தி­யி­ருக்க முடி­யாது என்­றால் அது மிகை யாகாது," என்­கி­றார் நரேஷ், 33. 'புரோஜெக்ட் லயன்­ஹார்ட்', முன்­னாள் உள்­ளூர் வானொலி பிர­ப­ல­மான திவ்­யன் நாய­ரால் தொடங்­கப்­பட்ட முயற்­சி­யா­கும்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்றுக் காலத்­தில் உடல்நலம் குன்­றி­ய­தோடு அவருக்கு முதல் பிள்­ளை­யும் பிறந்­தது. ஈராண்­டு­களில் எத்­த­னையோ மாற்­றங்­களை சந்­தித்த இவர், தம்­மை­விட பெரி­ய­ள­வில் பலர் இதுபோன்ற சவால் களை சந்­தித்­தி­ருப்­பர் என சிந்­தித்­தார். அச்­சிந்­த­னையே, இம்­மு­யற்­சி­யின் பிறப்­பிற்கு வழி வகுத்­தது. 'மாஜுருட்டி டிரஸ்ட்', புரோஜெக்ஜட் லயன்ஹார்ட்டுடன் இணைந்து 100,000 வெள்ளியை 'எஸ்ஜி ஸ்ட்ராங்' நிதிக்கு நன் கொடையாக அளிக்க உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!