இங்கிலாந்தில் மீண்டும் ரேஷ்ஃபர்ட்

லண்­டன்: சில கால­மாக இங்­கி­லாந்து அணி­யில் இடம்­பெ­றா­மல் இருந்த மான்­செஸ்­டர் யுனை­டெட் வீரர் மார்க்­கஸ் ரேஷ்­ஃபர்ட் இவ்­வாண்டு உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டிக்­காக இங்­கி­லாந்து அணி­யில் மீண்­டும் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ளார். புத்­து­யிர் பெற்று மீண்டும் சிறப்பாக ஆடும் ரேஷ்ஃபர்டுக்குக் கிடைத்துள்ளது வெகுமானம்.

சென்ற உல­கக் கிண்­ணப் போட்டி­யில் கிண்­ணத்­தைக் கைப்­பற்­றி­யது பிரான்ஸ். அப்­போது அணி­யில் இருந்­தோ­ரில் 10 பேரை மட்­டுமே இந்­தப் போட்­டிக்­குத் தேர்ந்­தெ­டுத்­துள்­ளார் பயிற்­று­விப்­பா­ளர் டிடியே டேஷோம்.

குறிப்­பாக பால் போக்பா, இங்­கோலோ கான்டே ஆகிய இரு­வ­ரும் இம்­முறை அணி­யில் ­இல்லை. இரு­வ­ரும் காய­ம­டைந்­துள்­ள­னர்.

சென்ற போட்­டி­யில் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டாத ரியால் மட்­ரிட் நட்­சத்­தி­ரம் கரீம் பென்­ஸேமா இம்­முறை அணி­யில் இடம்­பெ­று­கி­றார். சென்ற போட்­டி­யில் இளம் வீர­ராக ரசி­கர்­க­ளின் மனத்­தைக் கொள்­ளை­கொண்ட கிலி­யோன் இம்­பாப்பே இந்­தப் போட்­டி­யில் முழு நட்­சத்­தி­ர­மா­கக் கள­மி­றங்­கு­கி­றார்.

இதற்­கி­டையே, காய­முற்­ற­தால் விளை­யா­ட­மு­டி­யுமா என்ற அச்­சம் இருந்­தா­லும் பெல்­ஜிய அணி­யில் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ளார் ரொமேயு லுக்­காக்கு. வர­லாற்­றில் முதன்­மு­றை­யாக சென்ற உல­கக் கிண்­ணப் போட்­டி­யில் பெல்­ஜி­யம் மூன்­றா­வ­தாக முடித்­தது.

64 ஆண்­டு­க­ளில் முதன்­மு­றை­யாக உல­கக் கிண்­ணப் போட்­டிக்­குத் தகு­தி­பெற்­றுள்ள வேல்ஸ், கேரத் பேல், ஜோ ஆலன் ஆகி­யோ­ரைத் தேர்ந்­தெ­டுத்­துள்­ளது. இப்­போது வய­தாகி களை­யி­ழந்­துள்ள பேல், சில ஆண்­டு­க­ளுக்கு முன்பு தனது விளை­யாட்­டின் மூலம் இதர குழுக்­களை அச்­சு­றுத்­தி­ய­வர்.

ஆப்­பி­ரிக்க அணி­யான சென­கோ­லின் முன்­னாள் லிவர்­பூல் நட்­சத்­தி­ரம் சாடியோ மானே காய­முற்­ற­தால் போட்­டி­யில் இடம்­பெ­று­வாரா என்ற சந்­தே­கம் தொடர்­கிறது. உல­கின் ஆகச் சிறந்த விளை­யாட்­டா­ளர்­களில் ஒரு­வ­ரா­கத் திகழ்­கி­றார் மானே.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!