செனகல் அணியில் மானே

டாக்­கார் (சென­கல்): இவ்­வாண்­டின் உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டி­யில் பங்­கேற்­க­வுள்ள சென­கல் அணி­யில் நட்­சத்­தி­ரம் சாடியோ மானே சேர்க்­கப்­பட்­டுள்­ளார்.

தனது குழு­வான ஜெர்­ம­னி­யின் பயர்ன் மியூ­னிக்­கிற்கு விளை­யாடும்­போது 30 வயது மானே காய­மடைந்­தார். அதைத் தொடர்ந்து அவர் உல­கக் கிண்­ணப் போட்­டி­யில் இடம்­பெ­று­வாரா என்ற சந்­தே­கம் இருந்தது. இப்­போது மானே சென­கல் அணி­யில் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டது உறு­தி­யா­கி­யுள்­ளது.

இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் குழு­வான லிவர்­பூ­லின் முன்­னாள் நட்­சத்­தி­ரம் மானே உல­கின் ஆகச் சிறந்த காற்­பந்து வீரர்­களில் ஒரு­வரா­கக் கரு­தப்­ப­டு­ப­வர். மேலும், ஆப்­பி­ரிக்க காற்­பந்து வர­லாற்­றில் ஆகச் சிறந்த வீரர்­களில் ஒரு­வரும்கூட.

அவர் இல்­லா­தது இந்­தப் பரு­வத்­தில் லிவர்­பூல் சிர­மப்­ப­டு­வ­தற்­கான முக்கியக் காரணம்.

இதற்­கி­டையே, நட்­சத்­திர தற்­காப்பு ஆட்­டக்­கா­ரர் செர்­ஜியோ ராமோஸ் ஸ்பெ­யின் அணி­யில் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­ட­வில்லை.

36 வயது ராமோஸ், கடை­சி­யாக சென்ற ஆண்டு மார்ச் மாதம் ஸ்பெ­யி­னுக்கு விளை­யா­டி­னார். அதற்­குப் பிறகு பிரான்­சின் பிஎஸ்ஜி குழு­விற்காக சிறப்­பாக ஆடி­ வருவதைத் தொடர்ந்து ராமோஸ் மீண்­டும் ஸ்பெ­யின் அணி­யில் சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டு­வார் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால் அவர் ர­சி­கர்­க­ளின் கனவு நிறை­வே­ற­வில்லை.

அதே வேளை­யில் ஸ்பெ­யி­னின் பார்­சி­லோனா குழு­வின் 20 வயது நட்­சத்­தி­ரம் அன்சு ஃபாட்டி ஸ்பெ­யின் அணி­யில் இடம்­பெ­று­கி­றார். ஈராண்­டு­க­ளுக்­கும் மேலாக ஃபாட்டி ஸ்பெ­யி­னுக்கு விளை­யா­ட­வில்லை.

நெதர்­லாந்து அணியில் இது­வரை இடம்­பெ­றா­தி­ருந்த ஷாவி சிமன்ஸ் சேர்க்­கப்­பட்­டுள்­ளார். அதோடு, காய­முற்றி­ருக்­கும் பார்­சி­லோனா நட்­சத்­தி­ரம் மெம்­ஃபிஸ் டிப்­பா­யும் நெதர்­லாந்து அணி­யில் இடம்­பெ­று­கி­றார்.

அதே­போல், உரு­குவே அணி­யில் காய­முற்­றி­ருந்த எடின்­சன் கவானி, ரோனல்ட் அராவ்ஹோ ஆகி­யோர் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ள­னர். வய­தா­கி­விட்­டா­லும் உரு­கு­வே­யின் லூயிஸ் சுவா­ரெஸ், கவானி போன்ற வீரர்­கள் தங்­க­ளின் ஆற்­ற­லால் மற்ற அணி­களை அச்­சு­றுத்­தக்­கூ­டி­ய­வர்­கள்.

உலகக் கிண்ணத்தை இருமுறை வென்றுள்ள அணி உருகுவே. பல ஆண்டுகள் அதிகம் சோபிக்காமல் இருந்து அண்மைக் காலமாக சற்று மீண்டு வந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!