டென்மார்க் சிறப்பு சட்டைக்கு அனுமதி இல்லை

கோப்­பன்­ஹே­கன்: இவ்­வாண்டு உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்டி கத்­தா­ரில் நடை­பெ­ற­வி­ருப்­பதை முன்­னிட்டு அந்­நாட்­டில் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் நடத்­தப்­படும் விதம் உள்­ளிட்ட விவ­கா­ரங்­க­ளின் தொடர்­பில் சர்ச்சை தொடர்­கிறது. அந்த வகை­யில் கத்­தா­ரின் மனித உரி­மை­க­ளைக் கண்­டித்து டென்­மார்க் அணி­யின் விளை­யாட்­டா­ளர்­கள் பயிற்­சி­க­ளின்­போது 'அனை­வ­ருக்­கும் மனித உரிமை' என்ற கருத்­தைக் கொண்ட சிறப்பு சட்­டை­களை அணி­யத் திட்­ட­மிட்­டி­ருந்­த­னர்.

அதற்கு அனைத்­து­ல­கக் காற்­பந்­துக் கூட்­ட­மைப்பு அனு­மதி வழங்­க­வில்லை. அதை டென்­மார்க் காற்­பந்­துச் சங்­கம் உறு­திப்­ப­டுத்­தி­யது.

இது குறித்து அனைத்­து­ல­கக் காற்­பந்­துக் கூட்­ட­மைப்பு கருத்து தெரி­விக்­க­வில்லை. எனி­னும், அணி­கள் சம்­பந்­தப்­பட்ட எந்­தப் பொரு­ளி­லும் அர­சி­யல், சம­யம் உள்­ளிட்­ட­வற்­றின் தொடர்­பி­லான கருத்­து­கள் இடம்­பெ­றக்­கூ­டாது என்­பது கூட்­ட­மைப்­பின் விதி­முறை.

கத்­தா­ரின் சட்­டங்­க­ளுக்கு எதி­ராக கண்­ட­னம் தெரி­விக்­கும் வகை­யில் தங்­க­ளின் பயிற்சிச் சீரு­டை­களில் கருத்து அச்­சி­டப்­பட்­டி­ருக்­கும் என்று டென்­மார்க் காற்­பந்­துச் சங்­கம் சென்ற ஆண்டு அறி­வித்­தது. மேலும், உல­கக் கிண்­ணப் போட்­டிக்­கான கத்­தா­ரின் விளம்­பர நட­வடிக்­கை­களில் கூடு­மா­ன­வ­ரை பங்­கேற்­ப­தைத் தவிர்க்க டென்­மார்க் அந்­நாட்­டுக்கு அதி­கம் பய­ணங்­களை மேற்­கொள்­ளாது என்­றும் அறி­விக்­கப்­பட்­டது.

சர்ச்­சை­களை ஒதுக்­கி­விட்டு காற்­பந்­தில் மட்­டும் கவ­னம் செலுத்து­மாறு அனைத்­து­ல­கக் காற்­பந்­துக் கூட்­ட­மைப்பு முன்­ன­தாக அணி­க­ளி­டம் கேட்­டுக்­கொண்­டது. அதற்கு ஆப்பிரிக்க காற்பந்துக் கூட்­ட­மைப்பு ஆத­ரவு தெரி­வித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!