கவனத்துடன் செயல்படும் உறுதியுடன் மெஸ்ஸி

பியூ­னஸ் அய்­ரஸ்: எட்டு ஆண்­டு­களுக்கு முன்பு பிரே­சி­லில் நடை­பெற்ற உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டி­யில் அர்­ஜென்­டினா இறு­தி­யாட்­டம் வரை சென்­றது. அந்த அணிக்­கும் இவ்­வாண்­டுப் போட்­டி­யில் கள­மி­றங்­க­வுள்ள அர்­ஜென்­டினா அணிக்­கும் ஒற்­று­மை­கள் இருப்­ப­தாக அதன் நட்­சத்­தி­ரம் லய­னல் மெஸ்ஸி கூறி­யுள்­ளார்.

"எந்த ஆட்­ட­மாக இருந்­தா­லும் ஒரே அள­வி­லான வேகத்­து­ட­னும் கவ­னத்­து­ட­னும் இக்­குழு விளை­யா­டு­கிறது. அது மிக­வும் முக்­கி­யம் என்­பது எனது கருத்து," என்­றார் உலகக் கிண்ணத்தை வெல்லும் கடைசி முயற்சியில் இறங்கும் 35 வயது மெஸ்ஸி.

2014ஆம் ஆண்டு உல­கக் கிண்­ணப் போட்­டி­யின் இறு­தி­யாட்­டத்­தில் ஜெர்­ம­னி­யி­டம் 1-0 எனும் கோல் கணக்­கில் தோல்­வி­ய­டைந்­தது அர்­ஜெண்­டினா.

அண்மைக் காலமாக கிட்­டத்­தட்ட ஒவ்­வோர் உல­கக் கிண்­ணப் போட்­டி­யி­லும் அதி­கம் கவ­னிக்­கப்­ப­ட­வேண்­டிய அணி­களில் ஒன்­றாக அர்­ஜென்­டினா இருந்து வந்துள்ளது. இம்­மு­றை­யும் அக்­குழு கிண்­ணத்­திற்­குக் குறி­வைக்­கும். அர்­ஜென்­டி­னா­வுக்­குத்­தான் உல­கக் கிண்­ணம் என்று அந்­நாட்­டி­னர் பலர் எண்­ணு­வ­தும் உண்டு.

அந்த மனப்­பான்­மை­யு­டன் தனது அணி­யின் வீரர்­கள் போட்­டி­யில் கள­மி­றங்­க­மாட்­டார்­கள் என்று மெஸ்ஸி குறிப்­பிட்­டார்.

'சி' பிரி­வில் அர்­ஜென்டினா, மெக்­சிக்கோ, போலந்து, சவூதி அரே­பியா ஆகிய அணி­கள் இடம்­பெ­று­கின்­றன. போட்­டி­யில் தனது முதல் ஆட்­டத்­தில் அடுத்த வாரம் செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று அர்­ஜென்­டினா, சவூதி அரே­பி­யா­வு­டன் மோதும்.

உல­கக் கிண்­ணத்தை இது­வரை இரு­முறை வென்­றுள்ள அர்­ஜென்­டினா இப்­பி­ரி­வி­லி­ருந்து எளி­தில் இரண்­டாம் சுற்­றுக்கு முன்­னே­றும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. எனி­னும், இவ்­வாண்­டின் உல­கக் கிண்­ணப் போட்டி கத்­தா­ரில் நடை­பெறு­வதால் அது சவூதி அரே­பி­யா­வுக்கு சாத­க­மாக அமையலாம் என்­றும் கூறப்படுகிறது.

இரண்டும் மத்திய கிழக்கு நாடுகள். பாலைவனங்களில் அனுபவிக்கப்படும் பருவநிலை இரு நாடுகளிலும் அனுபவிக்கப்படுவதால் அது சவூதி அரேபிய விளையாட்டாளர்களுக்கு சற்று சாதகமாக அமையலாம் எனக் கருதப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!