மெக்ரோன்: விளையாட்டை அரசியலாக்கக்கூடாது

பேங்­காக்: உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்டி தொடங்­க­வி­ருப்­பதை முன்­னிட்டு விளை­யாட்டை அர­சி­ய­லாக்­கக்­கூ­டாது என்று பிரெஞ்சு அதி­பர் இமா­னு­வெல் மெக்­ரோன் கூறி­யுள்­ளார். இவ்­வாண்­டின் உல­கக் கிண்­ணப் போட்டி கத்­தா­ரில் நடை­பெ­று­வ­தன் தொடர்­பில் சர்ச்சை தொடர்­வ­தை­யொட்டி அவர் அவ்­வாறு சொன்­னார்.

"விளை­யாட்டை அர­சி­ய­லாக்­கக்­கூ­டாது என்­பது எனது கருத்து," என்­றார் மெக்­ரான். அவ­ரின் நாடான பிரான்ஸ்­தான் உல­கக் கிண்ண நடப்பு வெற்­றி­யா­ளர்­கள்.

கத்­தா­ரின் மனித உரிமை மீறல்­கள், அந்­நாட்­டின் ஓரி­னக் காத­லர்­கள் நடத்­தப்­படும் விதம் ஆகி­ய­வற்­றின் தொடர்­பில் சர்ச்சை நில­வு­கிறது. அத­னால் அந்­நாட்­டில் உல­கக் கிண்­ணப் போட்டி நடத்­தப்­ப­டக்­கூ­டாது என்­றும் கூறப்­பட்டு வரு­கிறது. குறிப்­பாக மேற்­கத்­திய நாடு­கள் இதன் தொடர்­பில் குறை கூறி­வந்­துள்­ளன.

"போட்­டியை எந்த நாடு ஏற்று நடத்­து­வது என்­பது குறித்து முடி­வெ­டுக்­கும்­போது இது­போன்ற கேள்­வி­களை எழுப்­பி­யி­ருக்­க­வேண்­டும்," என்று தாய்­லாந்து தலை­ந­கர் பேங்­காக்­கில் திரு மேக்­ரான் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார். பேங்­காக்­கில் நடை­பெ­றும் ஏபெக் எனப்­படும் ஆசிய பசி­பிக் ஒத்­து­ழைப்பு மன்­றத்­தின் மாநாட்­டில் கலந்­து­கொள்­ளும் அவர் உல­கக் கிண்­ணத்­தைப் பற்­றிப் பேசி­னார்.

கத்­தா­ருக்கு மரி­யாதை அளிக்­கும் வகை­யில் எதிர்ப்பு தெரி­விப்­ப­தற்­கான கைப்­பட்­டையை அணி­யப்­போ­வ­தில்லை என்று பிரான்­சின் கோல் காப்­பா­ள­ரும் அதன் அணித் தலை­வ­ரு­மான ஹூகோ லோரிஸ் முன்­ன­தா­கக் கூறி­யி­ருந்­தார்.

இவ்­வாண்­டின் உல­கக் கிண்­ணப் போட்­டி­யின் அரை­யி­று­திச் சுற்­று­வரை பிரான்ஸ் சென்­றால் அந்­நி­கழ்­வைக் காண திரு மெக்­ரோன் கத்­தா­ருக்­குப் பய­ணம் மேற்­கொள்­வார். 2018ஆம் ஆண்டு போட்­டி­யில் பிரான்ஸ் கிண்­ணத்­தைக் கைப்­பற்­றி­ய­போது அதைக் காண திரு மெக்­ரோன் ரஷ்­யா­வுக்­குப் பய­ணம் மேற்­கொண்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!