‘நோய் என்னை விட்டு விலகவில்லை, நான் அதை விட்டு விலகினேன்’

புற்றுநோய் ஒரு முறை வந்துவிட்டாலே, அது நம்மை கடுமையாகப் பாதித்துவிடும். 51 வயதாகும் திருமதி மல்லிகா பெரியசாமியை (படம்) இரண்டு முறை புற்றுநோய் தாக்கியது. இருப்பினும் இவர், “வாழ்வில் துன்பங்கள் வந்தால், அதை நினைத்து துயரம் கொள்வதைவிட, நான் அதை நேர்மறையாகப் பார்க்கிறேன்,” என்று உறுதிகொள்கிறார்.

ஆகஸ்ட் 19, 2021ஆம் ஆண்டு, மல்லிகாவின் வலது மார்பகத்தில் புற்றுநோய்க் கட்டி இருப்பது உறுதியானது. புற்றுநோய்க் கட்டியாக இருந்தாலும், மல்லிகா ஒரு விதத்தில் தான் ஓர் அதிர்ஷ்டசாலி என்றார். பூஜ்ஜிய கட்ட புற்றுநோய் என்பதால், இவருக்கு அறுவை சிகிச்சையும், கதிர்வீச்சு சிகிச்சையும் போதும் என்று மருத்துவர் கூறினார். கீமோதெரபி, பொதுவாக புற்றுநோயாளிகளை அலைக்கழித்துவிடும். கிட்டத்தட்ட நான்கு செமீ அளவுகொண்ட கட்டி, வெற்றிகரமாக அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டது.

ஆனால், இந்த அதிர்ஷ்ட மும், மன துணிச்சலும், ஒரு வாரத்திற்குக்கூட நீடிக்கவில்லை. அறுவைசிகிச்சை முடிந்த மூன்று நாட்களுக்குள், மருத்துவமனையிலிருந்து மல்லிகாவுக்கு அழைப்பு வந்தது. அவருடைய மார்பகத்திலிருந்து அகற்றப்பட்ட புற்றுநோய்க் கட்டி, முதற்கட்டத்திற்கு முன்னேறிவிட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக, அவருக்கு முதல் அறுவைசிகிச்சை நடந்து ஒரு வாரத்திற்குள் மீண்டும் அதே இடத்தில் இரண்டாவது அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இம்முறை அவர் கதிர்வீச்சு சிகிச்சையோடு சேர்த்து, கீமோதெரபிக்கும் செல்ல வேண்டியிருந்தது.

அறுவைசிகிச்சைக்கு சில நாட்களுக்கு முன்பு, மல்லிகா திடீரென ஒரு முடிவெடுத்தார். புற்றுநோய்க் கட்டியை மீண்டும் மீண்டும் அறுவைசிகிச்சை மூலம் அகற்று வதற்குப் பதிலாக, ஒரேயடி யாக தன்னுடைய வலது மார்பகத்தை மாஸ்டெக்டெமி மூலம் எடுத்துவிடலாம் என்று முடிவெடுத்தார்.

அவருடைய விருப்பத்திற்கேற்ப மல்லிகாவின் வலது மார்பகம் முழுமையாக அகற்றப்பட்டது. மல்லிகாவின் வலது காது பகுதியில், சில ஆண்டு காலமாகவே வளர்ந்துவந்த கட்டி, புற்றுநோய்க் கட்டி என்றும் உறுதிப்படுத்தப்பட்டது.

“புற்றுநோய் வந்துவிட்டது என்று சிதைந்துவிடாமல், சாதாரண மனிதரைப் போல வாழுங்கள்,” என்று கூறினார் மல்லிகா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!