சூட்டைத் தணிக்கும் பானங்கள்

வெய்­யில் கொளுத்­து­கிறது. அவ்­வப்­போது மழை பெய்­தா­லும் பெரும்­பா­லும் 30 டிகி­ரிக்கு அதி­க­மா­கத்­தான் வெப்­ப­நிலை உள்­ளது. இதனால் உடல் வெப்­ப­மும் அதி­க­ரிக்­கிறது.

உடல் வெப்­ப­நிலை சீராக இருக்­கும் வரை உட­லில் பாதிப்பு நேராது. உடல் வெப்­ப­நிலை அதி­க­ரிக்­கும் போது உடல் சூடு, கண்­களில் எரிச்­சல், வயிற்று வலி, அமி­லத்­தன்மை அதி­க­ரிப்­பது, வாயு போன்ற செரி­மா­னப் பிரச்­சி­னை­களை உண்­டாக்கக்கூடும்.

நீரேற்­ற­மாக இருப்­பது உடல் சூட்­டைக் குறைக்­கும் ஒரு­வழி. அதி­க­பட்ச நீரேற்­றத்­திற்கு நிறைய தண்­ணீர் குடிக்க வேண்­டும்.

நீர் குடிக்க வேண்­டு­மென்­றால் இத­மாக சில்லென்ற குளிர்­பா­னங்­களே பெரும்­பா­லா­னோ­ரின் தேர்­வாக இருக்­கும். ஆனால், தேங்­காய் - இள­நீர் ஷேக்­கு­கள், பபிள் டீ போன்ற பானங்­களில் சர்க்­கரை அதி­க­மாக இருக்­கும்.

இனிப்பு இல்­லாத பானங்­கள் பல­ருக்­கும் பிடிக்­கா­மல் இருக்­கும். இனிப்­பைக் குறைத்துக்­ கொள்­ள­லாம். அல்­லது வெள்­ளைச் சீனிக்­குப் பதி­லாக நாட்­டுச் சக்­கரை, பனை­வெல்­லம், தேன் போன்­ற­வற்­றைப் பயன்­ப­டுத்­த­லாம்.

ஆனால், இவற்­றில் கலோரி குறை­வாக இருப்­ப­தில்லை. வெள்­ளைச் சர்க்­க­ரை­யைப் போலவே இவற்­றி­லும் ஒரு தேக்­க­ரண்­டி­யில் 40 முதல் 70 கலோ­ரி­கள்­வரை இருக்­கும்.

ஸ்டீ­வியா, மாங்க்­ஃப்­ரூட் போன்ற கலோரி இல்­லாத இனிப்­பும் உண்டு.

இயற்­கை­யா­கக் கிடைக்­கும் இள­நீர், நுங்கு, தர்ப்­பூ­சணி, வெள்­ளரி, பத­நீர், எலு­மிச்­சைச் சாறு, கரும்­புச் சாறு, பழச்­சா­று­கள் போன்ற பானங்­களை அருந்­த­லாம்.

வெந்­த­யத் தண்ணி, சோம்­புத் தண்ணி போன்­றவை உடல் வெப்­பத்தைக் குறைக்­கும் தன்மை கொண்­டவை.

வெப்­பத்­தைக் குறைக்­கும் சில சுவை­யான பானங்­களை இங்கே பார்க்கலாம்.

அன்னாசி இளநீர்

தேவையான பொருள்கள்

300 கிராம் உறைந்த அன்னாசித் துண்டுகள்

500 மில்லி குளிர்ந்த இளநீர்

4 - 5 புதினா இலைகள், சுவைக்கு இனிப்பு

செய்முறை

எல்லாப் பொருள்களையும் பிளெண்டரில் போட்டு அரைத்து, கண்ணாடிக் குவளையில் விட்டு பருகவும்.

தேவை­யான பொருள்கள்

3 லெமன்­கி­ராஸ்

10-12 பாண்­டன் இலை­கள்

1 லிட்­டர் தண்­ணீர்

சுவைக்கு இனிப்பு

செய்­முறை

லெமன்­கி­ரா­சின் வேர், முனைப் பகு­தி­களை வெட்டி அப்­பு­றப்­ப­டுத்­த­வும். வெளிப்­புற அடுக்கை­யும் உரித்­து­வி­ட­வும். நடுப்­ப­கு­தியைக் குறுக்­காக மெல்­லிய வட்­டங்­க­ளாக வெட்டி, பெரிய பாத்­தி­ரத்­தில் போடவும். தண்ணீர் விட்டு அடுப்­பில் வைக்கவும்.

பாண்­டன் இலை­க­ளை­ நன்கு கழுவி, நடு­வில் பாதி­யா­கக் கிழித்துக்கொள்ளவும். பிறகு 4 முதல் 5 சென்­டி­மீட்­டர் நீளத்­திற்கு வெட்டி, கொதிக்­கும் நீரில் போடுங்­கள்.

தண்­ணீர் சூடானதும் அடுப்பைக் குறைத்­து­வைத்து 20 நிமி­டங்­கள் கொதிக்க விட­வும்.

பிறகு அடுப்பை அணைத்­து­விட்டு, பனை வெல்­லம் அல்­லது நாட்­டுச் சர்க்­க­ரையை தேவை­யான அளவு சேர்க்­க­வும். கரையும் வரை கிள­ற­வும்.

ஆற­விட்டு, வடி­கட்டி குளிர்­சா­தனப் பெட்­டி­யில் வைத்து குளிர்­ப­டுத்தி குடிக்­க­வும்.

தேவை­யென்றால் குளிர்­நீர் அல்லது ஐஸ்­கட்­டி­கள் சேர்த்­துக்­கொள்­ளலாம்.

பாண்டன் லெமன்கிராஸ் பானம்

புதினா தேநீர்

ஒரு கைப்­பிடி அளவு புதி­னாவை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடி­கட்­ட­வும். தேன் கலந்து பரு­க­லாம். இதை சூடா­க­வும் குடிக்­க­லாம், குளி­ர­வைத்­துக் குடிக்­க­லாம். புதினா குளிர்ச்சித் தன்மை கொண்­டது.

ஸ்ட்ராபெர்ரி சாறு

லவங்கப்பட்டை, ஸ்ட்ராபெர்ரி பானம்: 4-5 ஸ்ட்ராபெர்ரி பழங்களை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். சிறிது லவங்கப்பட்டை, புதினா சேர்த்து பிளெண்டரில் போட்டு அரைக்கவும். பின் வடிகட்டி, ஒரு மணி நேரம் கழித்து பருகலாம். விரும்பினால் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிர்படுத்தியும் பருகலாம். உடல் வெப்பத்தைக் குறைப்பதோடு எடை குறையவும் உதவும்.

சுவை மோர்

பசியின்மை, செரிமானக் கோளாறு உள்ளவர் களுக்கும் அதிக உடல் எடை கொண்டவர்களுக்கும் மோர் சிறந்த நிவாரணம் தரும். வயிறு சார்ந்த பிரச்சினை உள்ளவர்கள் தினமும் மோர் அருந்துவது நல்லது. பிளெண்டரில் ஒரு மேசைக்கரண்டி தயிரை விட்டு, தேவையான அளவு தண்ணீர், சிறிதளவு புதினா, கொத்தமல்லி இலைகள், சிறிதளவு கேரட் சேர்த்து விழுதாக அரைத்து பருகலாம்.

கற்றாழை பானம்

கற்றாழையின் சதைப்பகுதியைச் சுரண்டி எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி வழுவழுப்பு போக தண்ணீரில் நன்கு கழுவிக் கொள்ளுங்கள்.

சில துண்டுகளைத் தனியாக எடுத்து வைத்துவிட்டு, மீதியை பிளெண்டரில் போட்டு தண்ணீர் விட்டு அரையுங்கள். பின் அதில் எடுத்துவைத்திருக்கும் கற்றாழைத் துண்டுகள் சிறிதளவு தேன் கலந்து பருகலாம்.

வெள்­ளரி

எலு­மிச்சை

தேவை­யான பொருள்கள்

1 சிறிய ஜப்­பா­னிய வெள்­ளரி, 120 முதல் 150 கிராம்

1 எலு­மிச்சை

¼ தேக்­க­ரண்டி உப்பு

300 முதல் 350 மில்லி தண்­ணீர், (டானிக் வாட்­டர், சோடா போன்­ற­வற்றை சேர்க்க­லாம்.)

செய்­முறை

வெள்­ள­ரிக்­கா­யின் முனை­களை வெட்டி விட்டு, வெள்­ள­ரிக்­காயை குறுக்­காக சிறு துண்­டு­க­ளாக நறுக்­க­வும். பிளெண்­ட­ரில் போட்டு அரைக்­க­வும். பின் அதில் எலு­மிச்­சையை சாறு பிழிந்து விட­வும். தண்­ணீர், உப்பு சேர்த்து கலக்­க­வும். தேவை­யா­னால் இனிப்­புச் சேர்க்க­லாம். கலந்து உடனே குடித்­து­வி­டுங்­கள்.

பேஷன்­ஃப்­ரூட் தேநீர்

தேவை­யான பொருள்கள்

600 மில்லி லிட்­டர் தண்­ணீர்

4 பச்சை தேயிலை (கிரீன் டீ) பைகள்

2 பேஷன்­ஃப்­ரூட், சுவைக்கு இனிப்பு

செய்­முமுறை

சுடு­நீ­ரில் தேநீர் பைக­ளைப் போட்டு 10 நிமி­டங்­கள் ஊற விட­வும். பிறகு பைகளை அகற்றி, ஆற­வி­ட­வும். குறைந்­தது மூன்று மணி­நே­ரம் குளிரூட்­ட­வும். பேஷன்­ஃப்­ரூட் பாதி­யாக வெட்டி, பழத்தை பிளெண்­ட­ரில் போட்டு அரைக்­க­வும். அதில் குளிர்ந்த தேநீர் சேர்த்து கலக்­க­வும். விருப்­ப­மான இனிப்­பைச் சேர்த்து உடனே குடியுங்­கள்.

தர்ப்பூசணி சோஜு

தேவையான பொருள்கள்

800 கிராம் முதல் 1 கிலோ வரை தர்ப்பூசணி சதை

360 மில்லி லிட்டர் பாட்டில் சோஜு

2 பெரிய பொடி எலுமிச்சை (லைம்) சாறு

செய்முறை

எல்லாப் பொருள்களையும் பிளெண்டரில் போட்டு அரைத்து குவளையில் விட்டு பருகவும்.

தர்ப்பூசணி சதையைச் சுரண்டி எடுத்த பழத்தின் ஓட்டில் விட்டுப் பருகும்போது சுவையே தனி!

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!