வயிற்று சூட்டைத் தீர்க்க வழிகள்

கோடை வெயிலால் ஏற்படும் வயிற்றுப் பிரச்சினைகள்

கோடை வெயில் வாட்­டும் இந்த கால­கட்­டத்­தில் பலர் வயிற்றுப் போக்கு, இரைப்பை அழற்சி, வாந்தி, குமட்­டல் போன்ற வயிற்று பிரச்­சி­னை­க­ளால் மருத்­து­வ­ம­னை­களை நாடு­வது அதி­க­ரித்து உள்­ளது என்று குடும்ப நல மருத்­து­வர் சிம் சாய் ஜென் கூறி­யுள்­ளார். மருத்­து­வ­ம­னை­யின் அவ­ர­ச­ர சிகிச்­சைப் பிரி­வி­லும் இது­போன்ற கார­ணங்­க­ளால் பலர் அணு­கி­ய­தாக கூறப்­ப­டு­கிறது.

வயிற்று சூடு என்­பது எல்­லா­ரும் சந்­திக்­கும் ஒரு பொது­வான பிரச்­சி­னை­யாக உள்­ளது. வயிற்று சூடு அதி­க­ரிக்­கும்­போது ஏரா­ள­மான பிரச்­சி­னை­களும் சேர்ந்து தொற்­றிக் கொள்­கிறது.

வயிறு நிரம்­பிய உணர்வு, வீக்­கம், தொடர்ந்து வயிற்று வலி, நெஞ்சு எரிச்­சல், குமட்­டல் மற்றும் சில உண­வு­கள் ஒவ்­வாமை போன்ற உணர்வு ஏற்­படும்.

கார­ணங்­கள்:

இந்த வயிற்று சூடா­னது உண­வு­கள் செரிப்­ப­தில் பல பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்­தும். வயிற்­றின் வெப்­ப­நிலை அதி­க­ரிக்க குறி­ப்பிட்ட கார­ணம் என்று எது­வும் இல்லை.

பொது­வாக கார­மான உண­வு­கள், அதி­க­மாக சாப்­பி­டு­வது, தாம­த­மாக சாப்­பி­டு­வது, அதிக ஆல்­க­ஹால் குடிப்­பது, அதிக மாத்­தி­ரை­கள் எடுத்­துக்­கொள்­வது, உட்­கார்ந்த வாழ்க்கை முறை, புகைப்­ப­ழக்­கம் போன்­றவை இதன் கார­ணங்­கள் ஆகும்.

வயிற்­றுச்­சூட்­டைக் குறைக்­கும் உண­வு­கள்:

பெரும்­பா­லான பால் பொருட்­கள் ஜீர­ணிப்­பது கடி­ன­மா­னது. ஆனால் தயிர் சற்று எதிர்­ம­றை­யான குணங்­க­ளைக் கொண்­டது. இதில் உள்ள பல பண்­பு­கள் குட­லில் நல்ல பாக்­டீ­ரி­யாக்­களை உரு­வாக்கி வயிற்­றின் சூட்டை குறைத்து செரி­மா­னத்தை அதி­க­ரிக்­கிறது. தயிர் பிடிக்­காது என்­றால் மோர் குடிக்­க­லாம். அது­வும் நல்ல பல­னைத்­ த­ரும்.

குளிர்ந்த பால் வயிறு

வெப்­ப­நி­லையை குறைப்­ப­தோடு வயிற்­றின் அமி­லத்­தன்­மையையும் குறைக்­கிறது. இதில் உள்ள சில பண்­பு­கள் வெப்­பத்­தால் வயிற்­றில் ஏற்­ப­டக்­கூ­டிய அசௌ­க­ரி­யத்தை குறைக்­கிறது. தின­மும் குளிர்ந்த பாலை பச்­சை­யாக குடிப்­பது சூட்­டால் ஏற்­படும் பிரச்­சி­னையைக் குறைக்­கிறது.

வயிறு சூட்­டின் அறி­

கு­றி­க­ளாக அசௌ­க­ரி­யத்தை தவிர வேறு எது­வும் உண­ர­

மு­டி­யாது. இதற்கு சிறந்த மருந்து சோறாகும். சோறு வயிற்று சூட்டை குறைத்து உட­லில் நீரின் அளவை அதி­க­ரிக்­கிறது. சோற்றில் எந்­த­வித மசாலாப் பொருட்­க­ளை­யும் சேர்க்­கக்­கூ­டாது. இத­னைத் தயி­ரு­டன் சேர்த்­து உண்­ண­லாம்.

சிட்­ரிக் அமி­லம் இல்­லாத உண­வு­கள் மற்­றும் பழங்­களை தேர்ந்­தெ­டுத்து உண்­ண­லாம். ஆப்­பிள், வெள்­ள­ரிக்­காய், தர்­பூ­சணி போன்ற பழங்­களில் சிட்­ரஸ் அமி­லத்­தின் அளவு குறை­வாக இருப்­ப­து­டன் நீர்­சத்­துக்­களும் அதி­கம் உள்­ளது. இவை வயிற்­றின் வெப்­ப­நி­லையை குறைப்­ப­து­டன் செரி­மா­னத்­தை­யும் சீராக்­கு­கிறது.

பல்­வேறு வித­மான உணவுப் பழக்­கங்­க­ளால் ஏற்­படும் வயிற்று­சூட்டை தணிக்க அதி­க­ளவு தண்­ணீர் குடிக்க வேண்­டும். தண்­ணீர் நமது உட­லில் உள்ள தேவை­யற்ற நச்­சுக்­களை வெளி­யேற்ற உத­வு­வ­து­டன் செரி­மான மண்­ட­லத்­தை­யும் சீராக்­கு­கிறது.

இள­நீர் உடல் சூட்டை தணித்து வெப்­ப­நி­லையை சம­நி­லைப்­ப­டுத்த உத­வு­கிறது. இதற்கு கார­ணம் இதில் உள்ள அல்­க­லைன் ஆகும். இது மற்ற உண­வு­க­ளால் ஏற்­படும் சூட்டை குறைக்­கிறது. மூச்சுப் பயிற்சி ஒரு சிறந்த உடற்­ப­யிற்சி ஆகும். எனவே ஆழ்ந்து சுவா­சிக்­கும்போது குடல் குளிர்ச்சி அடை­யும். இது நெஞ்­செ­ரிச்­சல் மற்­றும் வயிற்று பிரச்­சி­னை­களை குறைக்க உத­வு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!