பட்டத்து யானை..

சிறுகதை

காசாங்காடு வீ காசிநாதன்

உண்­மைக்கு அப்­பாற்பட்­டது கற்­பனை.

சில நேரங்­களில் உண்­மை­யு­டன் 'பிணைந்­தும்' இருக்­கும்.

கற்­பனை…. முழு­தும் 'பொய்' என்று சொல்­லி­விட முடி­யாது!

புனை­வு­களில் சிறிது 'உண்­மை­யும் கற்­ப­னை­யும்' கலந்த கல­வை­யாய் இருந்­தால் படிப்­ப­வர்­க­ளுக்கு உற்­சா­கத்தை ஏற்படுத்­தும். இக்­கதை… நடந்த சரித்­திர உண்­மை­க­ளை­யும் அத­னு­டன் கற்­ப­னை­யை­யும் உள்­ள­டக்­கி­யது.

வர­லாற்­றில் எத்­த­னையோ போர்­கள் நடந்­தி­ருந்­­தா­லும், அவற்­றில் சில தமி­ழ­கத்­தின் வர­லாற்றை மாற்­றி­யுள்­ளது, அப்­ப­டிப்­பட்ட போரில் குறிப்­பிட்டு நாம் பார்க்க வேண்­டிய ஒன்று… 'தெள்­ளாற்று போர்'.

'தெள்­ளாறு'… இன்­றைக்கு திரு­வண்­ணா­மலை மாவட்­டம், வந்­த­வாசி வட்­டத்­தில் இருக்­கும் ஒரு சிறிய கிரா­மம். அங்கு இருப்­ப­வர்­க­ளுக்கே இதைப்பற்றி தெரி­யுமா என்று தெரி­யாது.

பல்­ல­வர்­கள் காஞ்­சியைத் தலை­ந­க­ராகக் கொண்டு கி.பி.200 முதல் கி.பி.850 வரை சுமார் அறு­நூற்று ஐம்­பது ஆண்டு தமி­ழ­கத்­தில் வலி­மை­யு­டன் ஆட்சி புரிந்­த­வர்­கள். அவர்­களில் முக்­கியமான­வர் பல்­லவ மன்­னர் மூன்­றாம் நந்­தி­வர்­மன். (கி.பி.825-850)

அவர் புத்­தி­சா­லி­யான நிர்­வாகி, மிக­வும் தந்­தி­ர­சாலி. எதி­ரி­களைச் சூழ்ச்­சி­யால் வெற்றி கண்­ட­வர். அப்­போது பாண்­டி­யர்­கள், சோழர்­கள் அங்­கும் இங்­கு­மாய் சிற்­ற­ரசர்­க­ளா­கவே இருந்து ஆட்சி செய்து வந்­த­னர்.

தெள்­ளா­றில் நடந்த போரில் பாண்­டிய மற்­றும் சோழர் படையை எதிர்கொண்டு அதில் வெற்­றி­யும் கண்­டார். அதோடு விட்­டாரா? அவர்­களை கடம்­பூர், வெறி­ய­லூர், வெள்­ளாறு, பழை­யாறு ஆகிய இடங்­களில் எதிர்­கொண்டு பாண்­டிய நாட்டு எல்லை வரை ஓட ஓட விரட்­டி­னார். அவர்­கள் பல்­ல­வர்­க­ளுக்கு கப்­பம் கட்­ட­வும் உடன்­பட்­ட­னர்! அது முதல் நந்­தி­வர்­மன் 'தெள்­ளாறு எறிந்த நந்­தி­வர்­மன்,' எனப் போற்­றப்­பட்­டான்.

'தீப்­பந்­தங்­களை' எறிந்து எதி­ரி­களைத் திக்­கு­முக்­காடச் செய்து போரில் 'வெற்றி' பெற்­ற­தால் இந்­தப் பெயர் பெற்றான் நந்திவர்மன். இந்த போர் குறித்து ஏரா­ள­மான கல்­வெட்­டு­கள் காணக் கிடைக்­கின்­றன, இந்த வெற்­றிக்­குப் பிறகு பல்­ல­வர்­கள் பெரி­தும் 'வலிமை பெற்­ற­னர்', இறு­திக்­கா­லம் வரை நந்­தி­வர்­மனைக் கண்டு பகை­வர்­கள் அஞ்­சி­னர்.

பல்­ல­வர்­கள் தங்­கள் வலி­மையை நிலை­நி­றுத்­திய போராக இது விளங்­கி­யது.

இவ்­வாறு இந்த இடத்­தில் நடந்த பெரும் போருக்கு பின்­னர் தமி­ழ­கத்­தின் வர­லாற்­றின் பாதையே மாறி­யுள்­ளது. அந்­தப் போரில் நடந்த மனதை உருக்­கும் ஒரு சம்­ப­வ­மும் உண்டு.

அன்று அமா­வா­சை­யின் அடுத்­த­நாள்… பாட்­டு­வம் என்­பார்­களே அதே­தான்.

தெள்­ளாற்றுப் போர், மர­பு­களை 'மீறிய' ஒரு போர்.

போர்ப்­ப­டை­க­ளின் வலி­மையை மட்­டும் கணக்­கில் கொண்டு போரில் வெற்றி பெற முடி­யாது.

போருக்கு முந்­தைய மந்­திர ஆலோ­ச­னை­யும், அதன் மூலம் எட்­டப்­படும் போர்த் தந்­தி­ரங்­க­ளுமே ஒரு போரின் வெற்­றியை நிர்­ணயிக்­கும் என்­ப­தற்கு "தெள்­ளாற்­றுப் போர்" ஒரு வர­லாற்று உண்மை.

இந்­தப்­போர் பல்­லவ அர­சர் நந்தி­வர்­மன் தலை­மை­யில் ராஷ்­டிர கூடர்­கள், கங்­கர்­கள் கூட்­ட­ணி­யு­டன், பாண்­டிய மன்­னன் சீவல்­ல­பன் மற்­றும் சோழ அர­சர்­கள் சில­ரது கூட்­டுப் படைக்­கும் இடையே நடந்­தது.

படை வலி­மை­யில் பாண்­டி­யன் அணியே பெரி­யது, பல்­லவ அர­ச­னு­டைய யானை, குதிரை மற்­றும் போர்­வீ­ரர்­கள் எனப் படை­வ­லிமை எல்லா வகை­யி­லும் அள­வில் சிறி­யது.

வழக்கமாகத் தொடர்ந்து 'இரண்டு நாட்­களோ' அல்­லது 'இரண்டு வாராங்­களோ' நடை­பெ­றும் போர் "வெறும் 8 மணி" நேரத்­தில் முடிந்­தது, பல்­லவ அர­சர் நந்­தி­வர்­ம­னுக்கே வெற்றி. போரில் அவன் பின்­பற்­றிய 'ராஜ­தந்­தி­ரமே' வெற்­றிக்­க­னியைப் பறித்­தது.

பண்­டைக்­காலபோர்­ 'பெளர்­ணமி' இரண்டு நாட்­க­ளுக்கு முன்பு பக­லில் ஆரம்­பிக்­கும்.

இர­வில் நில­வின் ஒளி­யில் போர் நடை­பெ­று­வ­தை­யும், ஆட்­கள் நட­மா­டு­வ­தைத் தெரிந்­து­கொள்ள பெரி­தும் உத­வும்.

ஆனால் 'இந்­தப் போர்' அறி­வித்த சில நாட்­க­ளி­லேயே அமா­வாசை 'இர­வில் நடு­நி­சி­யில்' ஆரம்­பித்­தது,

"வாண வேடிக்­கை­போல்" நூற்­றுக்­க­ணக்­கான பெரிய "தீப்­பந்­தங்­களை விசை ஈட்­டி­கள்" மூலம் எதிரி நாட்டு வலி­மை­யான யானை, குதி­ரைப்­ப­டை­க­ளின் மீது பல்­லவ போர்­வீ­ரர்­க­ளால் எறி­யப்­பட்டு அவ்­விரு படை­களும் அதிர்ச்­சி­யில் "சின்­ன­பின்­ன­மாக" சித­றுண்டன.

அது மட்­டுமா செய்­தார்­கள் பல்­ல­வர்­கள்? போர் ஆரம்­பித்த நடு­நி­சி­யில் சில மணி நேரத்­திற்­கெல்­லாம் வானில் பல­இ­டங்­களில் தீச்­சு­வா­லை­யு­டன் கூடிய "எரி­யும் அம்­பு­களை" வானில் செலுத்­தி­னர்.

பாய்­ம­ரக் கப்­பல் ஆபத்­தான சூழ­லில் இருக்­கும்­போது இர­வில் பிற­ரி­டம் உதவி கோர 'சிக்னல்' கொடுக்­கவே அவ்­வாறு எய்­வது வழக்­கம்.

தரைப்­ப­டை­யில் எரி­யும் 'அம்­பு­களை' பயன்­ப­டுத்­து­வது இல்லை.

எரி­யும் அம்­பு­கள் வானில் செல்­வதை அறிந்த பாண்­டிய, சோழப் படைத்­த­லை­வர்­கள் அவை பல்­ல­வர்­க­ளின் படை­வீரர்­க­ளுக்கு திட்­ட­மிட்­ட­படி 'சிக்­னல் கொடுக்­கி­றார்­கள்' என்­பது தெளி­வா­னது.

என்ன செய்­யப்­போ­கி­றார்­கள்?... எப்­ப­டி­யான ஆபத்து வரும்?.... என்­பதை பாண்­டி­யப் படைத்­த­ள­ப­தி­களால் யூகிக்க முடி­ய­வில்லை…

சிறிது நேரத்­தில் அந்த ஆபத்து ஊரில் தூங்­கிக் கொண்­டி­ருந்த "பொது­மக்­க­ளின் கூக்­கு­ரல்" மூலம் தெரிந்­தது.

பல்­லவ படை­வீ­ரர்­கள் பெரிய நீர்த்­தேக்க 'ஏரியை' உடைத்து விட்­டி­ருந்­த­னர்.

அமைச்சரவை ஆலோ­ச­னை­யின்போதே இதற்கு எதிர்ப்பு எழுந்­தது. நந்­தி­வர்­மன் அதற்கு தனக்கே உரிய 'புத்­தி­சா­லித்­த­ன­மான' பதிலை அளித்­தார்.

நீர்த்­தேக்­கம் குறித்து அனைத்து விவ­ரங்­க­ளை­யும் ஒற்­றர் மூலம் அறிந்துகொண்­டுள்­ளேன்.

நீர்த்­தேக்­கத்தை உடைப்­பது இந்­தப் போரில் முக்­கிய கருவி. "வாழ்­வா­தா­ரத்தை அழிப்­பது" நோக்­க­மல்ல.

நீர்த்­தேக்­கத்­தின் நடு­வில் உடைப்பு ஏற்­ப­டுத்­தி­னால் தண்ணீர் முழு­வ­தும் வீணாகும்.

'மேடான' பகு­தி­யில் ஒரு இடத்­தில் 'உடைப்பு' ஏற்­ப­டுத்­தப்­படும்.

இதன் மூலம் அதிக தண்­ணீர் போர்க்­க­ளப் பகு­திக்கு வந்து எதிர் அணி­யி­னர் தடு­மா­று­வர்.

ஏரி­யின் கொள்­ளள­வில் பாதிக்கு சற்று மேலான தண்­ணீரே வெளி­யா­கும்.

ஊருக்­குள் தண்­ணீர் முழங்­கால் அளவே இருக்­கும்.

இத­னால் 'குழப்­பம்' ஏற்­ப­டுமே தவிர உயிர் இழப்பு இருக்­காது.

'வெற்­றிக்­குப்­பின்' நமது வீரர்­கள் ஏரியை 'மறு­சீ­ர­மைப்பு' செய்­வார்­கள். மழைக்­கா­லம் 'இன்­னும்' முடி­ய­வில்லை. பிறகு ஏரி நிரம்­பும் என விளக்­க­ம­ளித்­தி­ருந்­தார்.

மழைக்­கா­லத்­தில் நடந்த போர் எனவே ஏரி­யில் தண்­ணீர் நிரம்பி கடல் போல் இருந்­தது.

இர­வில் ஏரியை உடைத்து விட­வும் நதி­யைப் போல் பெருக்­கெ­டுத்து ஊருக்­குள் தூங்­கும் மக்­க­ளின் வீடு­க­ளுக்­குள் தண்­ணீர் புகுந்து அனை­வ­ரும் அல­றிப் புடைத்து வீட்டை விட்டு வெளி­யே­றி­னர்.

வெளி­யி­லும் வெள்­ளம்…என்ன நடக்­கின்­றது என்றே தெரி­ய­வில்லை.

எங்­கும் யானை­கள், குதி­ரை­களின் தாறு­மா­றான நகர்­வு­கள்.. காலற்­ப­டை­கள் ஆக்­ரோ­ஷ­மாக வாள்­க­ளைக் கொண்டு சண்­டை­யி­டும் சத்தங்­கள்.. படை வீரர்­க­ளின் அல­றல்­கள்.. எங்­கும் இரத்த வெள்­ளம்…

ஊருக்­குள்­ளும் போர் நடை­பெ­றும் இடங்­களில் தண்­ணீர் புகுந்­த­தால் மக்­க­ளின் அழு­கு­ரல்­கள்.. தண்­ணீ­ரில் இரத்­தம் கலந்து சிவப்பு ஆறு­போல் ஓடி­யது.

விடி­கா­லை­யில் தண்­ணீர் வரு­வது 'குறைந்து' ஆங்­காங்கே சில இடங்­களில் தண்­ணீர் தேங்கி இருந்­தது.

கதி­ர­வன் உத­ய­மான காலைப்­பொழு­தில் போர் நின்­றது. எங்­கும் 'அல­றல்­கள்' நிற்­க­வில்லை. கதி­ர­வன்கூட இந்த 'கோர' நிகழ்ச்­சியை காண வேண்­டுமா? என அச்­சப்­பட்டு தனது கதிர்­களை முழுமையாக வெளி­யி­ட­வில்லை.

மேகக் கூட்­டம் கரு­மை­யாக கிழக்கு வானில் தடை­போட கரு­மே­கங்­களில் தெரிந்த இடை­வெ­ளி­யில் கதி­ர­வன் சற்று 'மெது­வாக' தனது வெண்­ணொ­ளியை தெள்­ளாற்­றில் பர­வ­விட்டான்.

போர் நடந்த இடத்­தில் பிணக்­குவி­யல்­கள்.. கைகால் வெட்­டப்­பட்ட மனித உடல்­கள்...

அம்­பு­க­ளால் தாக்­கப்­பட்டு தரை­யில் குன்­று­கள்போல் சரிந்து கிடந்த யானை­கள்.. முன்­னங்­கால்­களை மடக்­கி­ய­ப­டியே ஈட்டி பாய்ந்த குதி­ரை­கள்..

'சக­தி­போல்' தேங்­கிக் கிடந்த இரத்­தம் கலந்த 'செந்­நீர்'..

அங்­காங்கே வட்­ட­ம­டித்த கழுகுக் கூட்­டங்­கள், பருந்­து­கள், பற­வை­கள் என அப்­ப­குதி 'ரண­க­ள­மாக' இருந்­தது.

நந்­தி­வர்­மன் போரில் 'வெற்றி' பெற்­ற­தின் அடை­யா­ள­மாக வெற்­றிச் "சங்­கொலி ஊத­வும் முர­சும்" கொட்­டி­யது.

*

தனது ஒரே மக­னைப் போருக்கு அனுப்­பிய பாண்­டிய நாட்டு பெண்­மணி ஒரு­வர் மோச­மான போர்க்­களத்­தில் கையில் 'ஒரு­செம்­பு­டன்' நடந்­து ­வந்து கொண்­டி­ருந்­தாள்.

பாண்­டிய நாட்­டுக் 'கொடியை' தனது முது­கில் சுமந்­த­படி 'பட்­டத்து' யானை ஒன்று சற்றுத் தூரத்­தில் தள்­ளா­டி­ய­ப­டியே அசைந்து வந்­தது.

எதையோ 'தேடி­ய­படி' இறந்து கிடந்த சட­லங்­க­ளின் முகத்தை திருப்பிப் பார்த்­துக் கொண்­டி­ருந்­தது.

பார்த்த முகம் யானைக்கு 'தொடர்­பற்­றது' என உணர்ந்­த­தும் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சட­லங்­களை மிதித்து விடா­மல் 'ஒதுக்கி ஒதுங்கி நடந்­தது.

உட­லில் 'ஈட்டி' பாய்ந்­த­தால் 'குருதி' பல­இ­டங்­களில் வழிந்து அதன் கருமை நிறத்­தில் 'சிவப்புச் சாயம் அடித்­தது போல்' இருந்­தது.

கண்­கள் 'வறண்டு' கிடந்­தது.

ஓர் இடத்­தில் குவிந்து கிடந்த 'சட­லங்­களை' ஒன்­ற­பின் ஒன்­றாக ஒதுக்கி அடி­யில் கிடந்த ஒரு 'உடலை' தனது நீண்ட துதிக்­கை­யால் வெளி­யில் இழுத்­தது.

அந்த உட­லின் முகத்­தைப் பார்த்த உடனே அதன் முகத்­தில் 'மகிழ்ச்சி ரேகை­கள்' பர­வி­யது.

அடுத்த 'நிமி­டமே' எந்த அசை­வும் இன்­றிக் கிடந்­த­தால் அதன் கண்­களில் இருந்து "கண்­ணீர் பொல.. பொல­வென" வழிந்­தது.

இதைத் தூரத்­தி­லி­ருந்து பார்த்­த­தும் மக­னைத் தேடி­வந்த தாய் அந்த இடத்தை நோக்கி நடந்துவந்­தாள்.

ஆம்.. அது மூர்ச்­சை­யான பாண்­டிய மன்­னன் சீவல்­ல­ப­னின் உடல்.

அப்­ப­டியே அந்த உடலை 'மெது­வா­கப்' போட்­டு­விட்டு யானை சற்று அரு­கில் இருந்த சம­வெ­ளியை அடைந்­தது.

மன்­ன­னின் உடல் கிடந்த பகுதியைப் பார்த்­த­ப­டியே தனது 'துதிக்­கையை' மேலே தூக்கி 'அதிக பட்ச ஓசை­யு­டன்' பிளிறி­யது.

அந்த சத்தம் போர்க்­க­ளத்தைத் தாண்டி, வயல் வெளி­க­ளை­யும் தாண்டி அந்த ஊர் எல்­லை­யை­யும் தாண்டி ஆகா­யத்­தில் கலந்­தது.

துதிக்­கையை 'கீழே சரித்து' பட்­டத்து யானை அங்­கேயே 'தொப்­பென' விழுந்து அசை­வற்­றுக் கிடந்­தது.

யானை விழுந்து ஒரு­முறை குலுங்கி 'அதிர்ந்­தது'. அதன் பின் 'சல­னமின்­றிக்' கிடந்­தது.

யானை ஏற்­ப­டுத்­திய அதிர்­வில் பிணங்­க­ளி­டையே இருந்த கழு­கு­கள், பருந்­து­கள், காக்­கை­கள் குரு­வி­கள் 'வானில்' பறந்­தன.

மக­னைத் தேடி­வந்த தாய் யானை இருந்த இடத்தை வந்து பார்த்­த­போது ஒரு சட­லம் மூர்ச்­சை­யா­கிக் கிடந்­தது.

உடை­கள் மன்­ன­ரின் 'தோற்­றத்தை' நினை­வூட்ட தனது சொம்­பி­லி­ருந்த நீரை முகத்­தில் தெளித்­தாள்.

அசை­வின்றி இருந்த உட­லில் 'லேசாக' அசை­வும், கண்­களும் 'மெல்­லத்' திறந்­தன.

அவ­ரது தலையை மடி­யில் தூக்­கிக் கிடத்­தி­ய­படி வாயில் சிறிது நீரை ஊற்­ற­வும் அந்­த­நீர் அவ­ரது 'தொண்டை' வழி­யாக இறங்­கி­யது.

மீண்­டும் சிறிது ஊற்ற அது 'உட­லில்' இறங்­கி­யது.

மெல்ல... யாரது?... என்று சீபல்­ல­வன் முனங்­கி­னார்.

ஐயா... நான் தங்­கள் குடி­ம­கள்... எனது மகனை காண­வந்­தேன்.. அவன் என்ன ஆனான்? என்­பது தெரி­ய­வில்லை.

'பட்­டத்து யானை' தங்­களைப் புரட்­டிப் பார்த்­த­பின் நீங்­கள் மூர்ச்­சை­யா­னது தெரி­யா­மல் அதோ சம­வெளிக்­குச் சென்று சத்த­மிட்டு சரிந்து 'அசை­வற்று' கிடக்­கிறது எனக்­கூ­றி­னாள்.

எங்கே...? என்று எழுந்து அமர்ந்து யானை கிடந்த சம­வெ­ளியை நோக்­கி­னார் மன்­னர்.

சற்று நிதா­ன­மா­ன­தும் அந்த தாயைப் பிடித்­துக்கொண்டு எழுந்து நின்­றார்.

சரி­யாக 'நிற்க' இய­ல­வில்லை.

அவ­ரைப் பிடித்­துக்கொண்டு நின்று பிறகு கைகளை 'பிடித்­த­ப­டியே' இரு­வ­ரும் சம­வெ­ளியை அடைந்­த­னர்.

அதற்­குள் படை­வீ­ரர்­கள் சிலர் அங்கு வர­வும் அர­சர் பட்­டத்து யானை­யைக் காண்­பித்து நான் 'மூர்ச்­சை­யா­னது' தெரி­யா­மல் 'சங்­க­ரன்' இறந்து கிடப்­ப­தைப் பாருங்­கள் என்று கண்­களில் நீர்­த­ழும்ப கையை நீட்­டி­னார்.

என்­னைக் காப்­பாற்­றி­விட்டு 'அவன்' இப்­படி ஆகி­விட்­டானே?

'அரச மரி­யா­தை­யு­டன்' அடக்­கம் செய்ய ஏற்­பாடு செய்­யுங்­கள் எனக்­கூறி நடக்­க­லா­னார்.

மன்­ன­ரின் கட்­ட­ளைப்­படி பட்­டத்து யானை 'சங்­க­ரன்' சகல மரி­யாதை­யு­டன் அடக்­கம் செய்­யப்­பட்­டது.

மன்­னர்… சங்­க­ரன் மீது 'கடை­சிப்­பிடி' மண்­ணைப் போடும்­போது...

சங்­கரா.. உன்­மீது சத்­தி­யம்… இதே நந்­தி­வர்­மனை போரில் நேர்­மை­யான முறை­யில் வெற்றி கண்டு அந்த வெற்­றியை உனக்கு காணிக்கையாக்­கு­கி­றேன் என்­றார்.

சில ஆண்டு­க­ளுக்­குப் பின் குட­மூக்கு (தற்­போ­தைய கும்­ப­கோ­ணம்) போரில் நந்­தி­வர்­மனை வெற்றி கொண்டு தனது சப­தத்தை சீவல்­லப மன்­னர் நிறை­வேற்­றி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!