நூல் அறிமுகம்

தலைப்பு: தையல் மிஷின் : சிறு­க­தை­கள்

நூலா­சி­ரி­யர்: நூர்­ஜ­ஹான் சுலை­மான்

பதிப்­பா­ளர்: தங்­க­மீன் பதிப்­ப­கம், 2014.

குறி­யீட்டு எண்: Sing Tamil NUR

அனைத்து உரி­மை­களும் காப்­பு­ரி­மைக்கு உட்பட்டவை.

கம்­பத்து வாழ்க்கை, மர­பு­கள் அழிந்துவிடக்­ கூ­டா­தென்று தவிக்­கும் நெஞ்­சங்­கள் என்று சிங்­கப்­பூர் வாழ்க்­கை­யின் பல்­வேறு கூறுளை இவ­ரது கதை­களில் நம் காட்­சிக்கு வைத்­தி­ருப்­ப­தோடு, கதை­க­ளைப் படங்­க­ளு­டன் தந்­தி­ருப்­ப­தும் கூடுதல் சிறப்பு.

'ஆண்­ட­வன் கணக்கு' கதை பணத்­தாசை ஒரு மனி­த­னை­யும் அவ­னைச் சுற்றி இருப்­ப­வர்­க­ளை­யும் எவ்­வா­றெல்­லாம் சீர­ழிக்­கும் என்­பதை உணர்த்­து­கிறது.

முது­மையை நேசிக்­கும் புதிய தலை­மு­றை­யின் பாச­மிகு சொல்­லா­டல்­க­ளோடு உள்­ளத்தை ஈர­மாக்­கும் வகை­யில் எழுதப்­பட்­டுள்­ளது 'நிலா தந்த மோதி­ரம்'. 'தையல் மிஷின்' கதை தன்­னு­டைய குடும்ப பாரங்­க­ளுக்­குத் தோள்­கொ­டுத்த உயி­ருக்கு உயி­ரான தையல் மிஷின் எங்கோ காட்­சிப் பொரு­ளாக வைக்­கப்­ப­டப்­போ­வ­தில் மன­மில்­லாத உருக்கத்தை உணர்ச்­சி ததும்பக் கூறு­வ­தால் அது இந்த நூலின் தலைப்­பா­கவே இடம்­பெற்­றுள்­ளது மிகப் பொருத்­த­மா­க உள்ளது.

நாம் கடந்து வந்த பாதை­யில் ஏற்­பட்ட நன்­மை­க­ளை­யும் தீமை­களை­யும் சற்றே நிதா­னித்து அனு­மா­னம் செய்­யும் ஒரு வாய்ப்பை இந்­நூல் நமக்கு ஏற்­ப­டுத்திக் கொடுக்­கும் என்­பதில் ஐய­மில்லை. இந்த நூல் கிடைக்­கும் நூல­கங்­க­ளின் விவரங்­க­ளுக்கு: http://catalogue.nlb.gov.sg

-தேசிய நூலக வாரிய நூல் அறி­மு­கக் குழு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!