யாதுமாகி நின்ற தாயுமானவர்

சிறுகதை

மோகனவள்ளி

கூடத்தில் மாட்டியிருந்த புகைப்படத்தில் தியாகத்தின் மொத்த உருவமான அப்பா வெள்ளந்தியாகச் சிரித்துக்கொண்டிருந்தார். புகைப்படத்தின்கீழ் பெயர்-வெள்ளைச்சாமி, தோற்றம், மறைவு எனத் தேதிகள் எழுதப்பட்டிருந்தன. முகத்தில் ஒரு தெளிவு, நிம்மதியான பார்வை, தீர்க்கமான புன்னகை.

வெளியே இடை­வி­டா­மல் பெய்த பரு­வ­மழை தணி­யத் தொடங்கி இருந்­தது. மெல்­லிய குளிர்­காற்று வீசத் தொடங்­கி­யது. ஆங்­காங்கே மக்­கள் குடை­பி­டித்த வண்­ணம் கட­மையை ஆற்றச் சென்­று­கொண்­டி­ருந்­தார்­கள்.

கண்­மணி கூடத்­திற்கு வந்­தாள். வீடு வெறிச்­சோடி இருந்­தது. மழைச்­சா­ரல் கண்­ம­ணி­யின் மனத்­திற்­குள்­ளும் வீசிக்­கொண்­டி­ருந்­தது. மனம் கறுப்பு வெள்ளை படம்­போல் நினைவு­களில் மூழ்­கி­யது.

கண்­ம­ணி­யின் குடும்­பம் சின்­னஞ்­சிறு குரு­விக்­கூட்­டைப் போன்று மிக அழ­கா­ன­தாக இருந்­தது. தாய், தந்தை மற்­றும் ஒரே கண்­ணின்­மணி போன்ற மகள். தந்தை ஒரு நிறு­வ­னத்­தில் சாதா­ரண வேலை செய்­தார். தாயார் வீட்­டி­லி­ருந்து கண்­ம­ணி­யைக் கவ­னித்­துக்­கொண்­டார்.

கண்­ம­ணி­யின் தாயார் மீண்­டும் கரு­வு­றும்­வரை, வாழ்க்­கைச் சக்­க­ரம் சல­னம் இல்­லா­மல் ஓடிக்­கொண்­டி­ருந்­தது. அழ­கா­கச் சென்ற நாள்­களில் விதி தன் வேலை­யைக் காட்­டக் காத்­தி­ருந்­தது. தொலை­வில் இருந்து விதி அந்த அழ­கிய குரு­விக்­கூட்­டில் கல்­லெ­றிந்­தது.

வரப்­போ­கும் ஆபத்தை அறி­யாத தந்தை, ஆனந்த வெள்­ளத்­தில் மூழ்கி இருந்­தார். 'உனக்கு ஒரு தம்பி வரப்­போ­கி­றான், நீங்­கள் இரு­வ­ரும் ஒன்­றா­கச் சேர்ந்து விளை­யா­ட­லாம்' என அடிக்­கடி கண்­ம­ணி­யி­டம் கூறு­வார். ஒரு­நாள் கண்­ம­ணி­யின் தாயார் மயங்கி விழுந்­தார். பல நாள்­கள் மருத்­து­வ­மனை­யில் தங்க வேண்­டி­ய­தா­கி­விட்­டது. ஆனா­லும், இறு­தி­யில் மருத்­து­வ­ரும் கைவிட, கரு­வுற்­று இ­ருந்த குழந்­தை­யோடு தாயும் இறை­வ­னி­டத்­தில் தஞ்­சம் புகுந்­தார். தலை­யில் இடி­வி­ழுந்­தது போன்ற அதிர்ச்சி­யில் உறைந்­தார் தந்தை வெள்­ளைச்­சாமி.

அறி­யாப் பரு­வம் என்­ப­தால் கண்­ம­ணிக்கு எது­வும் புரி­ய­வில்லை. தன் தாயாரைக் கிடத்திவைத்து இருக்­கும்­போது விநோ­த­மா­கப் பார்த்­தாள். தன் தந்­தை­யைக் கட்­டிப்­பி­டித்­த­வாறே இருந்­தாள். தந்­தையோ கண்­ம­ணியை ஒரு நொடி­கூட கீழே இறக்­கா­மல், மக­ளைச் சுமந்­த­வாறே மனை­வி­யின் இறு­திக் காரி­யத்­தைச் செய்து முடித்­தார்.

ஒரு­பு­றம் மனை­வி­யின் இழப்பு, மறு­பு­றம் கண்­ம­ணியை எப்­படி வளர்ப்­பது எனக் குழம்­பித் தவித்­தார் வெள்­ளைச்­சாமி. என்ன செய்­வ­தெ­னத் தெரி­யா­மல் இருக்­கும்­போதே சுமை­கள் அடுக்­க­டுக்­கா­கத் தோளில் ஏறத் தொடங்­கின. மூன்­றாம் நாள் காரி­யம் முடிந்­த­வு­டன் வீடு வெறிச்­சோ­டி­யது. வாழ்க்கை நிர்­மூ­ல­மா­னது.

விட்­டத்­தைப் பார்த்­த­வாறு கண்­களை மூடி­யி­ருந்த வெள்­ளைச்­சாமி­யின் தோளை ஒரு கை வந்து குலுக்­கி­யது. அது வேறு யாரும் இல்லை அண்டை வீட்­டுக்­கா­ரர் திரு லிம். ஆயி­ரம் கேள்­வி­க­ளு­டன் அவரை நோக்­கி­னார் வெள்­ளைச்­சாமி. வாஞ்­சை­யு­டன் அவ­ரது தோளைத் தொட்டு, "இதோ காலை உணவு, சாப்­பிடு!" என்று ஒரு பொட்­ட­லத்தை நீட்­டி­னார். சற்று நேரம் இரு­வ­ரும் சாப்­பிடு­வதை பொறு­மை­யு­டன் வேடிக்கை பார்த்­த­வாறே அமர்ந்­தி­ருந்­தார் லிம்.

"கமான் வெள்­ளைச்­சாமி, இன்­னும் எவ்­வ­ளவு நாள் இப்­ப­டியே இருக்­கப்­போ­கி­றாய்? மேற்­கொண்டு வாழ்க்­கை­யைத் தொடர மனத்தை தைரி­ய­மாக வைத்­துக்­கொண்டு ஆக வேண்­டி­ய­தைப் பாரு,"' என்று தோளை மறு­ப­டி­யும் உலுக்­கி­னார்.

"என் மனை­வி­யும் எங்­கள் இரு குழந்­தை­க­ளைப் பார்த்­துக்­கொண்டு வீட்­டில்­தான் இருக்­கி­றார். கண்­மணி எங்­கள் வீட்­டில் இருக்­கட்­டுமே! கண்­ம­ணி­யோடு சேர்த்து மூன்று குழந்­தை­க­ளைப் பார்த்­துக்­கொள்­ளட்­டும்," என்று ஆலோ­சனை கூறிய லிம்மை வாஞ்­சை­யு­ட­னும் நன்­றிப்­பெ­ருக்­கோ­டும் அண்­ணாந்து பார்த்­தார் வெள்­ளைச்­சாமி. என்ன பதில் சொல்­வது எனக் குழப்­பத்­தில் இருந்­தார். வாழ்க்கை என்­னும் வண்டி ஓட வேண்­டுமே!

கடி­கா­ரத்­தைப்­போல் நாள்­களும் உருண்­டோ­டின. கண்­மணி லிம் வீட்­டில் அவர்­க­ளது பிள்­ளை­களோடு பிள்­ளை­யாக வளர்ந்­தாள். அவர்­க­ளின் மொழி­யை­யும் கற்­றுக்­கொண்­டாள். அக்­கு­டும்­பத்­தில் கண்­ம­ணி­யும் ஒருத்­தி­போல அவர்­களது உறவு பலப்­பட்­டது.

அவர்­க­ளு­டனே ஒன்­றாக விளை­யாடி, ஒரே தட்­டில் சாப்­பிட்டு, வாழ்க்கை இன்­ப­மாக கழிந்­தது கண்­ம­ணிக்கு அவள் உயர்­நிலை பள்­ளிக்­குப் போகும்­வரை.

சில நாள்­கள் கழித்து லிம் குடும்­பத்­தி­னர் ஒரு புதிய வீட்டை வாங்கி, தீவின் கிழக்­குப் பகு­திக்­குக் குடி­பெ­யர்ந்­த­னர். இருப்­பி­னும், அவர்­களது உறவு தொடர்ந்து நீடித்­தது. ஒவ்­வொரு பண்­டி­கைக்­கா­லத்­தி­லும் அவர்­கள் தவ­றா­மல் சந்­தித்­த­னர். சகோ­தர உறவு நீடித்து நிலை­பெற்றது.

நாள்­கள் உருண்­டோ­டின. கண்­மணி­யும் வளர்ந்­தாள். காலப்­போக்­கில் கண்­மணி தன் படிப்பை முடித்து வேலைக்­குச் சேர்ந்­தாள். நல்ல வேலை­யில் அமர்ந்­தாள். தந்­தையை வேலைக்­குப் போக­வேண்­டாம் என எவ்­வ­ளவு வற்­பு­றுத்­தி­யும் அவர் வீட்­டில் இருக்கவில்லை. தொடர்ந்து பகு­தி­நேர வேலை செய்­தார்.

அலு­வ­ல­கத்­தில் பல பொறுப்­பு­கள் அவ­ளுக்­குக் கொடுக்­கப்­பட்­டன. அடிக்­கடி வெளி­யி­டங்­க­ளுக்­குச் செல்ல வேண்டி இருந்­தது. பல கட்­ட­ழ­குக் காளை­கள் இவ­ளைக் கவ­னிக்­கத் தவ­ற­வில்லை. பாழாய்ப்­போன காதல் கண்­ம­ணி­யை­யும் விட­வில்லை. ஒரு­வ­ரி­டம் மனத்­தைப் பறி­கொ­டுத்­தாள். தந்­தை­யி­டம் கூறி­னாள். தந்­தை­யும் மக­ளின் விருப்­பத்­திற்கு மறுப்பு தெரி­விக்­க­வில்லை. இரண்டு ஆண்டு­க­ளா­கக் காத­லித்­துப் பின்­னர் திரு­ம­ணம் என்ற பந்­தத்­திற்­குள் இணைந்­த­னர்,

இல்­லற வாழ்க்­கை­யில் காலடி எடுத்து வைத்­தாள் கண்­மணி. காதல் கண­வ­ருக்கு உற­வி­னர் எனப் பெரி­தாக யாரும் இல்லை. அவ­ரும் தனியே வளர்ந்­த­வர்­தான். நல்­லது கெட்­டது சொல்­லித்தர­வும் யாரும் இல்லை. தனி­வீட்­டில் இரு­வரும் உல்­லாச வானில் சிற­கடித்­துப் பறந்­த­னர். வாழ்க்கை இவ்­வ­ளவு இனி­மையா என ஒவ்­வொரு நொடி­யை­யும் ரசித்து, இன்­பத்­தில் மூழ்கி இருந்­த­னர்.

அப்பா தனி­மை­யில் அவ­ரது வீட்­டில் இருந்­தார். மகள் மகிழ்ச்சி­யாக இருப்­பதை எண்ணி உச்சி­கு­ளிர்ந்­தார். அடிக்­கடி லிம் குடும்­பத்­தி­ன­ரும் வந்து சென்­ற­னர். வெள்­ளைச்­சாமி பேரனோ பேத்­தியோ வந்­த­வு­டன் வேலையை விட்­டு­விடு­வ­தா­கக் கூறி­னார்.

வெள்­ளைச்­சா­மி­யின் ஆசை நிறை­வே­றி­யது. கண்­ம­ணி­யும் கரு­வுற்­றாள். மக­ளைக் கட்­டி­ய­ணைத்து கண்­களில் நீர் சொரிய உச்­சந்­தலை­யில் முத்­த­மிட்­டார். மகளை அல்­லும்­ப­க­லும் கண்ணை இமை காப்­பது­போல் பார்த்­துக்­கொண்­டார். தனக்­குத் தெரிந்த பல­கா­ரங்­க­ளைச் செய்­து­கொ­டுப்­பார். கடி­ன­மான வேலை­க­ளைத் தானே செய்­வார். தின­மும் இரு­முறை தொலை­பே­சி­யில் அழைத்து நலம் விசா­ரிப்­பார். பத்து மாதங்­களும் மகளை உள்­ளங்­கை­யில் வைத்­துத் தாங்­கி­னார்.

ஒரு­வ­ழி­யாக நாள்­களும் கழிந்­தன. மக­ளின் பேறு­கா­ல­மும் வந்­தது. அழ­கான பெண் குழந்­தையை ஈன்­றெ­டுத்­தாள் கண்­மணி. காவ்யா எனப் பெயர் சூட்டி மகிழ்ந்­த­னர்.

அவ­ளின் கண­வ­ரை­விட அப்பா அடைந்த மகிழ்ச்­சிக்கு அளவே இல்லை. தின­மும் மருத்­து­வ­மனைக்கு வந்து பேத்­தியை அள்­ளிக் கொஞ்சி மகிழ்­வார். இரண்டு நாள்களில் பேத்தி வீட்­டுக்கு வந்­த­வு­டன் எல்லா பொறுப்­பு­க­ளை­யும் தானே இழுத்­துப்­போட்­டுக் கொண்டு செய்­தார். மக­ளுக்­குப் பத்­திய சாப்­பாடு சமைப்­ப­தி­லி­ருந்து பேத்­தி­யைக் குளிப்­பாட்­டு­வது வரை அனைத்­தும் அவ­ருக்கு அத்­து­படி. மக­ளைப் பத்­தி­ர­மா­கப் பார்த்­துக்­கொண்­டார். தந்­தை­யின் கவ­னிப்பு இரட்­டிப்­பானதால் கண­வர் கண்­ம­ணி­யைக் கண்­டும் காணா­மல் இருந்­தார். தந்­தை­யின் இடை­வி­டாத கவ­னிப்­பும் அவர் பேத்­தி­யின்­மீது வைத்­துள்ள பாசத்­தைக் கண்­டும் கண்­மணி அசந்­து­போ­வாள். அப்பா என்ற ஊன்­று­கோல் தனக்கு வாழ்க்கை முழு­தும் உத­வி­வ­ரு­வதை எண்ணி, இறை­வ­னுக்கு நன்றி கூறி­னாள்.

மாதங்­கள் சென்­ற­வு­டன் பேத்தி குப்­பு­றப்­ப­டுத்­தாள்; திரவ உணவை விட்­டு­விட்டு திட உணவு உண்ண ஆரம்­பித்­தாள்; பின்­னர் தவழ ஆரம்­பித்­தாள்; மெது­வாக ஒவ்­வொரு செய­லா­கச் செய்ய ஆரம்­பித்­தாள். அவ­ளுக்­கும் தந்­தை­யை­விட தாத்­தாவே உல­க­மாக இருந்­தது.

பத்து மாதங்­கள் கழிந்­தன. வெள்­ளைச்­சாமி பேத்­தியை நடக்க வைக்க பல முயற்­சி­க­ளைச் செய்­தார். ஆனால், ஏனோ தெரி­ய­வில்லை பேத்தி காலைத் தரை­யில் வைக்க மறுத்­தாள். அவ­ளின் கால்­கள் சூம்­பிக் கிடந்­தன. தரை­யில் கால்­களை ஊன்­ற­வே­யில்லை. இன்­னும் கொஞ்ச நாளில் சரி­யா­கி­விடும் என்­றும் அடுத்­த­முறை வந்­த­வு­டன் குழந்தை மருத்­து­வ­ரி­டம் காட்­ட­லாம் என்­றும் தனக்­குள் நினைத்­துக்­கொண்­டார். ஞாபக மற­தி­யால் மகளி­டம் சொல்ல மறந்­தார்.

இரண்டு மாதங்­கள் கழித்து நடந்த மருத்­துவ பரி­சோ­த­னை­யில் மருத்­து­வர், குழந்­தை­யின் கால்­கள் சரி­வர வளர்ச்­சி­யின்றி இருக்­கின்­றன, குழந்தை எதிர்­கா­லத்­தில் நடப்­பது சற்று கடி­னம் என்­ற­னர்.

"கவ­லைப்­ப­டா­தீங்க, மருத்­து­வம் இப்­போது முன்­னேறி உள்­ளது. தெரப்­பிஸ்ட் இருக்­காங்க," என்று ஆறு­தல் கூறி­னார் மருத்­து­வர்.

சிறி­து­கா­லமே மகிழ்ச்­சி­யாக இருந்த குடும்­பத்­தைப் பார்த்து, ஆண்­ட­வ­னுக்கே பொறுக்­க­வில்லை என்று வெள்­ளைச்­சாமி தலை­த­லை­யாக அடித்­துக்­கொண்டு அழு­தார். எனி­னும், துக்­கத்தை வெளிக்­காட்­டா­மல் இர­வும் பக­லும் பேத்­தியை நன்கு கவ­னித்­தார்.

அதன்­பின்­னர் பல மருத்­து­வப் பரி­சோ­த­னை­கள், பல்­வேறு மருத்­து­வர்­க­ளின் சந்­திப்பு. சில மருத்­து­வ­ம­னை­களில் பல­வித ஆராய்ச்சி­கள் நடந்­தன. குழந்தை மருத்­து­வர் முதல் எலும்பு மருத்­து­வர் வரை நடை­யாய் நடந்­த­து­தான் மிச்­சம். எல்­லாம் விழ­லுக்கு இறைத்த நீர்­போல் ஆயிற்று. ஈராண்­டு­கள் ஆகி­யும் பேத்தி காவ்யா நடக்­க­வில்லை. தாத்தா கவ­லை­யில் தோய்ந்­தார். இறைவா ஏன் இந்த சோதனை என மனத்­திற்­குள் அழு­தார்.

குழந்­தை­யின் நிலை கண்­ம­ணி­யின் மனத்தை வாட்­டி­யது. குழந்­தையை அதிக நேரம் கவ­னிப்­ப­தால் கண­வரை மறந்­தாள் கண்­மணி. இத­னால் அதிக எரிச்­ச­லுக்கு ஆளா­னார் கண­வர். ஒரு கட்­டத்­தில் எரிச்­சல், கோப­மாகி இரு­வ­ருக்­கும் இடையே மனக்­க­சப்பு ஏற்­பட்­டது. சிறு கீற­லாக இருந்த பிரச்­சினை நாள­டை­வில் பெரும் விரி­சலை ஏற்­ப­டுத்­தி­யது. இரு­வ­ருக்­கும் இடையே பேச்­சு­வார்த்­தை­யில்­லா­மல் போனது. ஒரு நாள், "நீயே பிள்­ளை­யைக் கவ­னித்­துக்­கொள்!" என்று கூறி­விட்டு, காதல் கண­வன் வீட்­டை­விட்டு வெளி­யே­றி­னான்.

கண்­ம­ணி­யின் வாழ்க்­கை­யில் மீண்­டும் புயல் வீசி­யது. கண­வ­னின் பிரிவு அவளை மன­வு­ளைச்­ச­லுக்கு ஆளாக்­கி­யது. எப்­படி மீண்­டெ­ழு­வது என திக்­குத் தெரி­யா­மல் இருந்த கண்­ம­ணிக்கு மீண்­டும் ஆத­ரவு நீட்­டி­யது அவ­ளின் தந்­தை­யின் கரம்­தான்.

மனத்­தைப் பெருஞ்­சுமை அழுத்­தி­ய­போ­தும் அதனை ஒரு­போ­தும் வெளிக்­காட்­டா­மல் மக­ளை­யும் பேத்­தி­யை­யும் பாது­காக்­கும் பெரிய பொறுப்பை உணர்ந்து கண்­ம­ணிக்­குத் தன்­னம்­பிக்கை ஊட்­டு­வார். பேத்­தியை வளர்க்­கும் முழு பொறுப்­பை­யும் தானே எடுத்­துக்­கொண்­டார். பேத்­திக்­குக் காலை­யில் பல் துலக்­கு­வ­தி­லி­ருந்து இரவு உறங்­கும்­வரை அனைத்­தை­யும் சிறி­தும் முகம் சுளிக்­கா­மல் மகிழ்ச்­சி­யு­டன் செய்­தார்.

பேத்­தியை உடற்­கு­றை­யுள்­ளோ­ருக்­கான ஒரு சிறப்­புத் தேவை பள்­ளி­யில் சேர்த்­தார். அங்­குள்ள எல்­லாப் பிள்­ளை­க­ளை­யும் தன் சொந்த பேரப்­பிள்­ளை­க­ளைப்­போல் கவ­னித்­துக்­கொண்­டார். தன் பேத்­தியை எப்­ப­டி­யா­வது நடக்க வைத்­து­விட வேண்­டும் என அய­ராது பாடு­பட்­டார். பல முயற்­சி­க­ளைச் செய்­தார். நடை­வண்­டி­யில் நடக்க வைப்­பார். கைகளை நீட்டி ஓரடி எடுத்து வைத்து, 'வா வா' என அன்­றா­டம் பயிற்சி கொடுப்­பார். சுவ­ரைப் பிடித்­துக்­கொண்டு நடக்கு­மாறு செய்­து­காட்­டு­வார்.

பேத்தி காவ்யா மெது­வா­கப் பல சிர­மங்­க­ளுக்­குப் பின்­னர் தன் கால்­களை நேராக வைத்து நிற்க ஆரம்­பித்­தாள். நீண்­ட­நாள் பிசி­யோ­தெ­ரபி சிகிச்­சைக்­குப் பிறகு மெது­வாக காலை எடுத்து ஓர் அடி வைத்­தாள். நாள்­கள் செல்­லச் செல்ல, அடி­மேல் அடி­யாக எடுத்து வைத்­தாள். தாத்தா அடைந்த ஆனந்­தத்­திற்கு அளவே இல்லை. 'மூன்­றாம் பிறை' கமல்­போல பல்­வேறு குரங்கு விளை­யாட்­டு­க­ளைப் பேத்­தி­யி­டம் செய்­து­காட்டி, குழந்­தையை மகிழ்ச்­சி­யா­கவே வைத்­தி­ருந்­தார்.

தன் தந்தை செய்­யும் முயற்­சி­களை இமை­கொட்­டா­மல் பார்த்­துக்­கொண்­டி­ருப்­பாள் கண்­மணி. தந்­தைக்­குத்­தான் எவ்­வ­ளவு பொறுமை என அடிக்­கடி நினைத்­து­கொள்­வாள். தந்தை கடந்து வந்த பாதை­களை எண்­ணிப் பார்த்து வியந்­து­போ­வாள். தன்னை வளர்த்­தது மட்­டு­மின்றி, தன் மக­ளை­யும் வளர்க்­கப் பாடு­படும் தந்­தையை நினைத்­துப் பெரு­மி­தம் கொண்­டாள். 'யாது­மாகி நின்ற தாயு­மா­ன­வரை' தந்தை உரு­வில் பரி­ச­ளித்த இறை­வ­னுக்கு நன்றி என ஒவ்­வொரு நாளும் வேண்­டிக்­கொள்­ளத் தவ­ற­வில்லை.

ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்ட நாள்­க­ளுக்கு நிலைக்­க­வில்லை. ஒரு நாள் திடீ­ரென நெஞ்சு வலிக்­கிறது எனக் கூறி­னார். அவ­சர மருத்­துவ வாக­னத்­தில் மருத்­துவ­மனைக்கு அழைத்­துச் செல்­லப்­பட்­டார். இரண்டு நாள்­கள் கழித்து அவ­ரது உடல் மட்­டுமே வீட்­டிற்கு வந்­தது.

புகைப்­ப­டத்­தில் காட்­சி­ய­ளிக்­கும் 'யாது­மாகி நின்ற தாயு­மா­ன­வரை' கண்­ம­ணி­யும் காவ்­யா­வும் நாள்­தோறும் நன்­றி­யு­டன் வணங்­கத் தவ­று­வ­தில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!