நான் கண்ட சிங்கை

தான் அறிந்த மொழிகளில்

தமிழ்தான் அழகென்றார் பாரதி...

இன்றிருந்தால் சொல்லியிருப்பாரோ

சிங்காரத் தமிழ் வளர்ப்பதால்

தான் அறிந்த தேசங்களில்

சிறந்தது சிங்கை என்று...

சங்க காலத்துப் புலவர்

கணியன் பூங்குன்றனார்

அன்றே சொன்னார்

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’

இன்றிருந்தால் சொல்லியிருப்பாரோ

சிங்கைதான் அதற்கேற்ற

எடுத்துக்காட்டென்று...

‘ஒப்புரவு ஒழுகு, ஊக்கமது கைவிடேல்’

ஆத்திசூடி அவ்வையார்

அழகாகச் சொன்னார்

இன்றிருந்தால் சொல்லியிருப்பாரோ

சிங்கைதான் தட்டாமல்

தன் சொல் கேட்டதென்று...

‘இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்ல தரசு’

வள்ளுவர் வாய்மொழிந்த

பொய்யாமொழி இது

வள்ளுவப் பெருந்தகை

இன்றிருந்தால் சொல்லியிருப்பாரோ

சந்தேகமில்லை - சிங்கை

அரசு செய்வது சரியென்று...

இன்றிருப்பதால் நானே சொல்லுகிறேன்

நன்றாய் நான் இருப்பதால் அல்ல…

உலக நடப்புகள் நன்கறிந்து

உளமாரச் சொல்லுகிறேன்

சிங்கை சீர்பொருந்திய நாடென்று...

பல்லாயிரம் ஆண்டுகள் வாழும்

செந்தமிழ் போல்

சிங்கையும் நீடூழி வாழ்கவென்று

வாழ்க... வென்று...

- மோ.அ.சூசைதாசன்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!