என் அருங்குணமே...

மரங்களைப் போல்

மனமும்,

வேர் பிடிக்கிறது

கிளை பரத்துகிறது

இலைகள் சுமந்து

பசுமையாடுகின்றது

அமரும் பறவைகளின்

கதைத்தல் பொறுக்கின்றது

பறந்த சிறகுகளின்

தனிமை காய்கின்றது

சருகாய் உதிரும்

பிரிதல் சுமக்கின்றது

எச்சங்கள் சொட்டிய

கறைகள் ஏற்கின்றது

நிழலில் அமரும்

கருணை வார்க்கின்றது

வெட்டும் காயங்களால்

வருந்தி மாய்கின்றது

மீண்டும் துளிர்க்கின்றது...

மேலும்,

வீரியம் கொள்கின்றது...

அனுபவ ஆயுதம் கொண்டே

தனை,

அகச்சுடர் எழில் மேவி

புதுப்பிறப்பென பொழில் கூடி

பேரன்பே பெரும்மனமே!

மரமேறும் சிறு அணிலே

சிறு கூட்டல் இவ்வாழ்க்கை

சேர்ந்திணைவாய் செங்கனியாய்

எது வருமோ அது பிரியும்

இழப்பின் வழி

புது ஒளியே...

மர மனமே

உணர்ந்திடு வாழ்!

மனம், மரம்தான்

மனமறிவாய்…

என் அருங்குணமே!

- நெப்போலியன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!