பூம்பூம் மாடு

- மகுடேசுவரன்

நகரச் சாலையின்

அசுர வாகனங்களுக்கிடையில்

ஒரு பூம்பூம் மாடு

தன் எஜமானனுடன்

சிக்கிக் கொண்டது.

இப்புறம் ஏகினால்

ஒரு சிற்றுந்து உரசிக் கடக்கிறது.

பின்னகர்ந்தால்

வெண்ணிரும்புகளால் ஆன மகிழுந்துகள்

முட்டப் பார்க்கின்றன.

தலையாட்டைத் தவிர

ஏதுமறியா அதன் அறிவு

மதிகெட்ட கும்பல் மத்தியில்

மதிப்பற்றதாகிறது.

உடல்போர்த்தியிருந்த

வண்ணத் துணிகள்மீது

ஒருவருக்கும் கவனமில்லை.

பூம்பூம் மாடு

நம்மை வாழ்த்த வந்த

அதிசயம் என்று

எவருக்கும் தெரியவில்லை.

பால்சுரந்து பிழைக்கவோ

காடுழுது மேயவோ

அறியாத அது

இந்தக் கட்டடப் பாலைக்குள்

எதையோ நம்பி வந்திருக்கிறது.

பரிதவித்து ஒருவழியாய்

ஓரத்தை அடைந்த நிம்மதியில்

அநிச்சையாய்த் தலையாட்டிக்கொண்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!