இடக்கை

சிறுகதை R. சியாம்குமார்

மீண்­டும் குழந்தை அதையே செய்ய, கவி­தா­வி­டம் பயம் தொற்­றி­யது. "என்­னங்க!! இங்க வாங்க" கவிதா கத்­தியபோது, குழந்தை அதை­யும் விளை­யாட்­டாய் நினைத்து மீண்­டும் செய்து சிரித்­தது.

அந்த நவம்­பர் மாத மழை­யில் சிலிர்த்து விழித்­தி­ருக்­கும் சனிக்­கி­ழ­மை­யைக் காணா­மல் போர்­வைக்­குள் ஒளிந்­து­ம­றைந்து கொண்­டி­ருந்த சங்­கர், மனைவி கவி­தா­வின் அந்த அழைப்பு கேட்­ட­வு­டன் வெளியே ஆமை போல் தலையை மட்­டும் வெளியே நீட்டி "என்­னம்மா?" என்­றான்.

"இன்­னும் என்ன தூக்­கம்? இங்க வாங்க!" கவி­தா­வின் குர­லில் கோபம் கொப்­ப­ளித்­தது.

அந்­தக் கோபச் சூட்டை உணர்ந்த சங்­கர் "என்­னாச்சு?" பதறி, குழந்­தை­யும் கவி­தா­வும் இருந்த படுக்கை அறைக்­குள் ஓடிப்­போ­னான்.

"இங்க பாருங்க இவளை!!..." கவிதா கை காட்ட, பிறந்­த­நாள் மெழு­கு­வர்த்­தியை அணைக்­கத் தயா­ரா­கும் குழந்­தை­யின் உத­டு­போல் குவித்து வாயில் கட்­டை­விரலை வைத்­துச் சூப்­பிக் கொண்­டி­ருந்­தாள் அவர்­க­ளின் மூன்று மாத மகள்.

"அடிக்­குட்டி!, விரல்­சூப்ப ஆரம்­பிச்­சுட்­டய்யா? இரு இரு அப்பா 'ஃபோனை' எடுத்­துட்டு வரேன்" என்று சொல்­லும்­போதே, கவிதா குழந்­தை­யின் வாயி­லி­ருந்து கையை எடுத்­து­விட, மீண்­டும் சிரித்­த­ப­டியே விரலை வாயில் வைத்­தது.

"பாத்­தீங்­களா?" கவிதா ஏனோ சோக­மாய்ச் சொல்ல...

அதைப் புரிந்­து­கொள்­ளா­மல் "ஒரு 'வீடியோ' எடுத்­து­ட­லாம், முதல் விரல் சூப்­பல். குழந்­தை­ செய்­யும் எல்லா புதுச் செயல்­க­ளுக்­கும் இனிப்பு செய்­ய­ணும்னு அம்மா சொல்­லி­ருக்­காங்க, நியா­ப­கம் இருக்கா?"" என்று சங்­கர் முழு 'சார்ஜ்' ஏறிய அலை­பே­சி­யாய் உற்­சா­க­மாய்ச் சொல்ல

"என்­னங்க.., நான் எவ்­வ­ளவு 'சீரி­யஸ்ஸா' சொல்­ல­றேன்?, 'வீடியோ' எடுக்­கப்­போ­றேன், இனிப்பு செய்ன்னு சொல்­லு­றீங்க?" கவிதா, 'மைக்­ரோ­ஓ­வனி'ல் எழும்­பிச் சித­றும் 'பாப்­கார்னா'-ய்ப் பொரிந்­தாள்.

"என்ன சொல்­லுற?" பள்­ளிக்­கூ­டத்­தில் கணித ஆசி­ரி­யர் கேள்­விக்குப் பதில் தெரி­யாத மாண­வ­னாய், சங்­கர் முழித்­தான்.

"பாருங்க அவள், எந்­தக் கையை வைத்து விரல்­சூப்­புறா?" கவிதா கேட்க

"இட­துகை, அதி­லென்ன?" வெகு­ளி­யாய்க் கேட்­டான்.

"என்­னங்க!!, இட­து­கைப் பழக்­கம் உள்­ள­வங்க முதன்முத­லில் இடது கையை இப்­ப­டித்­தான் உப­யோ­கிக்க ஆரம்­பிப்­பாங்­க­ளாம், கூகு­ளில் போட்­டி­ருக்கு. அப்ப குழந்­தைக்கு இடக்கை பழக்­கம் வந்­தி­ருமா?" என்று மேற்­கோ­ளிட்டு வருத்­தத்­தோடு கேட்­டாள்.

"அப்­ப­டியா? நம்ம இரண்­டு­பேரு­டைய வழி­யி­லும் யாருக்­கும் இட­து­கைப் பழக்­கம் கிடை­யாதே?" என்று யோசித்­துக்கொண்டே சொன்­னான்.

"எங்க அப்பா வழி சித்­தி­யோட, பெரி­யப்­பா­வோட, மாமா­வோட பைய­னுக்கு இடது கை பழக்­கம்" உற­வு­வழி சொல்லி அவனை குழப்­பி­னாள்.

"என்ன உற­வு­முறை அவங்க ஓட இவங்க ஓடன்னு பெரிசா போகுது, அவ்­வ­ளவு தொலை­தூர உற­வு­க­ளின் ஜீன்­கள் வந்­தி­ருக்க வாய்ப்­பில்லை," அறி­வி­ய­லால் தேற்­றி­னான் சங்­கர்.

பின்­னர் "கொஞ்­சம் எனக்கு நேரம் கொடு.. நானும் பார்க்­கி­றேன்," என்று அவன் பங்­கிற்கு கூகு­ளைக் குடைந்­தான்.

அடுத்த ஐந்து நிமி­டங்­களில், "உனக்­குத் தெரி­யுமா? முன்­னாள் அமெ­ரிக்க அதி­பர் ஒபாமா, நீல் ஆம்ஸ்ட்­ராங், வீரன் நெப்­போ­லி­யன், வீராங்­கனை ஜோன் ஆப் ஆர்க், 'பேஸ்­புக்' மார்க் ஸுக்­கர்­பர்க் எல்­லோ­ரும் இட­து­கைப் பழக்­கம் கொண்­ட­வர்­கள்­தான்," என்று தலை­யின் பின்­னால் ஒளி­வட்­டம் இல்­லா­தது மட்­டும் குறை­யாய், அறிவு­ஜீ­வி­போல் சொல்­லிக் கொண்டு வந்­தான் சங்­கர்.

"ஆகஸ்ட் 13, இடக்­கை­யர் தினம்" என்று கவிதா தனக்கு எல்­லாம் தெரி­யும் என்ற தொணி­யில் சொல்ல, ஊதி அணைத்த வத்­திக்­குச்­சி­யாய்ச் சுருங்­கிப்­போனான்.

"எங்­கம்­மாட்ட கேட்­டேன், 'இவ வளர்ந்து நாளைக்கு கல்­யா­ண­மா­கிப் போகிற இடத்­துல, இட­து­கால முத­லில் வைத்­தாலோ, இட­து­கை­யால விளக்கு ஏற்­றி­னாலோ, உணவை இடது கையால மற்­ற­வர்­க­ளுக்­குப் கொடுத்­தாலோ நல்லா இருக்­குமான்னு' கேக்­கு­றாங்க?" என்­றாள்.

சில நிமி­டங்­களில் சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து சின்­ன­மன்­னூர் வரை செய்தி பர­வி­யதை உணர்ந்­தான்.

"அவங்க அந்­தக் காலம்…" என்று தோர­ணை­யாய் சங்­கர் சொல்­லும்போதே கவி­தா­வின் முகம் மாறு­வ­தைக் கவ­னித்து உடனே சுதா­ரித்து "இருந்­தா­லும் உங்க அம்மா சொல்­வ­தி­லும் நியா­யம் இருக்கு," சொல்­லா­மல் சொல்லி வார்த்­தை­களை விழுங்­கினான் சங்­கர்.

"ஹ்ம்ம்.. நான் அம்மா சொல்­லு­ற­தைப் பத்­தி­யெல்­லாம் கவ­லைப்­ப­டலை," என்­றாள்.

"நாமும் அந்­தக்­கா­லம் போல் இதைச் சாப­மா­கக் கருதி அப்­ப­டிச் செய்­யக்­கூ­டாது, ஆனா இந்த வலக்கை உல­கத்­தில் இடக்கை மனி­தர்­கள் 12 விழுக்காட்டுக்கும் குறை­வு­தான். அவர்­க­ளுக்­கான தினந்­தோ­ரச் சவால்­கள் அதி­கம்," என்று தொடர்ந்து சொன்­னாள்.

"ஐயையோ, அதைப் பத்தி படிக்­க­லையே" என்று சங்­கர் நினைத்­துக்­கொண்டே "அப்­படி என்ன சவால்­கள்?" சமா­ளித்­துக் கேள்­விக்­கணை தொடுத்­தான்.

"என்­னங்க, என்­னோட சீனத்­தோ­ழி­யோட பைய­னுக்கு இட­துகை பழக்­கம். அவ­ளு­டன் இப்­பொது 'வாட்­ஸாப்­பில்' பேசி­னேன். படிக்க, எழுத அம­ரும் மேசை­யி­லி­ருந்து, 'பென்­சில் ஷார்ப்­னர்', கத்­தி­ரிக்­கோல், என்று தினந்­தோ­றும் பயன்­படுத்­தும் அனைத்­தும் வல­து­கைக்­கா­ரர்­க­ளுக்கு ஏது­வா­கவே உரு­வாக்­கப்­பட்­டி­ருப்­ப­தால், அவன் சிர­மப்­ப­டுறானாம்," என்று கவிதா சொன்னாள்.

"நாம அவளை வல­து­கையை உப­யோ­கப்­ப­டுத்­தப் பழக்­கி­வி­ட­லாமா?" சங்­கர் ஆதங்­க­மாய்ச் சொல்ல, "அப்­படி நாம குழந்­தை­யின் இயல்பை மாற்ற முயற்­சிக்கக் கூடாது," தெளி­வா­கச் சொன்­னாள் கவிதா.

"ஆனா விளை­யாட்­டுத் துறை­யில் இட­து­கைப் பழக்­கம் உள்­ள­வர்­கள் அதி­கம் மிளிர்­வார்­கள்," என்று ஆறு­த­லாய்ச் சொன்­னான் சங்­கர்.

"ஹ்ம்ம்... என்­னோட 'மேனே­ஜர்' கூட இட­து­கைப் பழக்­கம் கொண்­ட­வர். அவ­ரி­ட­மும் இப்ப பேசி­னேன், 'எம்ஆர்டி', 'ஏடிஎம்'-ல் அட்­டை­யைக் காட்­டு­மி­டம், ஏன் எல்­லாக் கத­வு­களின் திறக்­கும், மூடும் பிடி­கள், 'கார்', 'பைக்' 'பிரேக்' கூட வல­து­கைக்காரர்­க­ளுக்கு ஏற்ற வகை­யி­லேயே இருக்­குன்னு சொன்­னார்.

மேலும் எல்­லோ­ரும் சேர்ந்து உணவு உண்­ணும்போது மற்­ற­வர் வல­து­கை­யு­டன் இடிக்­கா­மல் இருக்க வரி­சை­யின் இடது ஓரத்­தில் அமர வேண்­டும் என்று நிறைய சொல்­லிட்டே போனார்..." என்று மூச்சு விடா­மல் சொன்­னாள்.

"கசப்­பான உண்­மை­யைத்­தான் சொல்­லுறா..." என்ற மன­மொ­ழி­யோடு "நாம் அவ­ளுக்கு உறு­துணையா இருந்­தால், அவ­ளும் சாதிப்­பாள். வள­ரும் செயற்கை நுண்­ண­றிவு உல­கில், கை வேறு­பா­டில்­லா­மல் சாத­னங்­கள் உரு­வாக்­கப்பட்­டு­வி­டும்," என்று தைரி­யம் சொன்­ன­வன் குழந்­தை­யைப் பார்த்­த­வு­டன் கண்­கள் எண்­ணெய்­யில் போட்ட அப்­ப­ள­மாய் விரிய "கவிதா அவ­ளைப் பாரு," என்­றான்.

குழந்தை இப்­பொ­ழுது வலது கை கட்­டை­வி­ர­லைச் சூப்­பிக் கொண்டு சிரித்­துக்கொண்­டி­ருந்­தது. கவிதா குழந்­தை­யின் வாயி­லி­ருந்து கையை எடுத்­து­விட, மீண்­டும் சிரித்­த­ப­டியே வலது கை விரலை வாயில் வைத்­தது.

கவிதா வியப்­பு­டன் "அப்ப வலது கைப்பழக்­க­முள்­ள­வளா?" என்று குழம்பி சொல்­லிக்­கொண்டே நிமிர, 'கையில் என்ன இருக்கு?' என்பதுபோல் நம்பிக்கையுடன் இப்பொழுது இரு கைக் கட்டைவிரல்களையும் இயல்பாய் வாயில் வைத்துக்கொண்டு சிரித்தது குழந்தை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!