தலைப்பு: மூக்குத் துறவு : அறிவியல் கனவுருப்புனைவுக் கதைகள்
நூலாசிரியர்: கே. பாலமுருகன்
பதிப்பாளர்: சென்னை : வாசகசாலை பதிப்பகம், 2024.
குறியீட்டு எண்: Tamil BAL
“மூக்குத் துறவு” சிறுகதை தொகுப்பின் தலைப்பே நமது மூளைக்குள் ஒரு சிறு நமைச்சலையும் மூக்குக்குள் ஒரு சிறு குறுகுறுப்பையும் ஏற்படுத்துகிறது.
மொத்தம் பன்னிரெண்டு அறிவியல் புனைவு சிறுகதைகளைக் கொண்ட ஒரு வித்தியாசமான படைப்பு. ஒவ்வொரு கதையும் வேறொரு புதிய உலகை நமக்கு அறிமுகப்படுத்துகிறது.
“மூக்குத் துறவு” என்ற தலைப்பு சிறுகதையில் பிராணவாயு அளவு ஒரு நகரத்தில் குறைந்து விடுகிறது. அப்போது அரசும் மக்களும் அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைக் கதை விளக்குகிறது. கதையோடு பயணிக்கும் பொழுது நாம் அவர்களாக இருந்தால் எப்படி இருக்கும் என்ற பயத்தையும் விதைத்துவிட்டுச் செல்கிறது.
“சடங்கு“ என்ற முதல் கதையே சற்று அமானுஷ்யம் கலந்த ஒரு கதையாக விரிகிறது. அதில் வரும் சுகந்தி கதாபாத்திரம் வாசகர்களை ஈர்க்கிறாள். மெலாவாத்தி என்ற அந்த மலையும் அதில் கடைசியாக ஏறவிருக்கும் கந்தசாமியும் என்ன ஆகிறார்கள் என்பதைக் கதை கூறுகிறது.
“மிசாகி“ ஒரு ஜப்பானிய பெண்ணைப் பற்றியும் போன்சாய் மரங்களின் வரலாற்றையும் அவற்றின் பேரழகையும் சொல்லும் ஒரு கதை.
“கடைசி ஸ்பைடர்மேன்”, “கடவுளின் வாய்”, “ மாலை 7.03” என பல வித்தியாசமான தலைப்புகளைக் கொண்ட அறிவியல் படைப்பான “மூக்குத் துறவு” சுவாரஸ்யமான சுவாசம்.
இந்த நூல் கிடைக்கும் நூலகங்களின் விவரங்களைப் பெற: http://catalogue.nlb.gov.sg
தேசிய நூலக வாரியத்துக்காக, திருவாட்டி செவியின்பம் சங்கீதா

