முதுகெங்கே

முதுகெங்கே

1 mins read
c84c5893-2e82-48e4-bab9-285a61a8500b
Google News Preferred Icon

என் தோள்கள்

இடுப்பில் அமர்ந்திருக்கின்றன

முதுகெங்கே எனத் தேடாதீர்

இருக்குமிடம் தெரியும்

நண்பரென நினைத்தவர்கள்

கத்தியால் முத்தமிட

முதுகு வேண்டுமென

புத்தியுடன் கேட்டார்கள்

பேசாமல் கொடுத்துவிட்டேன்

முடியாதெனச் சொல்லியிருந்தாலும்

அவர்கள் கேட்கப்போவதில்லை

பார்க்கமுடியாத முதுகு

மற்றவர்க்குப் பயன்பட்டதிலும் மகிழ்ச்சிதான்.

சபா முத்து நடராசன்