சிங்கப்பூர் அறிவியல் நிலையத்தின் நிகழ்வுகள்

சிங்கப்பூர் அறிவியல் நிலையத்தின் நிகழ்வுகள்

2 mins read
20c2206a-a3a6-49f3-8f78-4de9783725f4
சிங்கப்பூர் அறிவியல் நிலையம். - படம்: சிங்கப்பூர் அறிவியல் நிலையம்
Google News Preferred Icon

சிங்கப்பூர் அறிவியல் நிலையத்தில் மாணவர்களுக்கான பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

கொரிய நாட்டு பாடல்களையும் படங்களையும் விரும்பிப் பார்க்கும் மாணவர்களைக் கவரும் வகையில் ‘கொரியா ஃபெஸ்டிவல்’ எனும் நிகழ்வு பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி வரை அறிவியல் நிலையத்தின் ‘தி அந்நெக்ஸ்’ அரங்கில் நடைபெற உள்ளது. இந்நிகழ்விற்கான நுழைவுச்சீட்டுக் கட்டணம், நேரம் உட்பட இதர விவரங்களை

https://www.science.edu.sg/whats-on/korea-festival-singapore-2023 என்ற இணையப் பக்கத்தில் காணலாம்.

ஐந்து வயதுக்கும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சிறார்களுக்காக ‘எவரெஸ்ட் *ஸ்நோ சிட்டி’ அங்கம் பிப்ரவரி மாதம் 29ஆம் தேதி வரை ஆம்னி தியேட்டரிலும் ஸ்னோ சிட்டியிலும் நடைபெறும். இவ்வங்கத்தில் பார்வையாளர்கள் ‘எவரெஸ்ட்’ எனும் திரைப்படத்தைக் கண்ட பின்னர் பனி விளையாட்டிலும் பம்பர் கார் சவாரியிலும் விளையாடலாம். இதற்கான கட்டணம் ஒருவருக்குத் தலா 32 வெள்ளி ஆகும்.

எவரெஸ்ட் திரைப்படத்திற்கான நேரம் ஒவ்வொரு நாளும் மதியம் 12 மணி, பிற்பகல் 2 மணி என இரு நேரங்களில் இடம்பெறும். அதுபோல பனி விளையாட்டுகளும் பம்பர் கார் சவாரியும் ஒவ்வொரு நாளும் மதியம் 1 மணிக்கும் 3 மணிக்கும் நடைபெறும். மேல்விவரங்களை https://www.gevme.com/scsonlinetickets இணையத்தள முகவரியில் பெறலாம்.

‘கேலரி டெமோ: திஸ் இஸ் நாட் அ ஸ்டிக்’ எனும் அங்கத்தில் பார்வையாளர்கள் தனித்துவமான பல பூச்சிகளைப் பற்றியும் உயிரினங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். அனைத்து வயதினரும் பங்குகொள்ளக்கூடிய இவ்வங்கம் ஜனவரி முதல் பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி வரையுள்ள ஒவ்வொரு சனி, ஞாயிறு கிழமைகளில் காலை 11 மணிக்கும் மதியம் 3 மணிக்கும் ‘கிட்ஸ்டாப் கிரிட்டர்ஸ் ரூம்’ என்ற இடத்தில் நடைபெறும்.

‘மீட் ஜூலியன்’ எனும் விளையாட்டு அங்கத்தில் எவரெஸ்ட் மலையேறி ஜூலியன் எனும் உருவ பொம்மையைக் கண்டு புகைப்படங்களும் எடுத்துக்கொள்ளலாம். ஜனவரி 27 தேதியில் ஆம்னி தியேட்டரில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறும். இவ்வங்கத்தின் கட்டணம் ஒருவருக்குத் தலா 14 வெள்ளி ஆகும்.

ஜனவரி 26ஆம் தேதி மாலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் ‘சயின்ஸ் கஃபே’ எனும் அங்கத்தில் பார்வையாளர்கள் பல்லுயிர் சார்ந்த தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். இதற்கான கட்டணம் 18 வெள்ளி. மேல்விவரங்களை https://www.gevme.com/ScienceCafe இணையத்தள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

இவையல்லாமல் மேலும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்