கொவிட்-19 தொற்று தாக்கத்தால் கடந்த ஈராண்டுகளாக பினாங்கு மாநிலத்தில் தைப்பூச விழா மிதமான அளவில் கொண்டாடப்பட்டது.
அரசாங்கக் கட்டுப்பாடுகள் ஏதும் இவ்வாண்டு விதிக்கப்படாத நிலையில் முந்தைய பிரமாண்டத்தோடு மீண்டும் மலர்கிறது.
தங்கத் தேர், வெள்ளித் தேர் ஊர்வலத்துடன் பினாங்கில் மூன்று நாட்களுக்கு தைப்பூச விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

குயின் ஸ்திரீட் சாலையில் அமைந்துள்ள ஶ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கத் தேரை ஊர்வலமாக தண்ணீர் மலையை நோக்கி இழுத்துச் சென்றனர்.
தண்ணீர் மலையானை தரிசிக்க நாடு முழுவதும் உள்ள பக்தர்களும் வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகளும் கூடியுள்ளனர்.
பக்தர்கள் தொடர்ந்து தங்களின் நேர்த்திக் கடனைப் பூர்த்தி செய்து வருகின்றனர்.
பல்லின மக்கள் வாழும் மலேசியாவில், சீனர்களும் முருகப்பெருமானை வேண்டி நேர்த்திக் கடனைச் செலுத்துவதையும் காவடி ஏந்துவதையும் காண முடிகிறது.
குயின் ஸ்திரீட் சாலையில் அமைந்துள்ள ஶ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கத் தேரை ஊர்வலமாக தண்ணீர் மலையை நோக்கி இழுத்துச் சென்றனர்.
அதே நேரத்தில் வெள்ளித் தேரில் மாட்டு வண்டி பூட்டி புறப்பட்டு சென்றது.
நூற்றுக்கும் மேற்பட்டத் தண்ணீர் பந்தல் தேர் ஊர்வலப் பாதையில் அமைக்கப்பட்டு பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்குக் குளிர்பானமும் மோரும் வழங்கப்பட்டன.
மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு பினாங்கு தைப்பூசத் திருவிழா சுமூகமாக நடைபெற 1,250 காவல் துறை அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.