சிங்கப்பூர் கார்-வேறு ஒரு கார் மோதல்; 4 மலேசியர்கள் காயம்

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட ஃபெராரி ஆடம்பர கார், ஜோகூரில் மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் டொயோட்டா கார் ஒன்றின் பின் பக்கம் இடித்த விபத்தில் டொயோட்டா காரில் இருந்த மலேசியர் நால்வர் காயம் அடைந்தனர். 

இச்சம்பவம் ஜோகூரில் வெள்ளிக்கிழமை காலை 7.25 மணிக்கு நிகழ்ந்ததாக மலேசிய காவல்துறை தெரிவித்தது. 

வெள்ளை நிற ஃபெராரி காரை ஓட்டிவந்த சிங்கப்பூரரான 22 வயது ஆடவர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து டொயோட்டா கார் மீது இடித்துவிட்டதாக மூவார் மாவட்ட காவல்துறை தலைவர் ரியாஸ் முக்லிஷ் அஸ்மான் அஜிஸ் கூறினார். 

இதன் விளைவாக இரண்டு வாகனங்களும் சாலையின்  வலது பக்கம் சறுக்கி ஓடியதாக அந்த அதிகாரி கூறியதாக மலாய் நாளிதழ் கோஸ்மோ தெரிவித்தது. 

காயம் அடைந்த மலேசியர்களுக்கு வயது 50க்கும்  அதிகம் என்று அந்த அதிகாரி கூறினார்.

ஃபெராரி காரை ஓட்டிவந்தவர் காயம் அடைந்தாரா என்பது தெரியவில்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!