மலேசிய தேசிய கீதம் பாடத் தெரியாததால் அதிகாரிகளிடம் சிக்கிய பெண்

தன்னை மலேசியர் என்று குறிப்பிட்ட ஒரு பெண், மலேசியாவின் தேசிய கீதம் பாடத் தெரியாததால் குடிநுழைவு அதிகாரிகளிடம் சிக்கிக்கொண்டார்.

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த அந்தப் பெண், பினாங்கில் மலேசிய குடிநுழைவுத் துறை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்படுவதிலிருந்து தப்பிக்க, தாம் ஒரு மலேசியர் என்று குறிப்பிட்டார்.

ஜுரு டோல் பிளாசாவில் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில் சிக்கிய அந்த 21 வயதுப் பெண், தன்னுடைய அடையாள அட்டை அம்மாவிடம் இருப்பதாகவும் தனது அடையாள அட்டை எண் மறந்துபோனது எனவும் பல பொய்களைச் சொல்லி அதிகாரிகளைச் சரிக்கட்ட முயன்றார். மேலும் அல்மா பகுதியில் வசிப்பதாகவும் அங்குள்ள ஒரு பள்ளியில் படித்ததாகவும் அதிகாரிகளிடம் கூறிய அந்தப் பெண் ஆவணங்கள் எதையும் சமர்ப்பிக்கவில்லை.

தனது ஆண் நண்பருடன் நேற்று (நவம்பர் 19) காரில் பயணம் செய்த அந்தப் பெண் அதிகாரிகளின் விசாரணைக்குட்பட்டார். அவர்கள் பயணம் செய்த காரின் எண் அட்டை விதிமுறைகளுக்கு உட்படவில்லை என்பதால் அதிகாரிகள் அவர்களிடம் விசாரித்தனர்.

இறுதியில், அதிகாரிகள் அந்தப் பெண்ணை மலேசியாவின் தேசிய கீதம் பாடச் சொன்னதாகவும் அந்தப் பாடலைப் பாட இயலாத நிலையில் அவர் மலேசியர் இல்லை என்பது தெரிய வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், பினாங்கு குடிநுழைவு இயக்குநர் முகமது ஹுஸ்னி முஹ்முட் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கையில் இந்தியர்கள் இருவர், மியன்மார் நாட்டவர் மூவர், இந்தோனீசியப் பெண் ஒருவர் என அறுவர் தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறினார். 25 முதல் 40 வயதுக்குட்பட்ட அவர்களிடம் பயண ஆவணங்கள் இல்லை என்று கூறப்பட்டது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஏபெக் மாநாட்டுக்கு முன்பு பதவி மாற்றம் செய்யப்பட்டால் அது இடையூறாக இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், “ பதவியை ஒப்படைக்க நான் ஓர் உறுதியளித்துள்ளேன்; அதனைச் செய்வேன்,” என்றும் கூறியுள்ளார் திரு மகாதீர். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

10 Dec 2019

‘அடுத்த நவம்பருக்குப் பிறகு பதவியை அன்வாரிடம் ஒப்படைப்பேன்’

தமது வீட்டிற்கு அருகேயுள்ள ஒரு குடிசையில் தன்னைச் சிலர் சீரழித்ததைச் சைகை மொழியில் அவர் உணர்த்தினார். கோப்புப்படம்

10 Dec 2019

பாலியல் குற்றவாளிகளைச் சைகை மொழியில் அடையாளம் காட்டிய இளம்பெண்