மலேசியா: இன்று காலை நிலவரப்படி, கிளாந்தான் மாநில வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,621 குடும்பங்களிலிருந்து 5,636 நபர்களாக உயர்ந்தது.
நேற்று பிற்பகல் வரையிலும் 2,390 பேர் பாதிக்கப்பட்டதாக ஜேகேஎம் பேரிடர் தகவல் மையம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
இதனை முன்னிட்டு மொத்தம் 18 தற்காலிக நிவாரண மையங்கள் பாசிர் மாஸில் திறக்கப்பட்டுள்ளன.
கோலோக் ஆற்றின் அளவு 9 மீட்டர் ஆபத்து மட்டத்திற்கு அப்பால் 10.44 மீட்டராக உயர்ந்து வருவதை காட்டுகிறது. மற்ற முக்கிய ஆறுகளிலும் நீர் மட்டம் உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமையன்று பெல்க்ரா தெராதாக் பத்து எனும் இடத்தின் நீரில் மூழ்கியதாக அஞ்சப்பட்ட ஏழு வயது சிறுவன் இன்று காலை பாசிர் புத்தேயில் இறந்த நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டார்.