‘அன்வார் பிரதமராவதைத் தடுக்க சதித்திட்டம்’

மலேசியாவின் கெஅடிலான் கட்சித் தலைவரான அன்வார் இப்ராஹிம், நாட்டின் அடுத்த பிரதமராவதைத் தடுக்க சதி நடக்கிறது என்று திரு அன்வாரின் தனிச் செயலாளர் ஷுக்ரி சாட் கூறியுள்ளார்.

திரு அன்வாரின்மீது அவரிடம் வேலை பார்த்த முன்னாள் ஆராய்ச்சியாளரான முகம்மது யூசோஃப் ராவுத்தர், 26, சட்டபூர்வ அறிக்கை வழி பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியிருந்தார்.

செய்தியாளர் சந்திப்பு எங்கு நடக்கிறது என்ற விவரங்களை வெளியிடாமல் நேற்று யூசோஃப் கோலாலம்பூரிலிருந்து ஃபேஸ்புக்கின் நேரலை அம்சம் வழி தனது இந்தச் சட்டபூர்வ அறிக்கையை வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து திறக்கப்பட்ட புதிய ஃபேஸ்புக் பக்கம் ஒன்றில் செய்தியாளர்களுடன் யூசோஃப் நடத்திய சந்திப்பு, எட்டு நிமிடக் காணொளியாகப் பதிவேற்றம் செய்யப்பட்டது.

அதனையடுத்து அந்தக் காணொளி செய்தியாளர்களுடனும் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளது.

திரு அன்வார், பாலியல் செயல்களில் ஈடுபடத் தன்னை அவரின் அலுவலகத்திற்கு அழைத்ததாகவும் அவரின் அழைப்பைத் தான் மறுத்ததாகவும் யூசோஃப் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

தன்னுடைய பாதுகாப்புக்கு அஞ்சி இந்தச் சட்டபூர்வ அறிக்கையை விடுப்பதாகவும் யூசோஃப் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து திரு அன்வார் பாலியல் குற்றச்சாட்டை மறுத்தார்.

தம்மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு, ‘ஆதாரமற்ற அவதூறு’ என்று திரு அன்வார் தெரிவித்தார்.

யூசோஃப் குறிப்பிட்ட தேதிகளில் போர்ட் டிக்சன் இடைத் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் நினைவாக அனுசரிக்கப்பட்ட நிகழ்வு ஒன்றுக்காக கோலாலம்பூருக்குச் சென்றிருந்தாகவும் திரு அன்வார் கூறினார்.

“பிகேஆர் கட்சியின் 14வது தேசிய காங்கிரஸ் கூட்டத்திற்கு முன் என் பெயரைக் கெடுப்பதாக உள்ளது யூசோஃப்பின் செயல்,” என்றார் திரு அன்வார்.

இதைத் தொடர்ந்து இன்று ஷுக்ரி போலிசாரிடம் புகார் அளித்ததுடன் போலிஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

“தன் சட்டபூர்வ அறிக்கையில் முகம்மது யூசோஃப் ராவுத்தர் சுமத்தியிருந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நான் போலிஸ் புகார் செய்துள்ளேன்.

“இக்குற்றச்சாட்டுகள் ஜோடிக்கப்பட்டவை என்பது தெளிவாகத் தெரிகிறது. அத்துடன் இவை மீண்டும் மீண்டும் எழுகின்றன,” என்று ஷுக்ரி கூறினார்.

இதற்குமேல் இவ்விவகாரத்தைக் குறித்து போலிசார் தீவிர விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த விவகாரத்தை அற்பமான ஒன்றாக குறிப்பிட்ட ஷுக்ரி, “அதிகாரம் கைமாறும்போது அதைத் தடைசெய்ய ஏதோ சதித் திட்டம் நடக்கிறது,” என்றார்.

ஏழு நாட்களுக்குள் குற்றச்சாட்டை மீட்டுக்கொள்ள வேண்டும் என்றும் திரு அன்வாரின் வழக்கறிஞர் திரு ராம்கர்பால் சிங் உத்தரவு கடிதம் கொடுத்துள்ளார்.

இன்று மலாக்காவில் தொடங்கிய பிகேஆர் கட்சியின் வருடாந்திர மாநாடு ஞாயிற்றுக்கிழமை முடிவுறுகிறது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!