பண்டார் பாரு செண்டுல் பகுதியில் ஒரு கட்டுமானத் தளத்தில் இருந்த பாரந்தூக்கி ஒன்று கீழே விழுந்ததில் அதற்கு அருகில் இருந்த ஒரு வீடு, இரண்டு கடைகள் சேதமடைந்தன என்றும் அதன் காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது எனவும் செண்டுல் பகுதி துணை ஆணையர் ஷண்முகமூர்த்தி தெரிவித்தார்.
பாரந்தூக்கி விழுந்த வீட்டுக்குள் மூன்று மாதக் குழந்தை உட்பட நால்வர் இருந்ததாகக் கூறப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் குழந்தையின் காலில் முறிவு ஏற்பட்டதுடன் மேலும் இருவருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அனைவரும் தேறி வருவதாகவும் திரு ஷண்முகமூர்த்தி குறிப்பிட்டார்.
கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா என்பது பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity