சரவாக்கின் லிம்பாங் நகரில் உள்ள ஒரு வீட்டிலிருந்து வளர்ப்பு முதலைக் குட்டி ஒன்று மழை வெள்ளத்தில் ஊர்ந்து தப்பியதையடுத்து மலேசிய தீ மற்றும் மீட்புத் துறை அதிகாரிகளின் உதவி நாடப்பட்டது.
கடந்த சனிக்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் கம்போங் கிமோக்கில் உள்ள ஒரு வீட்டிலிருந்து முதலைக் குட்டி தப்பியதாக மலேசிய தீ மற்றும் மீட்புத் துறைக்குத் தகவல் கிடைத்தது.
தண்ணீர்த் தொட்டிக்குள் இருந்த முதலைக் குட்டி மழை வெள்ளத்தில் கலந்து அந்த வீட்டிலிருந்து தப்பி அருகில் இருந்த குட்டைக்குள் விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
குட்டைக்குள் விழுந்த முதலைக் குட்டி கோபத்துடன் சீறியதால் அதனை வளர்த்து வந்தவர் அதிகாரிகளின் உதவியை நாடினார்.
1.2 மீட்டர் நீளமுள்ள அந்த முதலைக் குட்டியை அதிகாரிகள் பிடித்தனர். அதனை மீண்டும் அதன் உரிமையாளரிடம் ஒப்படைப்பதற்குப் பதிலாக தங்களுடன் கொண்டு சென்றனர்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity