கோலாலம்பூர்: முன்னாள் காவல் துறை அதிகாரி அசிலா ஹாட்ரி திங்கட்கிழமை வெளியிட்ட திடீர் வாக்குமூலம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அல்தான்துன்யாவின் தந்தை செடிவ் ஷாரிபு, இது மலேசியா தனது பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை அழிக்க ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று சொன்னதாக மலேசியாகினி தெரிவித்துள்ளது.
“இது 13 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென எங்களை விட்டுப் பிரிந்த என் மகளுக்கு நீதி கோருவதற்கும் எனது குடும்பத்திற்கு உதவுவதற்கும் ஏதுவாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.
அல்தான்துன்யாவை கொலை செய்ய முன்னாள் பிரதமர் நஜிப் தன்னிடம் கூறியதாக நஜிப்பின் மெய்க்காப்பாளரான அசிலா நேற்று முன்தினம் கூறியிருந்தார்.