கோலாலம்பூர்: சாமிவேலுவின் மனநிலை பரிசோதனை வழக்கில் தாமும் இடம்பெறவேண்டும் முன்னாள் மஇகா தலைவர் சாமிவேலுவுடன் ‘சேர்ந்து வாழ்ந்தவர்’ என்று கூறப்படும் மரியம் ரோசலின் கோரியுள்ளார். அவரது பிரதான வழக்கு தொடர்பான முடிவு நிலுவையில் உள்ளதால், அவருக்கு மாதந்தோறும் கொடுக்கப்பட்டு வந்த 25,000 ரிங்கிட் பராமரிப்புத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று அவர் முன்னதாகக் கேட்டிருந்தார்.
தனது தந்தை மனநலம் பாதிக்கப்பட்டவரா, தனது சொந்த விவகாரங்களைக் கையாள முடியவில்லையா என்பதை தீர்மானிக்க கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சாமிவேலுவுக்கு எதிராக முதற்கட்ட வழக்கு தாக்கல் செய்ததை திங்களன்று வேள்பாரி உறுதிப்படுத்தினார்.