ஜோகூர் பாரு: ஜோகூர் மக்கள் வெள்ளத்தில் தத்தளித்துக்கொண்டு இருக்கும்போது முதலமைச்சர் ஷாருதீன் ஜமால் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டது ஏன் என்று முன்னாள் முதலமைச்சரும் அம்னோ துணைத் தலைவருமான முகம்மது காலித் நூர்தின் கேள்வி எழுப்பியுள்ளார்.
“இதுபோன்ற வேளைகளில் மாநில அரசாங்கமும் உள்ளூர் தலைவர்களும் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவிக்கரம் நீட்டவேண்டும். நிலைமையை தொடர்ந்து கண்காணித்து மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றனவா என்று கவனிக்கும் பொறுப்பு அரசாங்கத்தினுடையது.
“பணிகளை அரசாங்க ஊழியர்கள் அல்லது தொண்டூழியர்களிடம் விட்டுவிடுவதோ ஒப்புக்கு நிவாரண முகாம் களைச் சென்று பார்வையிடுவதோ சரியான கடமையாக இருக்காது.
“இப்படிப்பட்ட வேளையில் முதலமைச்சரின் எகிப்து பயணம் மாற்றி அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். எகிப்தில் நமது மாணவர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியை வேறொரு
தேதிக்குத் தள்ளிவைத்திருக்கலாம்,” என்று தமது அறிக்கையில் காலித் கூறியுள்ளார்.