கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இஸ்லாமிய மாநாடு நேற்று தொடங்கியது. மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது வரவேற்புரையாற்றினார்.
இஸ்லாமிய நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி மாநாட்டில் பேசப்படும் என்றார் அவர். மாநாட்டில் சவூதி அரேபியா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. ஏமனில் நிகழும் உள்நாட்டுப் போர், கத்தார் எதிர்கொள்ளும் முற்றுகை ஆகியவை மாநாட்டில் முக்கியத்துவம் பெறும் என நம்பப்படுகிறது. முஸ்லிம் நாடுகளுக்குள் நிகழும் உட்பூசல்கள் முஸ்லிம்களைப் பாதித்துள்ளதாக டாக்டர் மகாதீர் கூறினார்.