இந்தியக் குடியுரிமைச் சட்டம் குறித்து மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மதுவின் கருத்து தவறானது என்று இந்திய வெளியுறவு அமைச்சு நேற்று முன்தினம் தெரிவித்தது.
முன்னதாக, கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் மகாதீர், குடியுரிமைச் சட்டத்தைச் சுட்டிக்காட்டி, சமயச் சார்பற்ற நாடான இந்தியா, சில முஸ்லிம்
களின் குடியுரிமையைப் பறிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக குறைகூறினார்.
அவரின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் இந்திய வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், குடியுரிமை சட்டத் திருத்தத்தால் இந்திய குடிமக்கள் எவரும் பாதிக்கப்பட மாட்டார் என்றும் எந்தச் சமயத்தினரது குடியுரிமையும் பறிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாமென மலேசியாவை வலியுறுத்துவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய இந்தச் சட்டத் திருத்தம் இந்திய நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது.