பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் பண்டார் ஸ்ரீ டாமான்சாராவில் உள்ள துணி சலவை செய்யும் கடையில் காத்திருந்த இரு பெண்களிடம் முகமூடியணிந்த கொள்ளையர்கள் இருவர் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர்.
கையில் கம்புகளுடன் அந்தக் கடைக்குள் நுழைந்த கொள்ளையர்கள் அவ்விரு பெண்களின் கைப்பைகளை அபகரித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடி விட்டதாகக் கூறப் படுகிறது.
அந்தக் கடையில் இருந்த கண்காணி்ப்பு கேமரா மூலம் கொள்ளையர்களை அடையாளம் கண்டுகொண்டதாகவும் அவர்களைத் தேடி வருவதாகவும் பெட்டாலிங் ஜெயா போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
மேலும் களவுபோன சில ஆவணங்கள், 6 கைத்தொலைபேசிகள், வீட்டுச்சாவிகள் 200 ரிங்கிட் ரொக்கம் தொடர்பிலும் அவ்விரு கொள்ளையர்களைத் தேடி வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.