கோலாலம்பூர்: நாம் ஒவ்வொருவரும் நமது தனிப்பட்ட வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்று தீர்மானம் எடுத்துக்கொண்டு பாடுபடுவோம். நமது முன்னேற்றம்தான் நாட்டின் முன்னேற்றம். நாம் ஒவ்வொருவரும் பெறும் வெற்றிதான் மலேசியாவின் வெற்றிக்கு நாம் அளிக்கும் பங்காகும். அதே வேளையில் நாட்டின் வெற்றியில் நாம் அனைவரும் பயனடைவோம் என்று மலேசியப் பிரதமர் கூறியுள்ளார். கிட்டத்தட்ட 80,000 பேர் முன்னிலையில் உரையாற்றிய அவர், நமது புத்தாண்டுத் தீர்மானம் கடினமாகவும் சிக்கலானதாகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை. தனிப்பட்ட முறையில் நாம் அனைவரும் முன்னேற்றத்தை எட்டிப் பிடிப்பதற்கு உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் மலேசிய மக்களிடம் கேட்டுக்கொண்டார். 2019ல் மக்கள் பல பிரச்சினைகள் குறித்து மனநிறைவற்ற நிலையில் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
அரசாங்கம் மக்கள் மனநிறைவு அடையும் வகையில் அவர்களுடைய பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வுகாணும். அத்துடன் மலேசியாவின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடரும் என்றார். அம்பாங்2020@கோலாலம்பூர் என்னும் நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.