கோலாலம்பூர்: மலேசியாவில் தாய்மொழிப் பள்ளிகளில் ஜாவி எழுத்து அடுத்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்படும் என்ற அறிவிப்புக்கு சீனக் கல்விக் குழுவான டொங் சொங், தமிழ் அமைப்புகள் அண்மையில் எதிர்ப்புத் தெரிவித்தன.
இந்நிலையில் அந்த அமைப்புகளின் பேராளர்கள் மலேசிய கல்வி அமைச்சின் துணை இயக்குநர் டாக்டர் ஹபிபா அப்துல் ரஹிமை நேற்று சந்தித்துப் பேசினர். இதில் 20 குழுக்களின் பேராளர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் அங்கிருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது.