கோலாலம்பூர்: சிரம்பானைச் சேர்ந்த 286 கிலோ எடை கொண்ட 38 வயது ஆடவர் ஒருவர் கூடுதல் எடையால் அவதிப்பட்டு வருகிறார். துங்கு ஜஃபார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவரை ஒரு வாரத்திற்குப் பின்னர் அவரது வீட்டுக்கு அனுப்பிவைக்க அந்த மருத்துவமனை தீயணைப்புப் படையின் உதவியை நாடியது. அதனைத் தொடர்ந்து அந்த மருத்துவமனைக்குச் சென்ற தீயணைப்பாளர்கள் அந்த மலேசியரை வெளியில் கொண்டுவர சிரமப்பட்டதாகவும் அதற்கு அவர்களுக்கு வெகு நேரம் பிடித்ததாகவும் அந்த அதிகாரி கூறினார். அந்த மலேசியரை சனிக்கிழமை இரவு மருத்துவமனையிலிருந்து வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிக்கு கொண்டுவர தீயணைப்புப் படை வீரர்கள் 15 பேர் மிகவும் சிரமப்பட்டதாக மருத்துவமனை உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
அந்த மலேசியருக்கு இதற்கு முன்பும் இதுபோன்ற உதவி பல முறை தேவைப்பட்டதாகக் கூறப்பட்டது.