புத்ரா ஜெயா: மஸ்லீ மாலிக் பதவி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் சிறப்பு சந்திப்பு ஒன்றை மகாதீர் நடத்தியதாகவும் இடைக்காலக் கல்வி அமைச்சராக அவர் பதவி வகிப்பார் என்றும் பெர்சாத்து கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
2018இல் நம்பிக்கை கூட்டணி வெற்றி பெற்றவுடன் பிரதமராக பதவி வகித்தாலும் கல்வி அமைச்சராகவும் பணிபுரிந்து சில திட்டங்களைக் கொண்டுவர விரும்புவதாகவும் மகாதீர் அப்போதே கூறியிருந்தார்.
கல்வி அமைச்சரை மட்டும் தற்போதைக்கு நியமிக்காமல் முழுமையான அமைச்சரவை மாற்றத்திற்கு மகாதீர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.